Latest Updates
-
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா?
1 கப் அவலும், 1 கப் ரவையும் வெச்சு.. ஒருடைம் இப்படி இட்லி செய்யுங்க.. சாப்ட்டா பஞ்சு போல இருக்கும்...
Aval Rava Idli Recipe In Tamil: வீட்டில் இட்லி சுட மாவு இல்லையா? டக்கென்று ஒரு டிபனை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் அவலும், ரவையும் உள்ளதா? அப்படியானால் அந்த இரண்டையும் கொண்டு அவல் ரவா இட்லியை செய்யுங்கள்.
இந்த இட்லி செய்வதற்கு ஈஸியாக இருப்பதோடு, இதை செய்ய வீட்டில் உள்ள ஒருசில பொருட்களே போதுமானது. மேலும் இந்த இட்லி டயட்டில் இருப்போருக்கு ஏற்றதாக இருக்கும். முக்கியமாக இந்த இட்லி வழக்கமாக செய்யும் இட்லியை விட மென்மையாக இருக்கும்.

உங்களுக்கு அவல் ரவா இட்லியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அவல் ரவா இட்லி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* அவல் - 1 கப்
* புளித்த தயிர் - 1 கப்
* தண்ணீர் - 1/2 கப் + 1/2 கப்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்
* முந்திரி - 5
* பெருங்காயத் தூள் - சிறிது
* பச்சை மிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கேரட் - 1 (துருவியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* ரவை - 1 கப்
* தண்ணீர் - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* ஆப்பசோடா - 1/4 டீஸ்பூன் (விருப்பமிருந்தால்)
செய்முறை:
* முதலில் அவலை எடுத்து, அதில் தயிரை சேர்த்து கலந்து, மூடி வைத்து
10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் ஊற வைத்த அவலை மிக்சர் ஜாரில் போட்டு, 1/2 கப் நீரை ஊற்றி
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்ததை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அத்துடன், 1/2 கப் நீரை
ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பிறகு அதில் முந்திரி, பெருங்காயத் தூள், பச்சை மிளகாய்,
கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் துருவிய கேரட்டை சேர்த்து 1 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பின்னர் அதில் கொத்தமல்லியை சேர்த்து கிளறி, ரவையை சேர்த்து 2
நிமிடம் வறுத்து இறக்க வேண்டும்.
* பின் அதை அவலுடன் சேர்த்து கிளறி, 1/2 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து, வேண்டுமானால் ஆப்பசோடாவை சேர்த்து நன்கு கலந்து, 10
நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.
* இறுதியாக இட்லி தட்டில் எண்ணெய் தடவி, அதில் இந்த மாவை ஊற்றி, இட்லி
பாத்திரத்தில் வைத்து, 10 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான அவல்
ரவா இட்லி தயார்.



Click it and Unblock the Notifications