Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
ஆண்களே! உங்களுக்கு மலட்டுத்தன்மை பிரச்சனை இருக்கான்னு எந்த வயசுல செக் பண்ணனும் தெரியுமா?
Fertility Testing In Tamil: இன்றைய நாளில், பல தம்பதிகள் கருவுறாமை பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். மாறி வரும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற பழக்கங்கள் போன்ற பல காரணங்களால், உங்களுக்கு கருவுறாமை பிரச்சனை ஏற்படலாம்.
ஆரோக்கியமான உணவுகளோடு, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்களை பின்பற்றுவதை உறுபடுத்திக் கொள்ளுங்கள். இது உங்கள் உடல் ஆரோக்கியத்தோடு, கருவுறுதலுக்கான வாய்ப்பையும் அதிகரிக்கும். ஒரு குடும்பத்தைத் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தால், உங்கள் கருவுறுதலைக் கருத்தில் கொள்வது சிறந்தது.

பல காரணிகள் கருவுறுதலைப் பாதிக்கும் அதே வேளையில், வயதும் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், உங்கள் கருவுறுதலில் வயது ஒரு குறிப்பிடத்தக்க பாத்திரத்தை வகிக்கிறது. மலட்டுத்தன்மையை பரிசோதிக்க சரியான நேரம் எது என்பதை இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
மலட்டுத்தன்மைக்கு எந்த வயதில் பரிசோதனை செய்ய வேண்டும்?
பழமொழி சொல்வது போல், உயிரியல் கடிகாரம் உண்மையானது. ஆனால் அது அனைவருக்கும் ஒரே மாதிரியாக வேலை செய்யாது. அதாவது, உங்கள் நண்பர் அல்லது சகோதர, சகோதரிக்கு 24 வயதில் குழந்தை பிறந்ததால், உங்களுக்கும் 24 வயதிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.
எல்லாருடைய உடலும், வாழ்க்கை முறையும் மற்றும் பாலியல் வாழ்க்கையும் இங்கு ஒரே மாதிரி இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இருப்பினும், ஒரு பொதுவான வழிகாட்டுதல் என்னவென்றால், 20 வயது மற்றும் 30களின் முற்பகுதியில் உள்ள பெண்கள் பொதுவாக இயற்கையாக கருத்தரிப்பதற்கான சிறந்த வாய்ப்பைக் கொண்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஏனெனில், கருவுறுதலுக்கான வாய்ப்பு 35 வயதிற்குப் பிறகு படிப்படியாகக் குறைகிறது, 40 வயதிற்குப் பிறகு வேகமாகக் குறைகிறது. உங்கள் வயது மற்றும் உடல் இரண்டும் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டுள்ளது. ஆதலால், வயதாகும்போது, உங்கள் உடலில் இயற்கையாக செயல்படும் ஹார்மோன் எல்லாம் குறைய ஆரம்பிக்கும்.
20 வயது
உங்கள் 20 வயதுகளில் கருவுறுதலைப் பரிசோதிப்பது பொதுவான சிந்தனையாக இருக்காது. ஆனால் அது புத்திசாலித்தனமான ஒன்று. இது உடலிலுள்ள சாத்தியமான சிக்கல்களை முன்கூட்டியே கண்டறிந்து, மருத்துவ தலையீடுகளுக்கு போதுமான நேரத்தை வழங்கும்.
30 வயது
கருவுறுதல் 30 வயதுகளின் முற்பகுதியில் ஒப்பீட்டளவில் வலுவாக உள்ளது. ஆனால் சோதனையை கருத்தில் கொள்ள இது ஒரு நல்ல நேரம். சோதனையானது எதிர்காலத்தில் உங்கள் வாய்ப்புகளைப் பாதிக்கக்கூடிய அடிப்படைச் சிக்கல்களை அடையாளம் காண முடியும்.
35 வயதிற்கு பிறகு
35 வயதிற்குப் பிறகு கருவுறுதல் கணிசமாகக் குறைகிறது. இந்த காலகட்டத்தில் நீங்கள் கருத்தரிக்க விரும்பினால், பரிசோதனை செய்வது மிகவும் முக்கியமானது.
கருவுறுதலை பாதிக்கும் பிற காரணிகள்
பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) மற்றும் எண்டோமெட்ரியோசிஸ் போன்ற சுகாதார நிலைகள் எந்த வயதிலும் கருவுறுதலை பாதிக்கலாம். அதேபோல ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களால் கருவூறாமை பிரச்சனை ஏற்படலாம். புகைபிடித்தல், அதிகப்படியான மது அருந்துதல் மற்றும் தவறான உணவுமுறை போன்ற வாழ்க்கை முறை காரணிகளும் கருவுறுதலை பாதிக்கும்.
இறுதிக் குறிப்பு
நீங்கள் எப்போது மலட்டுத்தன்மையை பரிசோதிக்க வேண்டும் என்பதற்கு அனைவருக்கும் பொருந்தக்கூடிய பதில் இல்லை என்றாலும், உங்கள் 30ஆவது வயதில் மலட்டுத்தன்மையை பரிசோதித்துக்கொள்வது சிறந்தது. குறிப்பாக உங்களுக்கு ஒரு குடும்பத்தைத் தொடங்கும் திட்டம் இருந்தால், அப்போதும் நீங்கள் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications
