Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும்... மணமணக்கும்.. சுரைக்காய் குருமா
Bottle Gourd Kurma Recipe: பெரும்பாலானோரின் வீடுகளில் இரவு நேரத்தில் சப்பாத்தி தான் டின்னராக இருக்கும். உங்கள் வீட்டிலும் அப்படி தானா? இன்று இரவு சப்பாத்திக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசிக்கிறீர்களா?
உங்கள் வீட்டில் சுரைக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த சுரைக்காயைக் கொண்டு குருமா செய்யுங்கள். இந்த சுரைக்காய் குருமா சப்பாத்திக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

சுரைக்காயில் நீர்ச்சத்து அதிகம் என்பதால், கோடையில் இந்த காயை அடிக்கடி உணவில் சேர்ப்பது நல்லது. சுரைக்காயைக் கொண்டு குருமா மட்டுமின்றி சாம்பார் கூட செய்யலாம். ஆனால் சப்பாத்திக்கு சுரைக்காய் குருமா தான் நன்றாக இருக்கும். முக்கியமாக இந்த குருமா செய்வது மிகவும் சுலபம். பேச்சுலர்களும் இதை செய்து சாப்பிடலாம்.
உங்களுக்கு சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷாக சுரைக்காய் குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுரைக்காய் குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சுரைக்காய் - 1 (தோல் நீக்கி துண்டுகளாக்கிக் கொள்ளவும்)
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்
* கசகசா - 2 டீஸ்பூன்
* முந்திரி - 6
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* இஞ்சி - 1 இன்ச்
* பூண்டு - 2 பல்
* கிராம்பு - 4
* ஏலக்காய் - 2
* மிளகு - 8
* பொட்டுக்கடலை - 1/2 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* வெண்ணெய்/எண்ணெய் - 4 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் கசகசா மற்றும் முந்திரியை சுடுநீரில் 10 நிமிடம் ஊற
வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, நீரை வடிகட்டிவிட்டு மிக்சர் ஜாரில் முந்திரி
மற்றும் கசகசாவைப் போட்டு, அத்துடன் அரைப்பதற்கு கொடுத்துள்ள
தேங்காய், சோம்பு, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கிராம்பு, ஏலக்காய்,
மிளகு, பொட்டுக்கடலை ஆகியவற்றை சேர்த்து சிறிது நீரை ஊற்றி, நன்கு
மென்மையாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய்/வெண்ணெய்
சேர்த்து சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நிறம் மாறும் வரை
வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த பேஸ்ட்டை சேர்த்து நன்கு கிளறி, 1 கப் நீரை
ஊற்றி கிளறி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து கிளறி, கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் சுரைக்காயை சேர்த்து, 1 கப் நீரை ஊற்றி கிளறி, குக்கரை
மூடி 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து மேலே கொத்தமல்லியைத் தூவினால்,
சுவையான சுரைக்காய் குருமா தயார்.
Image Courtesy: subbuskitchen



Click it and Unblock the Notifications