Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
சப்பாத்தி, பூரிக்கு உருளைக்கிழங்கு குருமாவை ஒருமுறை இப்படி செய்யுங்க.. டேஸ்ட் செமயா இருக்கும்...
Hotel Style Baby Potato Kurma Recipe In Tamil: சப்பாத்தி, பூரிக்கு உங்கள் வீட்டில் உள்ளோர் உருளைக்கிழங்கு சைடு டிஷ் தான் விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் வழக்கமாக செய்வது போன்று உருளைக்கிழங்கு சைடு டிஷ் செய்யாமல், ஒருமுறை ஹோட்டல் ஸ்டைலில் குருமாவை செய்யுங்கள்.
அதுவும் பேபி உருளைக்கிழங்கு கொண்டு குருமா செய்யுங்கள். இந்த ஹோட்டல் ஸ்டைல் பேபி உருளைக்கிழங்கு குருமா சப்பாத்தி, பூரியுடன் மட்டுமின்றி, இட்லி, தோசையுடனும் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு ஹோட்டல் ஸ்டைல் பேபி உருளைக்கிழங்கு குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹோட்டல் ஸ்டைல் பேபி உருளைக்கிழங்கு குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 4
* ஏலக்காய் - 2
* சோம்பு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* பேபி உருளைக்கிழங்கு - 1/4 கிலோ (தோல் நீக்கியது)
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
அரைப்பதற்கு...
* தேங்காய் - 2 சில்லு
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பொட்டுக்கடலை - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள்
மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பின்னர் அதில் தோல் நீக்கிய பேபி உருளைக்கிழங்கை சேர்த்து 3-4
நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் குருமாவிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி, குக்கரை மூடி 4-5
விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் தேங்காய், சோம்பு மற்றும் பொட்டுக்கடலை
சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, மீண்டும் அடுப்பில் வைத்து,
அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து 3 நிமிடம் கொதிக்க
வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான பேபி உருளைக்கிழங்கு
குருமா தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications











