Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
தினமும் ஒரே மாதிரி டிபன் செய்யாம.. 1 1/2 கப் அவல் இருந்தா காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க...
Aval Idli Recipe In Tamil: தினமும் காலையில் ஒரே மாதிரியான டிபன் செய்து போரத்துவிட்டதா? சற்று வித்தியாசமான அதே சமயம் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு ஏதாவது டிபனை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் 1 1/2 கப் அவல் உள்ளதா? அப்படியானால் அந்த அவலைக் கொண்டு அட்டகாசமான சுவையில் ஒரு புதுமையான இட்லியை செய்யுங்கள். இந்த இட்லிக்கு சைடு டிஷ் எதுவும் தேவையில்லை. அப்படியே கூட சாப்பிடலாம்.
உங்களுக்கு அவல் இட்லியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அவல் இட்லி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* அவல் - 1 1/2 கப்
* ரவை - 1/4 கப்
* கெட்டி தயிர் - 1/4 கப்
* இஞ்சி - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 4 பல்
* பெருங்காயத் தூள் - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது
* உப்பு - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வடிகட்டியை எடுத்து, அதில் 1 1/2 கப் அவலை போட்டு,
தேவையான அளவு நீரை ஊற்றி ஒருமுறை அலசி, அப்படியே 5 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து, மிக்சர் ஜாரில் அலசி வைத்துள்ள அவலை எடுத்து,
அத்துடன் ரவை, தயிர், இஞ்சி, சீரகம், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அரைத்ததை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, அத்துடன்
மிளகுத் தூள், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் துருவிய கேரட்
சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும்.
* பிறகு இட்லி தட்டை எடுத்து, அந்த இட்லி குழிகளில் எண்ணெய் தடவி
கலந்து வைத்துள்ளதை கொஞ்சம் எடுத்து உருண்டையாக உருட்டி, இட்லி
தட்டில் வைத்து தட்டையாக தட்டை நடுவே ஒரு துளையிட வேண்டும். இதேப்
போன்று அனைத்து குழியிலும் மாவை வைக்க வேண்டும்.
* பின் இட்லி பாத்திரத்தில் சிறிது நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர்
நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், இட்லி தட்டை இட்லி பாத்திரத்தில்
வைத்து, 10 நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும்.
* பின்பு இட்லிகள் நன்கு குளிர்ந்ததும், அவற்றை ஒரு ஸ்பூன் கொண்டு
எடுத்து, ஒரு தட்டில் வைக்க வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எணணெய் ஊற்றி சூடானதும், சீரகம், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்
பருப்பு, பூண்டு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை மற்றும் சிறிது உப்பு
சேர்த்து தாளித்து, இட்லியின் மேல் ஊற்றினால், சுவையான அவல் இட்லி
தயார்.
Image Courtesy: Akshaya. com



Click it and Unblock the Notifications