Latest Updates
-
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க..
2 முட்டையும், 5 பிரட்டும் இருந்தா.. காலையில் ஒருமுறை இந்த டிபனை செஞ்சு பாருங்க... அடிக்கடி செய்வீங்க..
Bread Kothu Recipe In Tamil: காலையில் எப்போதும் இட்லி, தோசை, உப்புமா என்று செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான அதே சமயம் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் நிறைந்த ஒரு சுவையான காலை உணவை செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? அதுவும் நீங்கள் டயட்டில் உள்ளீர்களா? அப்படியானால் வீட்டில் முட்டையும், பிரட்டும் இருந்தால், அதைக் கொண்டு பிரட் கொத்து செய்து சாப்பிடுங்கள்.
இந்த பிரட் கொத்து 10 நிமிடத்தில் செய்து சாப்பிடக்கூடிய அளவில் மிகவும் ஈஸியாக இருக்கும். மேலும் இது டக்கென்று காலை உணவை செய்ய நினைக்கும் போது செய்து சாப்பிட ஏற்ற ஒரு சிறந்த காலை உணவாகவும் இருக்கும். முக்கியமாக இந்த பிரட் கொத்து குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு அட்டகாசமான சுவையில் இருக்கும்.

உங்களுக்கு பிரட் கொத்து எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பிரட் கொத்து ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* முட்டை - 2
* உப்பு - சுவைக்கேற்ப
* பிரட் - 5 துண்டுகள்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து, சிறிது
கொத்தமல்லியை தூவி வதக்க வேண்டும்.
* பின்பு 2 முட்டைகளை உடைத்து ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்
பொடிமாஸ் போன்று வதக்கி செய்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக 5 பிரட் துண்டுகளை எடுத்து பொடியாக துண்டுகளாக்கி, அவற்றை
முட்டை பொடிமாஸ் உடன் சேர்த்து, 5 நிமிடம் நன்கு கிளறி இறக்கினால்,
சுவையான பிரட் கொத்து தயார்.



Click it and Unblock the Notifications
