Latest Updates
-
இன்றைய ராசிபலன் 03 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம் -
புதன் கன்னி ராசியில் உதயமாவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பூரி பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது!
அரிசி மாவு ரொட்டியும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Arisi Maavu Roti With Kara Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் டிபன் செய்ய இட்லி, தோசை மாவு இல்லையா? என்ன டிபனை செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் அரிசி மாவு உள்ளதா? அப்படியானால் அந்த அரிசி மாவு கொண்டு அருமையான சுவையில் ரொட்டி செய்து, அதற்கு சைடு டிஷ்ஷாக கார சட்னியையும் செய்யுங்கள்.

இந்த டிபன் காம்போ மிகவும் சுவையாக இருக்கும். முக்கியமாக இது சட்டென்று செய்யக்கூடியவாறு மிகவும் ஈஸியாகவும் இருக்கும். இதை காலையில் மட்டுமின்றி, இரவு வேளைகளிலும் சாப்பிடலாம். இந்த அரிசி மாவு ரொட்டியை வெறுமனே கூட சாப்பிடலாம்.
உங்களுக்கு இந்த அரிசி மாவு ரொட்டியும், கார சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அரிசி மாவு ரொட்டி மற்றும் கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு ரொட்டிக்கு...
* பச்சரிசி மாவு - 1 கப்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
கார சட்னிக்கு...
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* வரமிளகாய் - 1
* புளி - சிறிய துண்டு
* பூண்டு - 1 பல்
* தக்காளி - 2 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
சட்னி தாளிப்பதற்கு...
* எண்ணெய்- 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* அரைத்த சட்னி
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் சுவைக்கேற்ப உப்பு, சீரகம் சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி ரொட்டி மாவு பதத்திற்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து பிசைந்து கொள்ள
வேண்டும்.
* அடுத்து சட்னி அரைப்பதற்கு ஒரு மிக்சர் ஜாரில் நறுக்கிய வெங்காயம்,
வரமிளகாய், புளி, பூண்டு, தக்காளி ஆகியவற்றை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்த சட்னியை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து
இறக்கினால், சுவையான கார சட்னி தயார்.
* பின்பு ஒரு பட்டர் ஷீட்/வாழை இலை/கவரை எடுத்துக் கொண்டு, அதில்
எண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும்.
* பிறகு பிசைந்துள்ள மாவை சிறிது எடுத்து உருட்டி அதில் வைத்து,
மெல்லியதாக தட்டிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், தட்டி
வைத்துள்ள ரொட்டியை சேர்த்து, குறைவான தீயில் வைத்து, முன்னும்
பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான அரிசி மாவு ரொட்டி
தயார்.



Click it and Unblock the Notifications