Latest Updates
-
குரு-சூரிய சேர்க்கையால் உருவான மகாலட்சுமி ராஜயோகம்: ஆடியில் இந்த 3 ராசிக்கு கையில் பணம் குவியும்! -
புதன்-செவ்வாய் உருவாக்கும் தசாங்க யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சப்பாத்திக்கு ஏற்ற காளான் பன்னீர் கடாய் மசாலா - சிம்பிளா எப்படி செய்யணும்? -
ஆடி மாதம் இந்த 3 ராசிகளுக்கு ஆபத்துகளும், நஷ்டமும் நிறைந்த மாதமாக இருக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 5 ராசிக்காரர்களுக்கு எதிரிகள் அதிகமா இருப்பாங்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உடுப்பி ஸ்டைல் முள்ளங்கி ஸ்டைல் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட்டா ஆரோக்கியமா இருக்கும் -
குதிகால் வெடிப்பு அதிகமாக உள்ளதா? அதை போக்க இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க... -
இந்த 3 நபர்கள் ஒருவர் வாழ்க்கையில் இருந்தால் அவர்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் - சாணக்கிய தந்திரம் -
சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வையால் ஆடி மாதத்தில் பணத்தை அள்ளப்போகும் 5 ராசிக்காரர்கள்! -
ஜூலை கடைசியில் நடக்கும் சனி-புதன் பெயர்ச்சியால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன?
மட்டன் வாங்குனா.. ஒருடைம் இந்த செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்..
Chettinad Style Mutton Chukka Recipe In Tamil: இந்த வார இறுதியில் உங்கள் வீட்டில் மட்டன் எடுக்கப் போகிறீர்களா? அந்த மட்டனைக் கொண்டு சிம்பிளாக சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்காவை செய்து, ரசம் வைத்துவிடுங்கள். இந்த காம்பினேஷனை மதிய வேளையில் செய்தால், சமையல் டக்கென்று முடியும். அதோடு சுவையும் பிரமாதமாக இருக்கும். முக்கியமாக இந்த மட்டன் சுக்காவை சற்று நீருடன் இருக்கும் போதே இறக்கினால், சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம். செட்டிநாடு மட்டன் சுக்காவின் ஸ்பெஷலே அதில் வறுத்து சேர்க்கப்படும் மசாலா தான்.

இந்த செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா ரெசிபியை அபூர்வாஸ் நலபாகம் என்னும் யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு..
* மட்டன் - 1/2 கிலோ
* தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1/2 டம்ளர்
வறுத்து பொடிப்பதற்கு...
* மல்லி - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 6
சுக்காவிற்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 4
* அன்னாசிப்பூ - 1
* மராட்டி மொக்கு - 2
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 150 கிராம் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1/2 கிலோ மட்டனை எடுத்து, அத்துடன்
தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், மஞ்சள் தூள், சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து பிரட்டி, மூடி வைத்து 1 மணிநேரம் ஊற வைக்க
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மல்லி, மிளகு, சோம்பு,
சீரகம், வரமிளகாய் சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைத்து,
மிக்சர் ஜாரில் சேர்த்து நன்கு பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் மட்டனை சேர்த்து, 1/2
டம்ளர் நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, மராட்டி மொக்கு,
சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து,
அத்துடன் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பின்னர் அதில் பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து ஒருமுறை கிளறி,
குக்கரில் வேக வைத்துள்ள மட்டனை நீருடன் அப்படியே சேர்த்து கிளறி,
மிதமான தீயில் வைத்து, அவ்வப்போது கிளறி விட்டு, நீர் ஓரளவு வற்றும்
வரை நன்கு வேக வைத்து, நீர் ஓரளவு வற்றியதும், கொத்தமல்லியைத் தூவி
கிளறி இறக்கினால், சுவையான செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா
தயார்.



Click it and Unblock the Notifications