Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க ஓவர் தன்னம்பிக்கையால் எப்பவும் சொதப்பிட்டே இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆயுத பூஜைக்கு சுண்டல் சாப்பிட்டு கேஸ் ஏறிடுச்சா? அப்ப இந்த இயற்கை பானங்களை குடிங்க.. -
சனி-சூரியனால் உருவாகியுள்ள ஷடாஷ்டக யோகம்: இந்த 3 ராசிக்காங்க கவனமாக இருக்கணும்! -
காரசாரமான பன்னீர் தேங்காய் மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவல் சுவையில் இருக்கும் -
ஆயுத பூஜை நாளில் உங்க ராசிப்படி தானம் செய்யுங்க.. துர்கையின் ஆசியால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
கைகளில் சொடக்கு எடுக்கும்போது அதிலிருந்து ஏன் சத்தம் வருகிறது? இப்படி செய்வது பாதிப்பை ஏற்படுத்துமா? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், 2 தக்காளியும் இருந்தா.. காலையில் இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. -
அக்டோபர் 19, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நவம்பர் 12 வரை இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஒரே இரவில் பளிச்சென்று ஜொலிக்கணுமா? அப்ப நைட் டைம்-ல இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க..
உங்க குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிடுவது அவங்க எதிர்காலத்தை எப்படி சிதைக்கிறதாம் தெரியுமா?
நாம் வாழும் உலகம் கடுமையான போட்டிகள் நிறைந்தது. சிறுவயதிலிருந்தே போட்டித் தன்மை நம் சமூக அமைப்பில் கட்டமைக்கப்படுகிறது. இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் திறமையை பல்வேறு வழிகளில் ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். சமூக ஊடகங்கள், தேர்வு அறைகள், உடல் உருவம், குடும்ப நிலை மற்றும் பலவற்றுடன் ஒப்பிட்டு பார்க்கிறார்கள்.

மற்ற குழந்தைகள் எவ்வாறு தனித்துவத்துடன் இருக்கிறார்கள் என்பதையும், தங்கள் குழந்தைகளின் பலவீனங்கள் அல்லது பலங்களை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடுவதையும் பெற்றோர்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். பல பெற்றோர்கள் இதைச் செய்வது தங்கள் குழந்தைகளை சிறந்தவர்களாக மாற்ற ஊக்குவிக்கும் என்று நினைக்கிறார்கள், ஆனால் சில சமயங்களில் அது அவர்களின் குழந்தைக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இதனால் குழந்தைகளுக்கு என்னென்ன சிக்கல்கள் ஏற்படும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும்
இது உங்கள் குழந்தையின் சுயமரியாதையை கடுமையாக பாதிப்பிற்கு உட்படுத்துகிறது என்பது மற்ற குழந்தைகளுடன் உங்கள் குழந்தையை ஒப்பிடுவதற்கு எதிரான மிக அடிப்படையான வாதங்களில் ஒன்றாகும். உங்கள் குழந்தையை மற்றவர்களை விட தாழ்வாக உணர விடாதீர்கள், ஏனென்றால் ஒவ்வொரு ஒப்பீடும் குழந்தையின் சுயமரியாதையின் மீது நீங்கள் செய்யும் அமைதியானத் தாக்குதலாகும்.
சுயமரியாதையை பாதிக்கும்
குழந்தைகள் தங்கள் குடும்பத்தினர் தங்கள் மீது வைக்கும் விமர்சனங்களை மிகவும் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்கிறார்கள். இது அவர்களிடம் ஏதோ தவறு இருக்கிறது என்ற எண்ணத்தை அவர்களுக்குள் வளர்க்கலாம். மற்ற குழந்தைகளுடன் தொடர்ந்து ஒப்பிடும்போது அவர்களுக்கு திறமை குறைபாடு இருக்கிறது என்று அவர்களை நினைக்க வைக்கும். தனக்கு போதுமான திறமை இல்லை என்ற எண்ணம் அவர்களை கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாக்கும்.
மனக்கவலையை உண்டாக்கும்
மனக்கவலைக் கோளாறு என்பது ஒப்பீடுகளுக்கு உள்ளாகும் குழந்தைகளின் வெளிப்படையான வெளிப்பாடாகும். நீங்கள் மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் உங்கள் குழந்தையின் திறன் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படும் மற்றும் அவர்களின் மன அழுத்தம் மற்றும் பதட்ட அளவுகள் அதிகரிக்கும். உங்கள் குழந்தையை ஒப்பிடுவதற்குப் பதிலாக, அவர்களுடன் உட்கார்ந்து, அவர்கள் எதிர்கொள்ளும் காரணங்கள் மற்றும் சிரமங்களைப் பற்றி பேசுங்கள். பெற்றோர்கள் எப்போதும் தங்கள் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருக்கிறார்கள், உங்கள் குழந்தைக்கு சிறந்த நண்பராக இருக்க முயலுங்கள்.
நிராகரிக்கப்பட்டதாக உணர்வார்கள்
ஒரு குழந்தையின் திறமை நிராகரிக்கப்படுவதும், பெற்றோரை மகிழ்விக்கும் திறன் இல்லையென்பதும் குழந்தைகள் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய மிகப்பெரிய சோகமாகும். அந்த இளம் வயதிலேயே நிராகரிப்பு என்பது சந்தேகத்திற்கு இடமில்லாத மனநலப் பிரச்சனைகளுக்குக் காரணமாகிறது.
அகங்காரத்தை ஏற்படுத்தும்
உளவியல் நிபுணர்களின் கருத்துப்படி, சில சமயங்களில் ஒப்பீடுகள் ஒரு குழந்தையை தங்களை அனைவருக்கும் மேலானவர்கள் என்று நம்ப வைக்கும், அவர்களின் பணிவை குறைத்து, அவர்களது ஆளுமையில் அகங்காரத்தை கொஞ்சம் கொஞ்சமாக செலுத்துவதற்கும் வழிவகுக்கும்.



Click it and Unblock the Notifications

