Latest Updates
-
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
காலையில் தினமும் இட்லி, தோசை சாப்பிட்டு போரடிச்சுடுச்சா? அப்ப பீட்ரூட் வெச்சு இந்த டிபனை செய்யுங்க...
Beetroot Paniyaram Recipe In Tamil: காலையில் தினமும் இட்லி, தோசை செய்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று புதுமையான அதே சமயம் குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடியவாறான ஒரு ஆரோக்கியமான காலை டிபனை செய்ய நினைக்கிறீர்களா?
உங்கள் வீட்டில் பீட்ரூட் உள்ளதா? அப்படியானால் அந்த பீட்ரூட்டுடன், கோதுமை மாவு, அரிசி மாவை சேர்த்து அசத்தலான சுவையில் பணியாரம் செய்யுங்கள். இந்த பீட்ரூட் பணியாரம் காலையில் சட்டென்று செய்யக்கூடியவாறு ஈஸியாக இருக்கும். மேலும் இதற்கு தேங்காய் சட்னியை சைடு டிஷ்ஷாக செய்தால் ருசியாக இருக்கும்.

உங்களுக்கு பீட்ரூட் பணியாரத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீட்ரூட் பணியாரம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு - 1/2 கப்
* அரிசி மாவு - 1/4 கப்
* பீட்ரூட் - 1
* வெங்காயம் - 1
* பச்சை மிளகாய் - 2
* இஞ்சி - சிறு துண்டு
* கொத்தமல்லி - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது
* தயிர் - 2 டீஸ்பூன்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* சோடா உப்பு - 1 சிட்டிகை
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு மற்றும் அரிசி மாவை
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் துருவிய பீட்ரூட், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை
மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அதில் துருவிய இஞ்சியை சேர்த்து, தயிர், உப்பு மற்றும் சோடா
உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, இட்லி மாவு பதத்திற்கு
கலந்து கொள்ள வேண்டும்.
* பின் பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, குழிகளில் சிறிது எண்ணெய்
ஊற்ற வேண்டும்.
* அடுத்து கலந்து வைத்துள்ள மாவை குழிகளில் ஊற்றி, பொன்னிறமாக வேக
வைத்து எடுத்தால், சுவையான பீட்ரூட் பணியாரம் தயார்.
Image Courtesy: kurinji. com



Click it and Unblock the Notifications






