Latest Updates
-
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்.. -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா?
வெயிலுக்கு காலையில் சுரைக்காய் வெச்சு இப்படி தோசை சுட்டு சாப்பிடுங்க.. உடம்பு குளிர்ச்சியா இருக்கும்..
Bottlegourd Dosa Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் தோசை தான் டிபனாக இருக்குமா? இன்று உங்கள் வீட்டில் தோசை மாவு இல்லையா? அப்படியானால் கவலை வேண்டாம். வீட்டில் பச்சரிசியும், சுரைக்காயும் இருந்தால், அதைக் கொண்டு அட்டகாசமான சுவையில் தோசை சுடலாம்.
இந்த தோசையை கொளுத்தும் கோடையில் சுட்டு சாப்பிட்டால், உடல் குளிர்ச்சியாகவும், நீரேற்றத்துடனும் இருக்கும். முக்கியமாக இந்த தோசை சுடுவது மிகவும் சுலபம். மேலும் இது அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். இந்த தோசைக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னி போன்றவை அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு சுரைக்காயை தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுரைக்காய் தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சரிசி - 1 கப்
* துருவிய சுரைக்காய் - 1 கப்
* பச்சை மிளகாய் - 2
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் பச்சரிசியை நீரில் நன்கு கழுவி, 2 மணிநேரம் நேரம் நீரில்
ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் பச்சரிசியைப் போட்டு, சிறிது நீரை ஊற்றி
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே மிக்சர் ஜாரில் துருவிய சுரைக்காய், பச்சை மிளகாய்
சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து, அதை பச்சரிசி மாவுடன் சேர்த்துக்
கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் மிளகு, சீரகம், பொடியாக நறுக்கிய வெங்காயம்,
கொத்தமல்லி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, ரவா தோசை பதத்திற்கு தேவையான
அளவு நீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கலந்து வைத்துள்ள மாவை
அப்படியே அள்ளி ஊற்ற வேண்டும். பின் எண்ணெய் ஊற்றி, மிதமான தீயில்
வைத்து, பொன்னிறமாக வேக வைத்து எடுக்க வேண்டும். இந்த தோசையை
திருப்பிப் போட்டு வேக வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதேப்
போன்று அனைத்து மாவையும் தோசைகளாக ஊற்றினால், சுவையான சுரைக்காய் தோசை
தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications