Latest Updates
-
Dengue: அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. எச்சரிக்கும் டாக்டர்! -
கொங்கணி ஸ்டைல் காராமணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குடிமகன் ஒவ்வொருவரும் 9 கோடி சம்பாதிக்கும் உலகின் பணக்கார நாடு எது தெரியுமா? அமெரிக்கா இல்லை -
செப்டம்பர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்வில் பிரகாசத்தை கொண்டு வரப்போகுது! -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கை இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழப்போகுதாம் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க..
கத்திரிக்காய் பஜ்ஜி
பொதுவாக உருளைக்கிழங்கு, வெங்காயத்தைக் கொண்டு தான் பலர் பஜ்ஜி செய்து சாப்பிடுவோம். ஆனால் சற்று வித்தியாசமாக ஒரு பஜ்ஜியை செய்ய நினைத்தால், வீட்டில் உள்ள பிற காய்கறிகளையும் கொண்டு பஜ்ஜி செய்யலாம்.
மழைப் பெய்யும் போது நன்கு சூடாகவும், காரமாகவும் சாப்பிட பலருக்கும் தோன்றும். அப்படி தோன்றும் போது பெரும்பாலானோர் சாப்பிட விரும்புவது பஜ்ஜியைத் தான். பொதுவாக உருளைக்கிழங்கு, வெங்காயத்தைக் கொண்டு தான் பலர் பஜ்ஜி செய்து சாப்பிடுவோம். ஆனால் சற்று வித்தியாசமாக ஒரு பஜ்ஜியை செய்ய நினைத்தால், வீட்டில் உள்ள பிற காய்கறிகளையும் கொண்டு பஜ்ஜி செய்யலாம். அதிலும் கத்திரிக்காய் கொண்டு பஜ்ஜி செய்து சாப்பிடலாம் என்பது தெரியுமா?

கீழே கத்திரிக்காய் பஜ்ஜி எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
MOST READ: மும்பை ரோட்டுக்கடை மசாலா பாவ்
தேவையான பொருட்கள்:
* கத்திரிக்காய் - 2
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
பஜ்ஜி மாவிற்கு...
* கடலை மாவு - 1 கப்
* அரிசி மாவு - 1/4 கப்
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* பேக்கிங் சோடா - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, பெருங்காயத் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், பேக்கிங் சோடா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, நீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு கத்திரிக்காயை நீள வாக்கிலோ அல்லது வட்ட வடிவிலோ வெட்டிக் கொள்ளுங்கள்.
* அதன் பின் நறுக்கிய கத்திரிக்காயை பஜ்ஜி மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான கத்திரிக்காய் பஜ்ஜி தயார்.



Click it and Unblock the Notifications