Latest Updates
-
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
4 பிரட் இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. வேற லெவல்-ல இருக்கும்...
Bread Podimas Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் எப்போதும் இட்லி, தோசை தான் காலை டிபனாக இருக்குமா? இப்படி இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான, அதே சமயம் ருசியான ஒரு காலை டிபனை செய்ய வேண்டுமா? உங்கள் வீட்டில் பிரட் உள்ளதா? பொதுவாக பிரட் இருந்தால், அதை டோஸ்ட் செய்தோ அல்லது சாண்விட்ச் போன்று செய்தோ தான் சாப்பிடுவோம்.
ஆனால் இனிமேல் அப்படி செய்து சாப்பிடாமல், அதை உதிர்த்து போட்டு பொடிமாஸ் போன்று செய்து சாப்பிடுங்கள். இப்படி பிரட் கொண்டு பொடிமாஸ் செய்யும் போது, சுவை மிகவும் பிரமாதமாக இருக்கும். இந்த பிரட் பொடிமாஸ் பேச்சுலர்களுக்கு ஏற்ற மிகச்சிறந்த ஈஸியான ரெசிபி. வேலை செல்பவர்கள் இந்த ரெசிபியை தெரிந்து வைத்துக் கொண்டால், அவசரத்திற்கு கைக்கொடுக்கும்.

முக்கியமாக இந்த பிரட் பொடிமாஸை காலை உணவாக மட்டுமின்றி, மாலை நேர ஸ்நாக்ஸாகவும் செய்து சாப்பிடலாம். இந்த ரெசிபியின் சுவையை இன்னும் அதிகரிக்க விரும்பினால், முட்டையை தனியாக ஒரு வாணலியில் உடைத்து ஊற்றி, சிறிது உப்பு தூவி வதக்கி, பின் அதை பிரட் பொடிமாஸ் மேல் தூவி கிளறி சாப்பிட்டால், இன்னும் டக்கராக இருக்கும்.
உங்களுக்கு பிரட் பொடிமாஸை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பிரட் பொடிமாஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பிரட் - 4
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* சிக்கன் மசாலா - 3/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் கடலைப் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பை சேர்த்து
குறைவான தீயில் வைத்து வறுக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் 1 கொத்து கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, உடனே அத்துடன்
மஞ்சள் தூள், சிக்கன் மசாலா, சுவைக்கேற்ப உப்புமற்றும் கொத்தமல்லி
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பிரட் துண்டுகளை எடுத்து கைகளால் உதிர்த்து விட
வேண்டும்.
* அதன் பின் அதில் சிறிது நீரை தெளித்து 1 நிமிடம் வதக்க
வேண்டும்.
* இறுதியாக அதில் மிளகுத் தூள் மற்றும் சிறிது கொத்தமல்லியைத் தூவி
கிளறி இறக்கினால், சுவையான பிரட் பொடிமாஸ் தயார்.



Click it and Unblock the Notifications