Latest Updates
-
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
முட்டையும், பிரட்டும் இருந்தா.. ஒருவாட்டி இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அல்டிமேட்டா இருக்கும்...
Tea Kadai Style Bread Omelette Recipe In Tamil: தினமும் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று சிம்பிளாகவும், அதே சமயம் சுவையாகவும் ஒரு காலை உணவை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் முட்டையும், பிரட்டும் உள்ளதா? அப்படியானால் அந்த இரண்டையும் கொண்டு பிரட் ஆம்லெட் செய்து சாப்பிடுங்கள்.
அதுவும் அந்த பிரட் ஆம்லெட்டிற்கு க்ரீன் சட்னியையும், மயோனைஸையும் வீட்டிலேயே தயாரித்து செய்தால், சுவை பிரமாதமாக இருப்பதோடு, ஆரோக்கியமானதும் கூட. உங்கள் பிள்ளைகள் தினமும் ஒரே மாதிரியான காலை உணவை சாப்பிட்டு, வரவர குறைவாக சாப்பிடுகிறார்களா? அப்படியானால் ஒருமுறை பிரட் ஆம்லெட்டை காலை டிபனாக செய்து கொடுங்கள். இதனால் நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு பிரட் ஆம்லெட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பிரட் ஆம்லெட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
க்ரீன் சட்னிக்கு...
* பொட்டுக்கடலை - 3 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 2 பல்
* இஞ்சி - சின்ன துண்டு
* பச்சை மிளகாய் - 5
* புதினா - 1/4 கட்டு
* கொத்தமல்லி - 1 கட்டு
* எலுமிச்சை - பாதி
* உப்பு - சுவைக்கேற்ப
மயோனைஸிற்கு...
* முட்டை - 1
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
* உப்பு - 2 சிட்டிகை
* எலுமிச்சை - பாதி
* ரீஃபைன்டு ஆயில் - 60 மிலி
பிரட் ஆம்லெட்டிற்கு..
* முட்டை - 2
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - 2 சிட்டிகை
* பிரட் - 2 துண்டுகள்
* எண்ணெய் - சிறிது
செய்முறை:
* முதலில் க்ரீன் சட்னிக்கு மிக்சர் ஜாரில் பொட்டுக்கடலை, பூண்டு,
இஞ்சி, பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி மற்றும் பாதி எலுமிச்சையின்
சாற்றினை சேர்த்து, நீர் சேர்க்காமல் நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* இந்த க்ரீன் சட்னியை 1 வாரம் வரை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து
பயன்படுத்தலாம்.
* பின்பு மயோனைஸிற்கு, மிக்சர் ஜாரில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி,
அத்துடன் 1 டீஸ்பூன் சர்க்கரை, 2 சிட்டிகை உப்பு, பாதி எலுமிச்சையின்
சாற்றினை சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக 60 மிலி ரீஃபைன்டு ஆயில் எண்ணெய்
ஊற்றி, விட்டு விட்டு நன்கு அடிக்க வேண்டும். அப்படி அடிக்கும் போது
ஒரு கட்டத்தில் க்ரீம் போன்ற பதத்தில் மனோனைஸ் தயாராகும்.
* அடுத்து ஒரு பௌலில் 2 முட்டைகளை உடைத்து ஊற்றி, அதில் 1 சிட்டிகை
மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் மிளகுத் தூள், 2 சிட்டிகை உப்பு சேர்த்து
நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், அதில்
எண்ணெய் தடவி அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி பரப்ப வேண்டும்.
* பின் அதன் மேல் இரண்டு பிரட் துண்டுகளை வைத்து, ஒரு பிரட் துண்டின்
மேல் க்ரீன் சட்னியையும், மற்றொரு பிரட் துண்டின் மேல் மயோனைஸையும்
தடவி, முட்டையை அப்படியே மடித்து விட்டு எடுத்தால், சுவையான டீ கடை
ஸ்டைல் பிரட் ஆம்லெட் தயார்.



Click it and Unblock the Notifications