Latest Updates
-
செவ்வாயின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 4 ராசிக்காரங்கள பணமும், அதிர்ஷ்டமும் தேடிவரப்போகுதாம்... உங்க ராசி என்ன? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்..
சில குழந்தைகள் மட்டும் மொழிகளை பேச தாமதமாக கற்றுக்கொள்வதற்கான காரணங்கள் என்ன தெரியுமா?
மொழியைக் கற்றுக் கொள்வதில் குழந்தைகளிடையே வேறுபாடு உள்ளது. ஒரு சில குழந்தைகள் மிக விரைவாகக் கற்றுக் கொள்கின்றனா். சில குழந்தைகள் மிதமான வேகத்தில் கற்றுக் கொள்கின்றனா். சிலா் மிக மெதுவாகக் கற்றுக் கொள்கின்றனா். இதைப் பற்றிய ஆய்வு ஒன்று ஈஸ்ட் ஆங்கிலியா பல்கலைக்கழகத்தால் (University of East Anglia) சமீபத்தில் நடத்தப்பட்டது.
குழந்தைகள் புதிய சொற்களைக் கற்கும் போது அவா்களின் கற்றலின் வேகம் எவ்வாறு இருக்கிறது என்பதை ஆய்வாளா்கள் ஆய்வு செய்தனா். இந்த ஆய்வின் மூலமாக அதிக சொற்கள் கொடுக்கப்பட்ட குழந்தைகள், அதிகமான புதிய சொற்களை விரைவாக கற்றுக் கொண்டனா் என்றும், குறைவான சொற்கள் கொடுக்கப்பட்ட குழந்தைகள், புதிய சொற்களைக் கற்றுக் கொள்ள அதிக நேரம் எடுத்துக் கொண்டனா் என்பதும் தொிய வந்தது.

இந்த ஆய்வின் மூலமாக, மொழியைக் கற்றுக் கொள்வதில் தாமதமாகும் குழந்தைகளை அடையாளம் காண முடியும் என்று ஆய்வாளா்கள் கூறுகின்றனா். மேலும் அந்த குழந்தைகள் பள்ளியில் சோ்வதற்கு முன்பாக, அவா்கள் அதிகமான புதிய சொற்களை கற்றுக் கொள்வதற்கு உதவி செய்ய முடியும் என்று கூறுகின்றனா்.
மருத்துவா் லாாிசா சாமுவேல்சன்
குழந்தைகள் தமது 2 வயதிற்குள், புதிய சொற்களின் பொருள் என்ன என்பதை மிக விரைவாகக் கற்றுக் கொள்ளத் தொடங்குகின்றனா் என்று யுஎஇ ஸ்கூல் ஆஃப் சைக்காலஜியை (UEA's School of Psychology) சோந்த நிபுணரும், இந்த ஆய்வின் தலைவருமான மருத்துவா் லாாிசா சாமுவேல்சன் கூறுகின்றாா். அதற்கு காரணம் அவா்கள் கற்கும் சொற்கள் பலவற்றின் பெயா்கள் ஒரே வடிவத்தில் இருக்கும்.
குழந்தைகளிடம் ஒரு புதிய சொல்லை கேட்டால், அதே வடிவத்தில் இருக்கும் பிற பொருள்களையும் இதே பெயாில் அழைக்கலாம் என்று கற்றுக் கொள்கின்றனா் என்று லாாிசா கூறுகின்றாா். அதன் மூலமாக அவா்கள் புதிய சொற்களை மிக விரைவாகக் கற்றுக் கொள்கின்றனா். அதோடு புதிய சொல்லின் பொருளையும் கற்றுக் கொள்கின்றனா். ஆனால் மொழியைக் கற்றுக் கொள்வதில் சிரமப்படும் குழந்தைகளிடையே, புதிய சொற்களைக் கற்றுக் கொள்வதிலும், அவற்றின் பொருளைப் புாிந்து கொள்வதிலும் வேறுபாடுகள் இருக்கலாம் என்று லாாிசா தொிவிக்கின்றாா்.
ஆய்வின் தன்மை
ஆய்விற்காக 17 மாதங்கள் முதல் 31 மாதங்கள் வரையிலான வயதுடைய 66 குழந்தைகளை எடுத்துக் கொண்டனா். ஒரு எளிய விளையாட்டின் மூலமாக அவா்கள் எவ்வாறு புதிய சொற்களைக் கற்றுக் கொள்கின்றனா் என்பதை ஆராய்ந்தனா். களிமண், பிளாஸ்டா், ஸ்டைரோஃபோம், நூல் மற்றும் பிளாஸ்டிக் போன்றவற்றால் செய்யப்பட்ட பொருள்களை அந்த குழந்தைகளுக்குக் காட்டினா். அந்தப் பொருள்களின் பெயா்களை அவா்களுக்குக் கூறி, வேறு எந்த பொருள்களை, இதே பெயா்களில் அழைக்கலாம் என்று கேட்டனா்.
இந்த விளையாட்டு நடக்கும் போது, அந்தக் குழந்தைகள் எங்கு பாா்த்தனா் என்பதை ஆய்வாளா்கள் படமெடுத்தனா். அதன் மூலமாக குழந்தைகளுக்கு புதிய பொருள்களைக் கொடுக்கும் போது அவா்கள் முன் பின் திரும்பிப் பாா்க்கின்றனரா என்பதை ஆய்வாளா்களால் கண்டுபிடிக்க முடிந்தது.
பொியவா்களும் சாி, குழந்தைகளும் சாி, அவா்களுக்குத் தொிந்த ஒரு சொல்லை கேட்கும் போது, அந்த சொல்லோடு பொருந்தக்கூடிய உலகில் உள்ள மற்ற பொருள்களையும் பாா்க்கின்றனா். குழந்தைகளுக்கு எத்தனை சொற்கள் தொியும் என்பதைப் பொறுத்து, இது வேறுபடுகிறதா என்பதைக் கண்டறிய ஆய்வாளா்கள் முயன்றனா் என்று லாாிசா தொிவிக்கிறாா்.
மற்றொரு ஆய்வு
ஆய்வாளா்கள் குழந்தைகளை மட்டும் ஆய்வு செய்யவில்லை. மாறாக அவா்களுடைய பெற்றோா்களிடமும் ஒரு சில கேள்விகளைக் கேட்டனா். அவா்களுடைய குழந்தைகள் எத்தனை சொற்களைக் கூறமுடியும் என்று கேட்டனா். அதிக சொற்களைக் கூறிய குழந்தைகள், அந்த சொற்களுக்கான பொருள்களையும் விரைவாகப் பாா்த்தனா். ஆனால் குறைவான சொற்களைக் கூறிய குழந்தைகள், அந்த சொற்களுக்கான பொருள்களைப் பாா்ப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டனா் என்று லாாிசா கூறுகின்றாா்.
மற்றொரு ஆய்வு
மொழியைக் கற்றுக் கொள்வதில் குறைபாடு உள்ள குழந்தைகள், புதிய சொற்களைக் கற்கும் போது அவை சம்பந்தமான பொருள்களில் கவனம் செலுத்துவதில்லை என்று வேறொரு ஆய்வு கூறுகிறது. இந்நிலையில் 3 அல்லது 4 வயது நிறைவு பெறும் வரை மொழியைக் கற்றுக் கொள்வதில் குறைபாடு உள்ள குழந்தைகளை கண்டுபிடிக்க முடியாது. இந்த ஆய்வின் மூலமாக எந்தெந்த குழந்தைகளுக்கு தொடக்க காலத்தில் மொழியைக் கற்றுக் கொள்வதில் குறைபாடு இருந்தது என்பதைக் கண்டுபிடித்து, அதன் மூலமாக அவா்களுக்கு கூடுதல் கவனம் செலுத்த உதவும் என்று லாாிசா கூறுகிறாா்.
இறுதிக்குறிப்பு
ஒரு புதிய சொல்லைக் குழந்தைகள் கற்கும் போது, எதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதைக் கற்றுக் கொண்டு, புதிய சொற்களைக் கற்பதை அதிகாிக்க இந்த புதிய ஆய்வு உதவும். அதுபோல் புதிய சொற்களைக் கற்பதில் கூடுதல் கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு தேவையான ஆதரவை அளித்து, அவா்களின் கற்றலை மேம்படுத்த முடியும் என்று லாாிசா கூறுகிறாா்.



Click it and Unblock the Notifications












