Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
மூங்கில் அரிசியை இப்படி கஞ்சி செஞ்சு அடிக்கடி சாப்பிடுங்க.. உடல் எடை சர்ர்ர்-ன்னு வேகமா குறையும்..
Moongil Arisi Vegetable Kanji Recipe In Tamil: இதுவரை நீங்கள் எத்தனையோ கஞ்சியை செய்து குடித்திருப்பீர்கள். மூங்கில் அரிசியைக் கொண்டு கஞ்சி செய்து குடித்திருக்கிறீர்களா? இதுவரை இல்லை என்றால், அடுத்தமுறை கடைக்கு சென்றால், மூங்கில் அரிசியை வாங்கி வந்து கஞ்சி செய்து குடியுங்கள். ஏனெனில் மூங்கில் அரிசியில் ஏராளமான டயட்டரி நார்ச்சத்து உள்ளது. மேலும் இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் கூட குறைவு.
இந்த அரிசியைக் கொண்டு கஞ்சி தயாரித்து அடிக்கடி குடிக்கும் போது, உடல் எடை குறைவதோடு, செரிமானம் சீராக இருக்கும், இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும். முக்கியமாக இந்த கஞ்சியானது மூட்டு வலி, முழங்கால் வலி உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. இந்த கஞ்சியை அடிக்கடி செய்து குடித்து வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும் மற்றும் உடலில் உள்ள ஊளைச்சதை குறையும்.

உங்களுக்கு மூங்கில் அரிசி வெஜிடேபிள் கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மூங்கில் அரிசி வெஜிடேபிள் கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மூங்கில் அரிசி - 1 கப்
* தண்ணீர் - 5 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பூண்டு - 3 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1/2 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 5 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 2 கப்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் மூங்கில் அரிசியை எடுத்து, நீரில் 2
முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் நீரை ஊற்றி, மூடி வைத்து 2 மணிநேரம் ஊற வைக்க
வேண்டும்.
* 2 மணிநேரம் கழித்து, ஊற வைத்த அரிசியை மிக்சர் ஜாரில் போட்டு
கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரில் அரைத்த மூங்கில் அரிசியை போட்டு, அத்துடன் 5 கப்
நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, குக்கரை மூடி அடுப்பில்
வைத்து, 5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், அதில் சீரகம், பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை,
பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் சேர்த்து, சிறிது உப்பு
தூவி நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் 2 கப் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 3-5 நிமிடம் நன்கு
காய்கறிகளை வேக வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, அதில் வேக வைத்துள்ள மூங்கில்
அரிசியை சேர்த்து கிளறி ஒரு கொதி விட வேண்டும்.
* பின் அதில் துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறி,
இறக்கினால், சுவையான மூங்கில் அரிசி வெஜிடேபிள் கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications