Latest Updates
-
புதன் உதயத்தால் தொழில் வாழ்க்கையில் புதிய உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
November Matha Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. நவம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
2 கப் சுண்டல் இருந்தா இந்த மாதிரி கொண்டைக்கடலை மசாலா வடை செய்யுங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
Hair Care Tips: முடி ராக்கெட் வேகத்தில் வளரணுமா? அப்ப இந்த விதைகளில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க -
மீந்து போன சாதம் இருக்கா? அப்ப அத வெச்சு பஞ்சு போல சாப்ட்டான சப்பாத்தி செஞ்சு சாப்பிடுங்க.. -
சிம்ம ராசியில் குரு-கேது சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பேன்க் பேலன்ஸ் டபுள் ஆகப்போகுது! -
இந்த 4 ராசி பெண்கள் ரொம்ப ரொம்ப பிடிவாதக்காரர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்குள் கருமையை போக்கணுமா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
வாஸ்து படி கேஸ் அடுப்பு அருகில் வைக்கக்கூடாத பொருட்கள் - இது துரதிர்ஷ்டம் மட்டுமல்ல ஆபத்தும் கூட -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரி இருக்கா? அப்ப ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு சாப்பிடுங்க..
உங்க குழந்தையிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு தைராய்டு பிரச்சினை இருக்குனு அர்த்தமாம்... ஜாக்கிரதை!
தைராய்டு என்பது கழுத்தின் முன் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய சுரப்பி ஆகும். இது குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் உடல் உறுப்புகளின் வளர்ச்சிக்கு உதவும் ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது
தைராய்டு என்பது கழுத்தின் முன் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய சுரப்பி ஆகும். இது குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் உடல் உறுப்புகளின் வளர்ச்சிக்கு உதவும் ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது, அதே நேரத்தில் பெரியவர்களில் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தைராய்டு சுரப்பியில் ஏற்படும் சிக்கல்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

பல நேரங்களில், குழந்தைகளுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்சினைகள் கவனிக்காமல் விடப்படுகின்றன, ஏனெனில் இதன் அறிகுறிகள் மற்ற ஆரோக்கிய பிரச்சினைகளுடன் தவறாக புரிந்து கொள்ளப்பட வாய்ப்புள்ளது. பெரும்பாலான தைராய்டு கோளாறுகள் பெரியவர்களுக்கு ஏற்பட்டாலும், குழந்தைகளுக்கும் இந்த பிரச்சினைகள் ஏற்படலாம்.

ஹைப்போ தைராய்டிசம் Vs. ஹைப்பர் தைராய்டிசம்
ஹைப்போ தைராய்டிசம் மற்றும் ஹைப்பர் தைராய்டிசம் ஆகியவை மிகவும் பொதுவான தைராய்டு பிரச்சினைகளாகும். அறிக்கையின்படி, ஹைப்பர் தைராய்டிசத்தை விட ஹைப்போ தைராய்டிசம் மிகவும் பொதுவானது. ஹைப்போ தைராய்டிசம் என்பது தைராய்டு சுரப்பி குறைவான வினைத்திறன் கொண்டதால் ஏற்படுகிறது, அதாவது தைராய்டு ஹார்மோன்களை மிகக் குறைவாக உற்பத்தி செய்கிறது. இந்த கோளாறை ஏற்படுத்தக்கூடிய நிலை ஹசிமோட்டோவின் தைராய்டிடிஸ் ஆகும், இது பொதுவாக மரபணு மற்றும் குடும்பம் மூலம் ஏற்படுகிறது. பிறவி ஹைப்போ தைராய்டிசம் புதிதாகப் பிறந்த குழந்தைகளில் கண்டறியப்பட்ட மிகவும் பொதுவான தைராய்டு பிரச்சனை என்று கூறப்படுகிறது. மேலும் உங்கள் குழந்தை சிறுவயதிலேயே ஹைப்போ தைராய்டிசத்தையும் உருவாக்கலாம், இது பெரும்பாலும் இளமைப் பருவத்தில் தாக்குகிறது ஆனால் எந்த வயதிலும் ஏற்படலாம். ஹைப்பர் தைராய்டிசம் ஹைப்போ தைராய்டிசத்திலிருந்து வேறுபட்டது. தைராய்டு சுரப்பிகள் அதிகமாக செயல்படும் போது மற்றும் தேவையானதை விட அதிக ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் போது இது நிகழ்கிறது. 10,000 குழந்தைகளில் ஒருவருக்கு இந்த நிலை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது, அதனால்தான் இது மிகவும் அரிதானது.

ஹைப்போ தைராய்டிசத்தின் அறிகுறிகள்
குழந்தைகளில் ஹைப்போ தைராய்டிசத்தின் சில பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:
- சோர்வு மற்றும் ஆற்றல் குறைதல்
- மலச்சிக்கல்
- கரடுமுரடான வறண்ட சருமம்
- வளர்ச்சி விகிதம் குறைதல்
- குளிர் உணர்வு
- தசை வலி
- தாமதமாக பருவமடைதல்
- அடிக்கடி சிராய்ப்பு

ஹைப்பர் தைராய்டிசத்தின் அறிகுறிகள்
ஹைப்பர் தைராய்டிசத்தின் அறிகுறிகள் பின்வருமாறு:
- அதிகரித்த வளர்ச்சி விகிதம்
- கவனம் செலுத்துவதில் சிக்கல்
- சூடாக உணர்தல் அல்லது வேகமாக இதயத் துடிப்பு
- அதிகரித்த பசி, ஆனால் எடை இழப்பு
- தூக்கப் பிரச்சினைகள்
- கை நடுக்கம்
- தசை பலவீனம்

கண்டறிவது எப்படி?
உங்கள் குழந்தைக்கு தைராய்டு நோயின் அறிகுறிகள் ஏதேனும் இருந்தால், அவர்களை குழந்தை மருத்துவரிடம் அழைத்துச் செல்வது நல்லது. குழந்தைகளில் தைராய்டு அளவை சரிபார்க்க சில சோதனைகள் தேவைப்படலாம். ஒரு எளிய இரத்த பரிசோதனை அதை தீர்மானிக்க உதவும். உங்கள் குழந்தைக்கு தைராய்டு பிரச்சினை இருப்பது கண்டறியப்பட்டால், சிகிச்சைத் திட்டம் குறித்து குழந்தைகள் மருத்துவ நிபுணரை அணுகலாம்.



Click it and Unblock the Notifications
