Latest Updates
-
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்
ஆடி வெள்ளி ஸ்பெஷல் அம்மிணி கொழுக்கட்டை ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - காரமா சூப்பரா இருக்கும்
Aadi Velli Special Ammini Kozhukattai Recipe in Tamil: ஆடி மாதம் தமிழ் மாதங்களில் மிகவும் மங்களகரமான மாதமாகும். ஆடி வெள்ளிக்கிழமை நாளில் சிலர் தங்கள் வீடுகளில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளை செய்து வழிபாடு செய்வார்கள். அப்போது அம்மனுக்கு பிரசாதமாக படைப்பதற்கு பாயாசம், வடை, சுண்டல் என்று செய்வார்கள். நீங்கள் ஆடி வெள்ளியில் அம்மனுக்கு ஒரு எளிய மற்றும் சுவையான பிரசாதத்தை வைத்து வழிபட நினைத்தால் இந்த செட்டிநாடு ஸ்பெஷல் அம்மிணி கொழுக்கட்டையை செய்து படையுங்கள்.

இந்த அம்மிணி கொழுக்கட்டை, ஆடி மாதத்தில் அம்மனுக்கு செய்து படைக்கும் ஒரு வித்தியாசமான பிரசாதமாகும். இந்த செட்டிநாடு ஸ்பெஷல் அம்மிணி கொழுக்கட்டை ஆரோக்கியமானது மட்டுமின்றி, சத்தானதும் கூட. முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையில் இருக்கும்.
உங்களுக்கு ஆடி வெள்ளி ஸ்பெஷல் அம்மிணி கொழுக்கட்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆடி அம்மிணி கொழுக்கட்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பருப்பு மசாலாவுக்கு:
- 1 ஸ்பூன் வெள்ளை எள்
- 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 2 ஸ்பூன் கடலைப்பருப்பு
- 2 வர மிளகாய்
- 2 ஸ்பூன் துருவிய தேங்காய்
மாவு செய்ய:
- 1 கப் பச்சரிசி மாவு
- 1.5 கப் தண்ணீர்
- 1 ஸ்பூன் எண்ணெய்
- ½ தேக்கரண்டி உப்பு
தாளிக்க:
- 1 ஸ்பூன் நல்லெண்ணெய்
- 1/4 ஸ்பூன் கடுகு
- 2 கொத்து கறிவேப்பிலை
செய்முறை:
முதலில் ஒரு கடாயில் வர மிளகாய், எள், உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப்பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து, பருப்பு வகைகள் பொன்னிறமாகும் வரை மிதமான தீயில் வறுக்கவும். அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.
- இந்த கலவை ஆறியதும், அதனுடன் துருவிய தேங்காய் சேர்த்து மிக்சியில் போட்டு கொரகொரப்பான பொடியாக அரைத்து தனியே வைக்கவும்.
- ஒரு வாணலியில் ஒரு கப் அரிசி மாவைச் சேர்க்கவும். மாவு தொட்டுப் பார்க்கும் போது நன்றாகச் சூடாக இருக்கும் வரை மிதமான தீயில் வறுக்கவும். வறுத்த மாவை இறக்கி தனியே வைக்கவும்.
- ஒரு பிரஷர் குக்கரில் 1.5 கப் தண்ணீர், ஒரு டீஸ்பூன் எண்ணெய் மற்றும் அரை டீஸ்பூன் உப்பு சேர்க்கவும். மூடி வைத்து ஒரு விசில் வரும் வரை வேகவைக்கவும். குக்கரின் அழுத்தம் வெளியேறும் வரை காத்திருக்கவும்.
- உடனடியாக வறுத்த அரிசி மாவைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். குக்கரை மூடி, விசில் போட்டு 15 நிமிடங்கள் அப்படியே விடவும். இந்த நேரத்தில் அடுப்பி எரியக்கூடாது.
- 15 நிமிடங்களுக்குப் பிறகு, குக்கரைத் திறந்து மாவை நன்றாகக் கலக்கவும். மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
- உருண்டைகளைச் செய்த பிறகு, அவற்றை இட்லித் தட்டுகளில் வைக்கவும். ஒரு பாத்திரத்தில் ஒரு அங்குல உயரத்திற்குத் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
- உருண்டைகள் உள்ள இட்லித் தட்டுகளை அதில் வைத்து, பாத்திரத்தை மூடி 15 நிமிடங்கள் ஆவியில் வேகவைக்கவும். அடுப்பை அணைத்துவிட்டு, 10 நிமிடங்கள் ஆறவிடவும்.
- ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும். கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
- கடுகு பொரிந்ததும், வேகவைத்த உருண்டைகள் மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாப் பொடியைச் சேர்க்கவும். மசாலா உருண்டைகளில் நன்றாகப் படியுமாறு ஒரு நிமிடம் கிளறவும்.
- அவ்வளவுதான் சுவையான அம்மிணி கொழுக்கட்டை ரெடி!



Click it and Unblock the Notifications
