Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
சூப்பரான முட்டைக்கோஸ் தோசை ரெசிபி... டின்னருக்கு செஞ்சு பாருங்க... எல்லோரும் 2 தோசை அதிகமா சாப்பிடுவாங்க...!
Cabbage Dosa Recipe in Tamil: தோசை என்பது சில நூற்றாண்டுகளாக நமது பிரதான உணவாக இருந்து வருகிறது. பெரும்பாலான தென்னிந்தியர்களால் தோசை இல்லாமல் வாழவே முடியாது. தினமும் காலை அல்லது மாலை ஒரு முறையாவது தோசை சாப்பிடுவது நமது வழக்கமாக மாறிவிட்டது. அரிசி மாவு தோசை சாப்பிடுவது சுவையானதாக இருந்தாலும் அதனால் பெரிய அளவில் எந்த நன்மைகளும் கிடைப்பதில்லை.
ஒரே மாதிரியாக தோசை சாப்பிடாமல் அதனுடன் வேறு பொருட்களை சேர்த்து தோசை சுடுவது அதன் சுவையை அதிகரிப்பதுடன் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும். சில காய்கறிகளை சேர்த்து தோசை மாவுடன் சேர்த்து தோசை சுடுவது அதனால் கிடைக்கும் நன்மைகளை அதிகரிக்கும். அந்த வகையில் முட்டைக்கோஸை வித்தியாசமான வழியில் சேர்த்து மாவுடன் சேர்த்து முட்டைக்கோஸ் தோசை செய்யலாம். இந்த பதிவில் சுவையான முட்டைக்கோஸ் தோசையை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- 1 பெரிய கப் தோசை மாவு
- எண்ணெய் தேவையான அளவு
- அரை கப் துருவிய முட்டைக்கோஸ்
- 5 வர மிளகாய்
- 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
- 1 தக்காளி பொடியாக நறுக்கியது
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் கரம் மசாலா
- 1 ஸ்பூன் மல்லித்தூள்
- 1 ஸ்பூன் உளுந்தம் பருப்பு
- உப்பு தேவையான அளவு
- 1 கைப்பிடி கொத்தமல்லி
செய்முறை:
- முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் உளுந்தம் பருப்பு மற்றும் வர மிளகாய் சேர்த்து நன்கு வறுக்கவும்.
- அதன் பின் இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின் இதனுடன் நறுக்கிய தக்காளி தக்காளியை சேர்த்து வதக்கி கொள்ளவும். .
- பின் தக்காளி நன்கு மசிந்து வந்ததும் அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, மல்லி தூள் போன்ற பொருட்களை சேர்த்து கிளறவும். .
- பின் மசாலா பொருட்கள் நன்கு வதங்கி வந்தவுடன் இதனுடன் துருவிய முட்டைகோஸ், உப்பு மற்றும் கொத்தமல்லி, சேர்த்து வதக்கவும். பின் முட்டைக்கோஸ் நன்கு மென்மையாக வதங்கி வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
- பின் வதக்கிய பொருட்கள் நன்கு குளிர்ந்தவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கெட்டியான பதத்திற்கு அரைத்தால் முட்டைக்கோஸ் மசலா தயார்
- பின் தோசை கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும் எண்ணெய் தேய்த்து, தோசை மாவை மெல்லியதாக ஊற்றி, முட்டைகோஸ் மசாலாவை அதன்மேல் தடவி தோசையை வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
- இல்லையெனில் இந்த மசாலாவை தோசை மாவுடன் கலந்தும் தோசையாக ஊற்றலாம்.
- சூப்பரான் முட்டைக்கோஸ் தோசை ரெடி!



Click it and Unblock the Notifications