Latest Updates
-
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்!
குழந்தைகளுக்கு 6 மாதம் ஆவதற்கு முன் தண்ணீர் கொடுப்பது ஆபத்தானதா? விளக்குகிறார் டாக்டர் பாரதி...!
நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவரின் வாக்கு. ஆனால் மருத்துவர் உலகில் " நீரை சரியாக குடிப்பதே அழகு" என்று கூறுவார்கள். அதற்கேற்ப நமக்கு நீரின் தேவை அளவிற்கு அதிகமாக இருக்கிறது. என்னதான் நீரின் தேவை அளவிற்கு அதிகமாக இருந்தாலும், அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை போல், அளவிற்கு அதிமாக பயன்படுத்துவதும் தேவையற்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.
பெரியவர்களுக்கு இந்த நிலை என்றால், குழந்தைகளுக்கு கொடுக்கும் தண்ணீரின் அளவில் அதிக கவனம் செலுத்த வேண்டியது பெற்றோரை முக்கிய கடமை என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் பாரதி. குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுப்பது சார்ந்த மருத்துவரின் அறிவுரைகளை இங்கு பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுக்கலாமா கூடாதா?
குழந்தை பிறந்தது முதல் ஆறு மாத காலம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுப்பது சிறந்தது என்பது உலக சுகாதார நிறுவனம் நமக்கு எடுத்துரைக்கும் ஒன்று. ஏதாவது தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக குழந்தைக்கு ஃபார்முலா பால் கொடுத்தாலும், குழந்தைக்கு தண்ணீர் தவிர்த்து பால் கொடுப்பதே சிறந்தது. தாய்ப்பால் அல்லது ஃபார்முலா பால் என எதை கொடுத்தாலும், அதில் 70% இருக்க கூடிய முக்கிய பொருள் தண்ணீர்தான்.
அதிக அளவு சிறுநீர் கழிப்பது
தாய்ப்பால் குடிக்கும் குழந்தை 10 முதல் 15 முறையோ அல்லது அதற்கு மேலோ சிறுநீர் கழிப்பது சாதாரணமான ஒன்று, இதை நினைத்து பயப்பட வேண்டியதில்லை என்கிறார் பாரதி. உடலுக்குள் செல்லும் நீர் தான் உடலால் தேவையானவற்றை உறிஞ்சப்ப்பட்டு மீதம் இருக்கும் கழிவு சிறுநீராக வெளியேற்றப்படும். குழந்தை போதுமான அளவு தாய்ப்பால் குடிக்கும் போது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது ஆபத்தானது அல்ல.
ஆறு மாதத்திற்கு முன் ஏன் தண்ணீர் தரக் கூடாது?
நாம் குடிக்கும் தண்ணீர், குளிர்பானங்கள், பழசாறு, அல்லது நீர் பொருட்கள் என அனைத்தும், நமது உடலில் இருக்கும் சிறுநீரகத்தால் தேவையவற்றை எடுத்துக் கொண்டு, தேவையற்றவற்றை கழிவுகளை சிறுநீராக மாற்றி உடலில் இருந்து வெளியேற்றி விடும். உடலின் எடை மற்றும் உயரத்திற்கு ஏற்ப சிறுநீரகம் அதன் வேலையை சரியாக செய்யும். தேவையை விட அதிகமாக தண்ணீர் குடிக்கும் போது, அது சிறுநீரகத்தின் பணியை அதிகரிப்பதால், நாளடைவில் சிறுநீரகம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும். இதன் காரணமாகவே குழந்தைக்கு தாய்ப்பால் தவிர எதுவும் கொடுக்க கூடாது என கூறுகிறார்கள்.
திட உணவு சாப்பிடும் குழந்தைக்கு தண்ணீர்
குழந்தையின் ஆறு மாதத்திற்கு பிறகு, அவர்களுக்கு திட உணவுகளை கொஞ்சம் கொஞ்சமாக பழக்குவோம். அப்போது அவர்களுக்கு நான்கு வாய் உணவிற்கு பிறகு சிறிது தண்ணீர் கொடுப்பது சிறந்து. அது குழந்தைகள் விழுங்க இதமாகவும், எளிதாகவும் இருக்கும். இதனால் எந்த பாதிப்பும் வாராது என்கிறார் மருத்துவர். ஏன்னென்றால், எளிதான செரிமானத்திற்கும், குழந்தைகள் மலம் கழிக்கும் போது சிரமத்தை ஏற்படுத்தாமல் இலகுவாகவும் இருக்கும்.
தண்ணீர் குடிப்பதால் மட்டும் நீர் உடலுக்கு கிடைக்கிறதா?
நாம் குடிக்கும் தண்ணீரில் இருந்து மட்டும், நம் உடலுக்கு போதுமான நீர் கிடைக்கிறதா என்றால் இல்லை. நாம் சாப்பிடும் காய்கறிகள் மற்றும் பழங்களில் இருந்தும் நீர் சத்து நம் உடலுக்கு கிடைக்கிறது. குழந்தைகளுக்கு திட உணவை அறிமுக படுத்தும் போது, நீர் சத்துக்கள் அதிக அளவில் இருக்கும் காய்களான சௌசௌ, சுரைக்காய், பூசணிக்காய் போன்ற காய்கறிகளை கொடுக்கலாம். ஒரு வயது குழந்தைக்கு தாய்ப்பால், நீர் சத்து நிரம்பிய உணவு பொருட்கள், மற்றும் தண்ணீர் என மொத்தமாக 800 மில்லி லிட்டர் வரை கொடுக்கலாம். குழந்தையின் எடையை பொறுத்து அவர்களுக்கான நீரின் தேவை மாறுபடும். தண்ணீரை காய்ச்சி ஆற வைத்து கொடுப்பது நலம்.
தண்ணீர் தவிர்த்து வேறு என்ன கொடுக்கலாம்?
ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைக்கு பால் கொடுக்கலாம். அது 400-500 மில்லிக்கு மிகாமல் இருப்பது நல்லது. குழந்தைக்கு நீரை சேர்த்து அடித்து வடிகட்டிய பழச்சாறை கொடுப்பதை விட, முழு பழமாக சாப்பிட கொடுப்பது, பழத்தில் இருக்கும் அனைத்து சத்துக்களும் உடலுக்கு கிடைக்கும். பழச்சாறாக கொடுக்கும், பழத்தில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் நார்சத்துக்கள் வெளியேறிவிடுகிறது என்பது மருத்துவரின் கருத்து. அடுத்ததாக, தாய்ப்பாலிற்கு அடுத்த அற்பதமான சுத்தமான ஒன்று இளநீர். ஆறு மாதத்திற்கு அதிகமாக இருக்கும் குழந்தைகளுக்கு இளநீர் கொடுக்கலாம். இதில் இருந்து போதுமான நீர்ச்சத்து மற்றும் உப்புச்சத்து உடலுக்கு கிடைக்கிறது.
கொடுக்க கூடாதது
டீ, காபி கண்டிப்பாக கொடுக்க கூடாது. டீ, காபி குடிக்கும் குழந்தைகள், அதிக உத்வேகத்துடனும், புத்துணர்ச்சியோடும் இருப்பார்கள். இது நல்லது தானே என்றால், இதில் இருக்கும் பிரச்சனைகளையும் முழுதாக கேளுங்கள். டீ, காபி குடிப்பதால், குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளுக்கு டீ, காபி கொடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இதில் முக்கியமான ஒன்று, இது பசி உணர்வை குறைத்து, குழந்தையின் எடையை அதிகரிக்க முடியாமல் போக வழிவகுக்கும்.



Click it and Unblock the Notifications
