Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
இட்லி மாவு இல்லாத நேரத்துல.. 1 கப் அவலும், 1 கப் ரவையும் வெச்சு.. காலையில் இந்த டிபனை செய்யுங்க..
Aval Rava Idli Recipe In Tamil: காலையில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? வீட்டில் இட்லி, தோசை சுட மாவு எதுவும் இல்லையா? கவலைப்படாதீர்கள். உங்கள் வீட்டில் அவலும், ரவையும் இருக்கா?
அப்படியானால் அந்த இரண்டையும் கொண்டு அட்டகாசமான சுவையில் இட்லி செய்யுங்கள். இந்த இட்லி செய்வதற்கு ஈஸியாக இருப்பதோடு, நல்ல சுவையுடனும், மென்மையாகவும் இருக்கும். முக்கியமாக இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

உங்களுக்கு அவல் ரவா இட்லியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அவல் ரவா இட்லி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* அவல் - 1 கப்
* புளித்த தயிர் - 1 கப்
* தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன் + 1/2 கப்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* முந்திரி - 5-6
* பெருங்காயத் தூள் - சிறிது
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* ரவை - 1 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* ஆப்ப சோடா - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் அவலை எடுத்து நீரில் ஒருமுறை அலசிக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் 1 கப் தயிரை சேர்த்து, 2 டேபிள் ஸ்பூன் நீரை ஊற்றி நன்கு
கலந்து, மூடி வைத்து 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு மற்றும் முந்தரி
சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.
* பிறகு அதில் பெருங்காயத் தூள், நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை
சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்னர் துருவிய கேரட்டை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கி, பின்
கொத்தமல்லியை சிறிது தூவி கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் 1 கப் ரவையை சேர்த்து 3-4 நிமிடம் நன்கு கிளறி விட்டு
இறக்க வேண்டும்.
* பின் ஊற வைத்த அவலை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்ததை ஒரு பாத்திரத்தில் ஊற்றி 1/2 கப் நீரை ஊற்றி கலந்து
கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் வதக்கிய பொருட்களை சேர்த்து கிளறி, மிகவும் கெட்டியாக
இருந்தால், இட்லி மாவு பதத்திற்கு தேவையான அளவு நீரை ஊற்றி,
சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது ஆப்ப சோடா சேர்த்து கிளறி, 10
நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* இறுதியாக இட்லி தட்டில் எண்ணெய் தடவி, கலந்து வைத்துள்ள மாவை
தட்டில் ஊற்றி, இட்லி பாத்திரத்தில் வைத்து, 10 நிமிடம் வேக வைத்து
எடுத்தால், சுவையான அவல் ரவா இட்லி தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications