Latest Updates
-
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் சொந்த ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு முன்னேற்றதிக்கான கதவு திறக்கும் நாளாக இருக்குமாம்
சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும் காலிஃப்ளவர் குருமா!
உங்கள் வீட்டில் காலிஃப்ளவர் உள்ளதா? வீட்டில் உள்ளோர் காலிஃப்ளவரை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் அந்த காலிஃப்ளவரைக் கொண்டு குருமா செய்யுங்கள். இந்த குருமா சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும்.
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிருந்தால், அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசிக்கலாம். உங்கள் வீட்டில் காலிஃப்ளவர் உள்ளதா? வீட்டில் உள்ளோர் காலிஃப்ளவரை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் அந்த காலிஃப்ளவரைக் கொண்டு குருமா செய்யுங்கள். இந்த குருமா சப்பாத்திக்கு மட்டுமின்றி, புலாவ் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். குறிப்பாக இந்த காலிஃப்ளவர் குருமா பேச்சுலர்கள் செய்யும் வகையில் ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு காலிஃப்ளவர் குருமா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காலிஃப்ளவர் குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* காலிஃப்ளவர் - 2 கப்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 சிறிய துண்டு
* சீரகம் - 1 டீஸ்பூன்
* ஏலக்காய் - 3
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* தேங்காய் பால் - 1 கப்
* சோள மாவு - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் காலிஃப்ளவரை கொதிக்கும் நீரில் போட்டு, அந்நீரில் சிறிது உப்பு சேர்த்து ஒரு 2 நிமிடம் வேக வைத்து இறக்கி, நீரை வடிகட்டிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, ஏலக்காய் மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு, சிறிது உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் தக்காளியைப் போட்டு நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் காலிஃப்ளவரைப் போட்டு நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் தேங்காய் பாலை ஊற்றி குறைவான தீயில் வைத்து 15 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு அதில் சோள மாவை நீரில் கரைத்து ஊற்றி, குழம்பு கெட்டியாக ஆரம்பிக்கும் போது, மேலே கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான காலிஃப்ளவர் குருமா தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
