Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
வீட்ல 4 பிரெட் இருந்தா இந்த மாதிரி மஞ்சூரியன் பண்ணுங்க... டேஸ்ட் ஹோட்டலில் சாப்பிடுற மாதிரியே இருக்கும்...!
Bread Manchurian Recipe in Tamil: மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் மற்றும் வீட்டில் உள்ளவர்களுக்கு வாய்க்கு ருசியாக ஏதாவது வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் இருப்போருக்கு மஞ்சூரியன் என்றால் பிடிக்குமா? எப்போதும் கடைகளில் தான் மஞ்சூரியனை வாங்கி சாப்பிடுவீர்களா? ஒருமுறை ஈஸியான இந்த பிரெட் மஞ்சூரியனை வீட்டிலேயே முயற்சித்துப் பாருங்கள்.
இந்த பிரெட் மஞ்சூரியன் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். மழை பெய்யும் போது இப்படியான மஞ்சூரியனை செய்து சாப்பிட்டால் இந்த குளிரான சூழலுக்கு இன்னும் பிரமாதமாக இருக்கும்.

உங்களுக்கு பிரெட் மஞ்சூரியனை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பிரெட் மஞ்சூரியனின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- பிரெட் துண்டுகள் - 4
- தக்காளி - 2
- வெங்காயம் - 2
- சோள மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்
- பச்சைமிளகாய் - 2
- குடை மிளகாய் - 1
- வெங்காயத்தாள் - சிறிதளவு
- மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன்
- மைதா - ஒரு டேபிள் ஸ்பூன்
- கடுகு - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - சிறிதளவு
- சோயா சாஸ் - 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
- சோள மாவு, மைதா மாவுடன் சிறிது உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
- பிரெட் துண்டுகளை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி, மாவில் நனைத்து, சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து வைத்துக்கொள்ளுங்கள்.
- தக்காளியை மிக்சியில் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
- வெங்காயத்தாள், வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- குடை மிளகாயை பெரிய பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு போட்டு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், குடைமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
- வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியதும் தக்காளி சாறு ஊற்றி உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், சோயா சாஸ் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
- இந்தக் கலவை நன்றாக கொதித்து வெந்ததும் பொரித்த பிரெட் துண்டுகளைப் போட்டுக் கிளறுங்கள்.
- கடைசியாக கொத்தமல்லித்தழை, வெங்காயத்தாள் தூவி இறக்கினால் சுவையான பிரெட் மஞ்சூரியன் ரெடி!



Click it and Unblock the Notifications