Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
ஹோட்டல் சன்னா குருமா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Hotel Style Channa Kurma In Tamil: உங்கள் வீட்டில் சப்பாத்தி, பூரி அடிக்கடி செய்வீர்களா? அதற்கு உங்கள் வீட்டில் உள்ளோர் சன்னா செய்ய சொல்கிறார்களா? நீங்கள் எப்போது சன்னா செய்வதாக இருந்தாலும் ஒரே சுவையில் தான் செய்வீர்களா?
அப்படியானால் அடுத்த முறை ஹோட்டல் ஸ்டைல் சன்னா குருமாவை செய்யுங்கள். இப்படி குருமா செய்யும் போது, அது சப்பாத்தி, பூரியுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். ஒருமுறை இப்படி குருமா செய்தால், பின் அடிக்கடி செய்ய சொல்லி கேட்பார்கள்.

உங்களுக்கு ஹோட்டல் ஸ்டைல் சன்னா குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹோட்டல் ஸ்டைல் சன்னா குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* கொண்டைக்கடலை - 3/4 கப்
* உருளைக்கிழங்கு - 3
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சிறிது
குருமா தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 2
* கல்பாசி - சிறிது
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* கறி மசாலா தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* சுடு தண்ணீர் - தேவையான அளவு
* கசூரி மெத்தி - சிறிது
* கரம் மசாலா/சிக்கன் மசாலா/மட்டன் மசாலா - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* புதினா - சிறிது
தேங்காய் விழுதிற்கு...
* தேங்காய் - சின்ன மூடி (துருவியது)
* முந்திரி - 7
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
செய்முறை:
* முதலில் கொண்டைக்கடலையை நீரில் குறைந்தது 8 மணிநேரம் ஊற வைக்க
வேண்டும்.
* பின் ஊற வைத்த கொண்டைக்கடலையை கழுவி குக்கரில் போட்டு, அத்துடன்
உருளைக்கிழங்கை சேர்த்து, கொண்டைக்கடலை மூழ்கும் அளவில் நீரை ஊற்றி,
சிறிது உப்பு சேர்த்து குக்கரை மூடி, அடுப்பில் வைத்து, 4-5 விசில்
விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, உருளைகிழங்குகளை எடுத்து,
அவற்றின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், முந்திரி, சோம்பு
சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி, பிரியாணி இலை,
சோம்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு தூவி, நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தக்காளியை சேர்த்து,
தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் கறி மசாலா தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித்
தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் வேக வைத்த கொண்டைக்கடலையை நீருடன் அப்படியே ஊற்றி,
துண்டுகளாக்கப்பட்ட உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி, கசூரி மெத்தி
மற்றும் கரம் மசாலாவை சேர்த்து கிளறி, 5 நிமிடம் நன்கு எண்ணெய்
பிரியும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து,
தேவையான அளவு சுடுநீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 4 நிமிடம் கொதிக்க
வைக்க வேண்டும்.
* பிறகு அதில் கொத்தமல்லி மற்றும் புதினாவை சேர்த்து கிளறி
இறக்கினால், சுவையான சன்னா குருமா தயார்.



Click it and Unblock the Notifications











