Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
நைட் சப்பாத்திக்கு முட்டைக்கோஸ் வெச்சு இப்படி குருமா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்...
Cabbage Kurma Recipe In Tamil: இரவு நேரத்தில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் சப்பாத்தி தான் செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு ஒரே மாதிரியான சைடு டிஷ்ஷை செய்து போரடித்துவிட்டதா? அவ்வப்போது வித்தியாசமான சுவையுடைய சைடு டிஷ்ஷை செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் ஒருமுறை முட்டைக்கோஸ் குருமாவை செய்யுங்கள்.
இந்த முட்டைக்கோஸ் குருமா சப்பாத்தியுடன் மட்டுமின்றி, இட்லி, தோசையுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும். முக்கியமாக இப்படி குருமா செய்யும் போது, அதில் முட்டைக்கோஸின் எந்த வாசனையும் வராது என்பதால் முட்டைக்கோஸ் பிடிக்காதவர்களும் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு முட்டைக்கோஸ் குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டைக்கோஸ் குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மசாலாவிற்கு...
* தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 இன்ச்
* கிராம்பு - 3
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பொட்டுக்கடலை - 3 ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* முட்டைக்கோஸ் - 350 கிராம் (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் தேங்காய், பட்டை, கிராம்பு, சோம்பு,
பொட்டுக்கடலை, பச்சை மிளகாய் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, இஞ்சி பூண்டு
விழுதையும் சேர்த்து, நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, உப்பு தூவி,
தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து,
குறைவான தீயில் வைத்து, பச்சை வாசனை போக கிளறி விட்டு வேக வைக்க
வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸை சேர்த்து, 2 நிமிடம்
நன்கு கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் குருமாவிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, நீர்
கொதிக்க ஆரம்பித்ததும், அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, உப்பு
சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பு தூவி கிளறி, குக்கரை மூடி 3 விசில்
விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும், குக்கரை திறந்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லியைத்
தூவி கிளறினால், சுவையான முட்டைக்கோஸ் குருமா தயார்.



Click it and Unblock the Notifications