Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
1/2 கப் கொண்டைக்கடலை இருந்தா.. இப்படியொரு டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும் சத்தானதும் கூட...
Kondakadalai Dosa Recipe In Tamil: எப்போதும் ஒரே மாதிரியான சுவையில் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில், அதே சமயம் சத்தான டிபனை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் 1/2 கப் கருப்பு கொண்டைக்கடலை இருந்தால், அதைக் கொண்டு அருமையான டிபனை செய்து சாப்பிடுங்கள்.
அதுவும் உங்கள் வீட்டில் உள்ளோர் தோசை பிரியராக இருந்தால், கொண்டைக்கடலைக் கொண்டு தோசை சுட்டு கொடுங்கள். இந்த கொண்டைக்கடலை தோசையை அடிக்கடி செய்தால், உடலுக்கு வேண்டிய புரோட்டீன் கிடைக்கும். வளரும் குழந்தைகளுக்கு இந்த தோசையை அடிக்கடி செய்து கொடுத்தால், அவர்களின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

அதுவும் இந்த தோசைக்கு தோலோடு கொண்டைக்கடலையை அரைத்து செய்வதால், நார்ச்சத்தும் அதிகம் கிடைக்கும். இதன் மூலம் செரிமான மண்டலத்தின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். இப்படிப்பட்ட கொண்டைக்கடலை தோசையை தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் இன்னும் அருமையாக இருக்கும்.
உங்களுக்கு கொண்டைக்கடலை தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொண்டைக்கடலை தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கருப்பு கொண்டைக்கடலை - 1/2 கப்
* ரவை - 1 கப்
* வரமிளகாய் - 3
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 5 பல்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 3 சிட்டிகை
* புளித்த தயிர் - 1/4 கப்
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் கொண்டைக்கடலையை நீரில் குறைந்தது 8 மணிநேரம் ஊற வைத்துக்
கொள்ள வேண்டும். ஒருவேளை காலையில் செய்வதாக இருந்தால், இரவு தூங்கும்
முன் நீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
* பின்னர் ஊற வைத்த கொண்டைக்கடலையை மிக்சர் ஜாரில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் 1 கப் ரவை, 3 வரமிளகாய், 1/2 டீஸ்பூன் சோம்பு, 5 பல்
பூண்டு சேர்த்து நன்கு ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்ததை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அதில் தோசை மாவு
பதத்திற்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் 1/2 டீஸ்பூன் உப்பு, 3 சிட்டிகை பெருங்காயத் தூள்
மற்றும் 1/4 கப் தயிரை சேர்த்து நன்கு கலந்து, மூடி வைத்து 5-10
நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, மாவை நன்கு கிளறி விட
வேண்டும்.
* இறுதியாக தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து
வைத்துள்ள மாவை தோசையாக ஊற்றி, மேலே எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும்
வேக வைத்து எடுத்தால், கொண்டைக்கடலை தோசை தயார்.



Click it and Unblock the Notifications