Latest Updates
-
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்..
கர்ப்பமா இருக்கும் போது நெஞ்சு எரிச்சலா இருக்கா? இத படிங்க...
கர்ப்பமாக இருக்கும் போது ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் நெஞ்சு எரிச்சல். நிறைய கர்ப்பிணிகள் இந்த பிரச்சனைக்கு பெரிதும் அவஸ்தைப்படுவார்கள். இந்த பிரச்சனை கர்ப்பமாக இருக்கும் போது சிலருக்கு ஆரம்பத்தில் மட்டும் ஏற்படும் இல்லையெனில் பிரசவம் வரைக்கும் கூட ஏற்படும். இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு காரணம், பெண்களின் ஹார்மோன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் அதிகமாக சுரப்பதே ஆகும். ஏனெனில் அவை வயிற்றிற்கும், உணவுக்குழாய்க்கும் இடையே உள்ள வால்வானது சரியாக இயங்காமல் போகிறது. இதனால், வயிற்றில் சுரக்கும் அமிலமானது உணவுக்குழாய்க்கு வந்து, எரிச்சலை உண்டாக்குகிறது.
அதுமட்டுமின்றி, கர்ப்பமாக இருக்கும் போது வாந்தி வருவதால், பெண்களால் எதையும் சரியாக சாப்பிட முடிவதில்லை. இதனால் அசிடிட்டி ஏற்பட்டு, நெஞ்சில் எரிச்சல் ஏற்படுகிறது. இத்தகைய பிரச்சனையை நீக்குவதற்கு சூப்பரான சில பொருட்கள் மற்றும் செயல்கள் உள்ளன. அவற்றை சாப்பிட்டாலோ அல்லது செய்தாலோ, எரிச்சலை எளிதில் தடுக்கலாம்.

எலுமிச்சை
எலுமிச்சையை ஜூஸ் போன்று செய்து குடித்தால், நெஞ்சு எரிச்சலை விரைவில் தடுக்கலாம்.

சூயிங் கம்
உண்மையில் சூயிங் கம் சாப்பிட்டால், அதனை மெல்லும் போது, வாயில் சுரக்கும் அதிகப்படியான எச்சிலானது, வயிற்றில் சென்று, அவை வயிற்றில் சுரக்கும் அமிலத்தால் ஏற்படும் ஆபத்தை தடுத்து, எரிச்சலைத் தடுக்கும்.

இஞ்சி
இஞ்சி ஒரு சிறந்த மருத்துவப் பொருள். இந்த இஞ்சியை பயன்படுத்தி பல ஆயுர்வேத மருந்துகள் செய்யப்படுகின்றன. அதிலும் இந்த மருந்துகள் அனைத்தும் வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சிறந்ததாக உள்ளது. எனவே இந்த இஞ்சி கர்ப்பிணிகளுக்கும் மிகவும் சிறப்பானதாக இருக்கும். அதற்கு அவர்கள் டீ போன்று, சூடான நீரில், சிறிது இஞ்சி மற்றும் சர்க்கரையை போட்டு கொதிக்க விட்டு, குடித்தால், நெஞ்சு எரிச்சலைத் தடுக்கலாம்.

பேரிச்சம் பழம்
பேரிச்சம் பழத்தை கொஞ்சம் பாலில் சேர்த்து அதை நன்றாக காய்ச்சி நெஞ்சு எரிச்சலின் போது சாப்பி்ட்டால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.

தண்ணீர்
கர்ப்பிணிகள் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். ஆகவே அவ்வப்போது எரிச்சல் ஏற்படும் போது சிறிது நீரைக் குடித்து வர எரிச்சல் சரியாகும். குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும்.

உணவு மாற்றங்கள்
நெஞ்சு எரிச்சல் இருக்கும் போது, அதிகமான காரம் உள்ள உணவுகள், காப்பைன் உள்ள பானங்கள் மற்றும் எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளால் ஏற்படுவதால், அவற்றை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக அவ்வப்போது, ஏதேனும் ஜூஸை சிறிது சிறிதாக குடித்துக் கொண்டு இருந்தால், எரிச்சல் ஏற்படுவதை கட்டுப்படுத்தலாம்.



Click it and Unblock the Notifications