Latest Updates
-
ஜூன் 13-ல் சுக்கிரன் சிம்ம ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
இனிமே டீ குடிக்கும் போது இந்த 5 உணவுகளை தெரியாம கூட சாப்பிடாதீங்க - இல்லனா உங்களுக்குத்தான் ஆபத்து -
இதுல உங்க கை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. உங்க உண்மையான குணத்தை சொல்றோம்.. -
அடுத்தமுறை தேங்காய் சட்னியை இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
1 கப் மீல் மேக்கர் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்களை காதலிக்க எல்லோரும் ஆசைப்படுவார்களாம் - நீங்க பிறந்த மாதம் இதுல இருக்கா? -
எச்சரிக்கை! இந்த 5 பழங்களை அதிகமா சாப்பிடாதீங்க.. இல்லன்னா முகப்பரு அதிகமா வந்துடும்.. -
இந்தியாவில் மது விற்பனையில் முன்னணியில் உள்ள டாப் 5 மாநிலங்கள் - தமிழ்நாடு முதல் இடத்தில் இல்லையாம் தெரியுமா? -
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் இரட்டை ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
கோவக்காய் வாங்குனா இந்த மாதிரி ஹோட்டல் ஸ்டைலில் பொரியல் பண்ணுங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும்
உங்கள் கர்ப்ப காலத்தின்போது சோம்புக்கீரை உண்ணலாமா?
பெண்கள் தங்களது கர்ப்ப காலத்தில் சோம்புக்கீரை அல்லது சோம்புக்கீரை ஊறுகாய் சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால் இது ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளதா என்பதை அறிந்து உண்ண வேண்டும்.
பெண்கள் தங்களது கர்ப்ப காலத்தில் சோம்புக்கீரை அல்லது சோம்புக்கீரை ஊறுகாய் சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால் இது ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளதா என்பதை அறிந்து உண்ண வேண்டும்.

சோம்புக்கீரை என்பது ஒரு கீரை வகையைச் சேர்ந்த தாவரமாகும். இதில் பல நன்மைகள் அமைந்து இருந்தாலும் அளவான முறையில் உண்ண வேண்டும். சோம்புக்கீரையில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்துக்களை பற்றி முற்றிலும் அறிந்து கொள்ளுங்கள்.

சோம்புக்கீரை என்றல் என்ன?
சோம்புக்கீரை என்பது முற்றிலும் தாவரத்தை சேர்ந்த மூலிகையாகும். பெரும்பாலும் நாம் கீரை வகைகளை சமையலறையில் மற்றும் மருத்துவ மூலிகையாக பயன்படுத்தி வருகிறோம். அதே போல் சோம்புக்கீரையிலும் மிகுந்த சுவை, வைட்டமீன்கள் மற்றும் தாதுக்கள் அடங்கியுள்ளது.

கர்ப்ப காலத்தில் சோம்புக்கீரை உண்ணலாமா?
கர்ப்ப காலத்தில் சோம்புக்கீரையை மிக குறைந்த அளவில் மட்டுமே சாப்பிட வேண்டும். மிக அதிக அளவில் சாப்பிடும் போது இது மாதவிடாய் சுழற்சியை ஏற்படுத்தும். மேலும் கர்ப்ப காலத்தில் உங்கள் கருவிற்கு ஆபத்தாக விளையும். சோம்பு ஊறுகாய் மற்றும் சோம்பு எண்ணெய்களை பயன் படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மீறி நீங்கள் சோம்பு எண்ணெய்களை உபயோகிக்கும் போது இது உங்கள் உடலுக்கும் உங்கள் கருவிற்கும் தீங்காகக் கூடும். சோம்புக்கீரை விதைகள் மற்றும் இலைகள் சில மருத்துவ நன்மைகளை கொண்டுள்ளது.

சில நன்மைகள்
1. பாக்டீரியா பாதுகாப்பு
கர்ப்ப காலத்தில் சோம்புக்கீரையை உண்பதால் பாக்டீரியா தொடர்பான தொற்று நோய்களில் இருந்து உங்களை பாதுகாக்கிறது. சோம்புக்கீரையில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பாக்டீரியவுடன் தொடர்புயுடைய நோய்களை வராமல் தடுக்கிறது.

2. எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது
சோம்புக்கீரையில் உள்ள கால்சியம் எலும்பு ஆரோக்கியத்தை மேன்படுத்த உதவுகிறது. மேலும் கருவில் உள்ள உங்கள் குழந்தையின் வளர்ச்சி மற்றும் எலும்பு வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இத்துடன் உங்கள் உடலில் வலுவிழந்த எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

3. கொழுப்பை சரி செய்கிறது
சமையலில் சோம்புக்கீரையை உபயோகிக்கும் போது உங்கள் இரத்த கொழுப்பின் அளவையும் இரத்த குளுக்கோஸ் அளவையும் சீராக வைக்கிறது.

4. இரத்த சோகைக்கு மருந்தாக உள்ளது
சோம்புக்கீரை இரும்புச்சத்து நிறைந்த ஆதாரமாக விளங்குகிறது. எனவே சோம்புக்கீரையில் உள்ள இரும்புச்சத்து உங்கள் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து இரத்த சோகை வராமல் தடுக்கிறது.

5.நச்சுப் பண்பு நீக்கம்
சோம்புக்கீரையில் போதுமான அளவு தாதுக்கள் மற்றும் மக்னீசியம் அடங்கியுள்ளது. இந்த தாதுக்களில் அடங்கியுள்ள நச்சுக்கள் உங்கள் உடலை பாதுகாக்கிறது. இவை உங்கள் எலும்புகளை வலிமை பெற செய்கின்றன. மேலும், சோம்புக்கீரையில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உங்கள் சருமத்தை ஆரோக்கியமானதாக மாற்ற உதவும்.

6. வயிற்றுப்போக்கை போக்குகிறது.
பூஞ்சை தொற்று காரணமாக ஏற்படும் வயற்றுபோக்கை சரி செய்கிறது. உங்கள் உணவில் சோம்புக்கீரையை சேர்க்கும் போது வயிற்றுப்போக்கு காரணமாக ஏற்படும் உடல் நலக் கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது.

7. கரு வளர்ச்சி :
சோம்புக்கீரையில் அதிகபட்ச ஜிங்க் அதாவது துத்தநாகம் அமைந்து உள்ளது. இது உங்கள் கரு வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. மேலும் சோம்புக்கீரை துத்தநாகம் குறைபாட்டை சரி செய்கிறது.

பக்க விளைவுகள்
சோம்புக்கீரையில் நிறைய நன்மைகள் இருப்பதால் இது உடலுக்கு மிகவும் நல்லது. அதே சமையத்தில் இதை அதிகமாக உட்கொள்ளும் போது சில பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.
மாதவிடாய் தூண்டுதல்
கருச்சிதைவு
தோல் எரிச்சல்
எனவே இவற்றை அளவாக சாப்பிட்டு பயன்களை பெற்றுக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications