Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
பிஹாரி ஸ்டைல் காரசாரமான சிக்கன் மசாலா ரெசிபி... இந்த மாதிரி சிக்கனை செஞ்சு பாருங்க...சூப்பர் சைடிஷா இருக்கும்!
Bihari Chicken Kurma Recipe in Tamil: சண்டே வந்தாலே சிக்கன் சாப்பிட வேண்டுமென்பது எழுதப்படாத விதியாக மாறிவிட்டது. இந்த வாரமும் உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கி சமைக்கப் போகிறீர்களா? வழக்கமான சிக்கன் செய்யாமல் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு வித்தியாசமான சிக்கன் சைடுஷ் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் பீஹாரி சிக்கன் குருமாவை செய்யுங்கள்.
இந்த பீஹாரி சிக்கன் குருமா, பிரியாணி மட்டுமின்றி சாதம், தோசை,
சப்பாத்தி போன்ற டிபன் வகைகளுடன் சேர்த்து சாப்பிடவும் அட்டகாசமாக
இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.
இதன் சுவை கிட்டதட்ட நீங்கள் தாபாவில் அல்லது ரெஸ்டாரெண்டில்
சாப்பிடுவது போல இருக்கும். எனவே இது குழந்தைகள் முதல் பெரியவர்கள்
வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும்.

உங்களுக்கு பீஹாரி சிக்கன குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீஹாரி சிக்கன் குருமாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1½ ஸ்பூன் எண்ணெய்
- 1 பிரியாணி இலை
- 1 ஏலக்காய்
- 2 கிராம்பு
- அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
- அரை கிலோ சிக்கன்
- தேவையான அளவு உப்பு
கிரேவி செய்ய:
- 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
- 1 டீஸ்பூன் சீரகம்
- ½ இன்ச் இலவங்கப்பட்டை
- 2 முழு பூண்டு
- 2 கிராம்பு
- 1 பச்சை ஏலக்காய்
- 1 கருப்பு ஏலக்காய்
- 3 வர மிளகாய்
- 2 முழு பூண்டு பல்
- 2 பிரியாணி இலை
- 3 பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கியது
- 15 பூண்டு பல்
- 3 பச்சை மிளகாய்
- 1 இன்ச் இஞ்சி
-1½ டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி தூள்
- ½ டேபிள்ஸ்பூன் மஞ்சள் தூள்
- 2 டேபிள்ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
- தேவையான அளவு உப்பு
- 1 டீஸ்பூன் சிக்கன் மசாலா
- ½ டீஸ்பூன் கரம் மசாலா
- 2 டேபிள்ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி
செய்முறை:
- ஒரு கடாயில் ஒன்றரை ஸ்பூன் எண்ணெய் ஊற்றி புகைக்க ஆரம்பிக்கும் வரை சூடாக்கவும்.
- தீயைக் குறைத்து, பிரியாணி இலை, கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
- பின் எண்ணெயில் மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு மற்றும் சிக்கன் சேர்த்து, சிக்கன் சிறிது பழுப்பு நிறமாகத் தொடங்கும் வரை மிதமான தீயில் வதக்கவும்.
- சிக்கன் நிறம் மாறியதும் அதை ஒரு கிண்ணத்தில் மாற்றி வைக்கவும்.
- கிரேவி செய்ய அதே கடாயில் 3 ஸ்பூன் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். அதன்பின் கொடுத்துள்ள மசாலா பொருட்களை ஒவ்வொன்றாக போடவும்.
- பின்னர் முழு பூண்டு மற்றும் வர மிளகாயை சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.
- அதன்பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கவும்.
- பின் பூண்டு பல், நறுக்கிய இஞ்சி மற்றும் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.பூண்டும், இஞ்சியும் நிறம் மாறிய பின் கரம் மசாலாவைத் தவிர அனைத்து மசாலாக்களையும் சேர்க்கவும் நன்கு வதக்கவும்.
- பின்னர் பாதி வெந்த சிக்கனை சேர்த்து அரை கப் சூடான நீரை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
- சிக்கன் மென்மையாகும் வரை சுமார் 20 முதல் 25 நிமிடங்கள் வரை வேக வைக்கவும். இறுதியாக, கரம் மசாலா தூள் சேர்த்து, கலந்து, அதன் மேல் நறுக்கிய கொத்தமல்லி தூவி அடுப்பை அணைத்தால் சூப்பரான பிஹாரி சிக்கன் கறி ரெடி.
- இதை சூடான தோசை, புரோட்டா அல்லது சப்பாத்தியுடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications