Latest Updates
-
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க. -
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்! -
செரிமான பிரச்சனைக்கு குட்-பை சொல்லும் புதினா வெற்றிலை ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
கொத்தமல்லி பருப்பு கடையல் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சனி பகவானின் நட்சத்திரம் செல்லும் செவ்வாய்: செப்டம்பர் இறுதியில் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சொந்த கரன்சி, சொந்த ஏர்போர்ட் கூட இல்லாத உலகின் பணக்கார நாடு - இந்த நாட்ல ஒரு போலீஸ் ஸ்டேஷன்தான் இருக்காம்
குழந்தைகளையும் விரும்பி சாப்பிடத் தூண்டும் பட்டன் இட்லி ரெசிபி... எப்படி செய்யுறதுனு தெரிஞ்சிக்கோங்க...!
Button Idli Recipe in Tamil: உலகின் ஆகச்சிறந்த காலை உணவு எதுவென்றால் அது இட்லிதான். ஏனெனில் நீராவியில் வேகவைத்து சாப்பிடும் இந்த உணவானது எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாமல் எளிதில் செரிமானம் அடையக்கூடியது. அதனால்தான் காலம் காலமாக நம்முடைய பிரதான உணவாக இட்லி இருக்கிறது, மருத்துவர்களும் இதைத்தான் பரிந்துரைக்கிறார்கள்.
இட்லி ஆரோக்கியமானதாக இருந்தாலும் நீண்ட காலம் ஒரே மாதிரியான இட்லி சாப்பிடுவது நிச்சயம் சலிப்பை ஏற்படுத்தும். இந்த நிலையில் புதுவகையான இட்லிகள் சமைத்து சாப்பிடுவது உணவின் அனுபவத்தை மேம்படுத்தும். அந்த புதுவகையான இட்லிகளில் ஒன்றுதான் பட்டன் இட்லி.

அளவில் சிறியதாக இருக்கும் இந்த இட்லி பார்ப்பதற்கு அழகாக இருப்பதுடன் சுவையானதாகவும் இருக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும். இந்த பதிவில் சூப்பரா பட்டன் இட்லியை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
அவல் - ஒரு கப்
ரவை - 1 கப்
தயிர் - ¼ கப்
கருவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
வரமிளகாய் - 5
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - ¼ டீ ஸ்பூன்
சீரகம் - ¼ டீ ஸ்பூன்
எள்ளு - ¼ டீ ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - ¼ டீ ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் அவலை போட்டு இரண்டு மூன்று முறை தண்ணீர்
சேர்த்து நன்றாக அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.
- சிவப்பு அல்லது வெள்ளை அவல் எது வேண்டுமானாலும் சேர்த்து
கொள்ளலாம்.
- பின் அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து ரவை சேர்த்து மிதமான தீயில் சூடாகும்
வரை வறுத்து கொள்ளவும்.
- அதனுடன் தயிரை சேர்த்து நன்றாக 10 நிமிடங்களுக்கு ஊற விடவும்.
- அதே வாணலியில் வரமிளகாயை சேர்த்து வறுத்து ஆற வைக்கவும்.
- மிக்ஸி ஜாரில் வரமிளகாய் சேர்த்து நன்றாக அரைத்து சில்லி பிளேக்ஸ்
எடுத்து கொள்ளவும்.
- கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- தயிரில் ஊற வைத்த ரவையுடன் ஊறவைத்த ரவையை தண்ணீர் வடித்து சேர்த்து
கொள்ளவும்.
- அதனுடன் அரைத்து வைத்த வரமிளகாய், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி,
மற்றும் கருவேப்பிலை சேர்க்கவும்.
- தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
- பின் இட்லி போல் சிறிது சிறிதாக உருட்டி இட்லி பாத்திரத்தில்
சேர்த்து நன்றாக வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
- பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய்
சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கடுகு மற்றும் சீரகம் சேர்த்து பொரிய
விடவும்.
- பொரிந்ததும் அதனுடன் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக
வறுக்கவும்.
- அதனுடன் எள்ளு மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்றாக வறுக்கவும்.
- பின் அதில் வேக வைத்த இட்லிகளை சேர்த்து கிளறினால் சுவையான பட்டன்
இட்லி ரெடி!
- உங்கள் விருப்பதிற்கேற்ப கருவேப்பிலை சேர்த்த பின் நறுக்கிய
வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதங்கியதும் இட்லி சேர்த்து கிளறி
கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications
