Latest Updates
-
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
கோவை அன்னபூர்ணா ஹோட்டல் வெஜ் குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
இனிப்புகளின் ராஜா என்று அழைக்கப்படும் இனிப்பு எது தெரியுமா? உங்களுக்கு இந்த இனிப்பு பிடிக்குமா? -
எந்த கீரை வாங்கினாலும் இப்படி ஒருவாட்டி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
சப்பாத்திக்கு இந்த மாதிரி ஆப்கானி முட்டை கிரேவி செஞ்சு பாருங்க... இனிமே ஹோட்டல் பக்கம் போகவே மாட்டிங்க...!
Afghani Egg Curry Recipe in Tamil: எப்பவும் சப்பாத்திக்கு காய்கறி கிரேவி இல்ல உருளைக்கிழங்கு கிரேவி செய்வோம். சில நேரத்துல முட்டை குழம்பு செய்வோம். ஆனா முட்டை கிரேவியை எப்பவும் போல செய்யாம இந்த மாதிரி ஒரு முறை செய்து பாருங்க. எல்லாருக்கும் பிடிக்கும். ஆப்கானி முட்டை கிரேவி எப்படி செய்யறதுன்னு இங்க பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
- முட்டை - 6
- பட்டை - சிறியது(2 இன்ச் அளவு)
- அன்னாசி பூ - 1
- மராத்தி மொட்டு - 1
- மிளகு - 1 ½ டீ ஸ்பூன்
- சீரகம் - 2 டீ ஸ்பூன்
- ஏலக்காய் - 3
- மஞ்சள் தூள் - ½ டீ ஸ்பூன்
- மிளகாய் தூள் - ½ டேபிள் ஸ்பூன்
- மல்லித்தூள் - 1 ½ டேபிள் ஸ்பூன்
- தயிர் - 100 முதல் 150 மிலி
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
அரைக்க:
- பெரிய வெங்காயம் - 3
- பச்சை மிளகாய் - 7
- இஞ்சி - சிறியது (2 இன்ச் அளவு)
- பூண்டு - 8-10 பல்
- முந்திரி - 7 அல்லது 8
கசகசா - 2 டீ ஸ்பூன்
- கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி
முட்டை வறுக்க:
- எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் தூள் - ¼ டீ ஸ்பூன்
- மிளகாய் தூள் - ¼ டீ ஸ்பூன்
- மல்லித்தூள் - ¼ டீ ஸ்பூன்
- மிளகுத்தூள் - ¼ டீ ஸ்பூன்
- உப்பு - சிறிதளவு
செய்முறை:
- பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி முட்டை, சிறிதளவு உப்பு, மற்றும்
சில துளி எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.
- வெங்காயத்தை தோல் நீக்கி நீளவாக்கில் நறுக்கி வைத்து கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து
காயவிடவும்.
- எண்ணெய் சூடானதும் பச்சை மிளகாய், இஞ்சி, மற்றும் பூண்டு சேர்த்து
வதக்கவும்.
- அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி ஆற
விடவும்.
- பின் மிக்ஸி ஜாரில் வதக்கி ஆற வைத்த பொருட்களுடன் முந்திரி, கசகசா,
மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும்.
- வேக வைத்த முட்டையை தோல் நீக்கி கத்தியால் மென்மையாக கீறி
வைக்கவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து
காயவிடவும்.
- எண்ணெய் சூடானதும் அதில் மஞ்சள், மல்லித்தூள், மிளகாய்த்தூள்,
மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
- அதில் கீறி வைத்த முட்டைகளை சேர்த்து நன்றாக நிறம் மாறும் வரை
வதக்கி எடுத்து கொள்ளவும்.
- அதே வாணலியில் தேவைப்பட்டால் தாளிக்க இன்னும் சிறிதளவு எண்ணெய்
சேர்த்து கொள்ளவும்.
- எண்ணெய் சூடானது அதில் பட்டை, அன்னாசி பூ, மற்றும் மராத்தி மொட்டு
சேர்த்து பொரிய விடவும்.
பின் அதில் மிளகு, சீரகம், மற்றும் ஏலக்காய் சேர்க்கவும்.
- நன்கு பொரிந்ததும் அதனுடன் அரைத்து வைத்த கலவையை சேர்க்கவும்.
- அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், மற்றும் உப்பு
சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
- மசாலா பொருட்கள் பச்சை வாசம் போனதும் தயிர் சேர்த்து கொதிக்க
விடவும்.
- கடைசியாக வறுத்து வைத்த முட்டை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கினால்
சுவையான ஆப்கானி முட்டை கிரேவி ரெடி!



Click it and Unblock the Notifications