Latest Updates
-
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்..
வீட்டுல அவல் இருக்கா? இந்த மாதிரி உப்புமா செய்யுங்க.. டேஸ்டியா இருக்கும்...
Aval Upma Recipe In Tamil: காலை எப்போதும் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? ஒரு வித்தியாசமான, அதே சமயம் சத்தான ஒரு ரெசிபியை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் அவல் உள்ளதா? அந்த அவலை என்ன செய்வதென்று தெரியவில்லையா? அப்படியானால் அதைக் கொண்டு உப்புமா செய்யுங்கள்.
இந்த அவல் உப்புமா வழக்கமாக செய்யும் உப்புமாவைப் போல் இல்லாமல், சுவையாக விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். இந்த உப்புமாவை வீட்டில் காலை வேளையில் செய்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு அவல் உப்புமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அவல் உப்புமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* அவல் - 2 கப்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வேர்க்கடலை - 3 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் அவலை நீரில் 2 முறை கழுவி, நீரை முற்றிலும்
வடிகட்டிவிட்டு, மூடி வைத்து சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.
* உப்புமா செய்வதற்கு முன் அவலை நன்கு ஊறி மென்மையாக இருக்க வேண்டும்.
அவல் மென்மையானதும், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 1/2
டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், வேர்க்கடலை, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு
சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் கடுகு, சீரகம், பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்பு வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, சிறிது
உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து மஞ்சள் தூள் சேர்த்து, அதன் பின் அவலையும் சேர்த்து நன்கு
கிளறி விட வேண்டும்.
* பிறகு துருவிய தேங்காயை கிளறி, வேண்டுமானால் சிறிது உப்பு சேர்த்து
பிரட்டி, மூடி வைத்து 2-5 நிமிடம் வேக வைத்து இறக்கி, எலுமிச்சை சாறு
மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான அவல் உப்புமா
தயார்.
Image Courtesy: indianhealthyrecipes



Click it and Unblock the Notifications









