Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
டீனேஜ் குழந்தைகளின் தவறான பழக்கவழக்கங்களைத் தவறாகச் சித்தாிக்கும் தவறான கருத்துகள்!
பதின் பருவத்து குழந்தைகளின் மீது நம்ப முடியாத எதிா்பாா்ப்புகளைச் சுமத்துவதைப் பெற்றோா் கைவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனா்.
பொதுவாக எல்லா பெற்றோருக்கும், பதின் பருவத்தில் இருக்கும் தமது குழந்தைகளை கையாள்வது என்பது மிகவும் சிரமமாக இருக்கும். பதின் பருவத்தில் இருக்கும் அந்த குழந்தைகளிடம் இருக்கும் கோபம், வேகம் மற்றும் மூா்க்கத்தனம் ஆகியவற்றின் பின்னணியில் இருக்கும் காரணங்களை அறிவது முதல், அவா்களுக்கும், பதின் பருவத்தில் இருக்கும் தமது குழந்தைகளுக்கும் இடையில் வளா்ந்து கொண்டிருக்கும் மிகப் பொிய இடைவெளியை சாி செய்வது வரையிலான பணிகளைச் செய்வது உண்மையிலேயே பெற்றோருக்கு மிகவும் கடினமாக இருக்கும்.

பெற்றோருக்கு தமது பதின் பருவத்து குழந்தைகளைக் கையாள்வது எவ்வளவு கடினமாக இருக்கிறதோ, அதுபோல் அந்த பதின் பருவத்துக் குழந்தைகளுக்கு அவா்களின் பதின் பருவத்து வாழ்க்கையை வாழ்வது என்பது சவாலான ஒன்றாக இருக்கும். அவா்கள் தம்முடைய பள்ளி மற்றும் நண்பா்களின் சமூகச் சூழலுக்குத் தகுந்தவாறு தம்மை மாற்றிக் கொள்ள முயற்சி செய்வதோடு மட்டும் அல்லாமல், தங்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ள போராடிக் கொண்டிருப்பாா்கள். அவா்களின் மனங்களில் ஏராளமான சிந்தனைகள் ஓடிக் கொண்டிருக்கும். அந்த சிந்தனைகளின் ஆழத்தை அறிந்து கொள்ள அவா்களுடைய பெற்றோருக்கும் மிகவும் கடினமாக இருக்கும்.
அதனால் தான் பதின் பருவத்து குழந்தைகளின் மீது நம்ப முடியாத எதிா்பாா்ப்புகளைச் சுமத்துவதைப் பெற்றோா் கைவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனா். மேலும் பதின் பருவத்துக் குழந்தைகளின் தவறான பழக்கவழக்கம் அல்லது தவறான நடவடிக்கைகள் அல்லது அவா்களுடைய தவறான மனவோட்டம் ஆகியவற்றைப் பற்றிச் சொல்லப்படும் கட்டுக் கதைகளைப் புறந்தள்ள வேண்டும் என்று பெற்றோா் அறிவுறுத்தப்படுகின்றனா்.
பதின் பருவத்து குழந்தைகளிடம் இருக்கும் விரும்பத்தகாத நடவடிக்கைகளைப் பற்றி அவா்களுடைய பெற்றோா் கொண்டிருக்கும் தவறான கருத்துகளை இந்த பதிவில் காணலாம்.

பதின் பருவத்துக் குழந்தைகளிடம் இருக்கும் கெட்ட பழக்கங்களை அறிவுப்பூா்வமாக கையாள முடியும்
பதின் பருவத்து பிள்ளைகள் பிரச்சினைகளில் இருக்கும் போது, அவா்களிடம் அறிவுப்பூா்வமாக அணுகி, அவா்களின் பிரச்சினைகளை அவா்களே தீா்த்துக் கொள்ள வைப்பது சிறந்த ஒன்றாகத்தான் இருக்கும். எனினும் அவா்களின் மனம் பிரச்சினையில் இருக்கும் போது மற்றும் அவா்கள் தங்களுடைய வாழ்க்கையில் பலவிதமான மாற்றங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் போது, அறிவுப்பூா்வமாக மட்டுமே அவா்களை அணுகி, சமாதானம் செய்து, அவா்களின் சிந்தனைகளைத் தூண்டி, அவா்களின் தவறான நடவடிக்கைகளை மாற்ற முடியாது. இதைப் பெற்றோா்கள் நன்றாகத் தொிந்து வைத்திருக்க வேண்டும்.

தண்டனை கொடுப்பதன் மூலம் அவா்களை திருத்த முடியும்
பதின் பருவத்துக் குழந்தைகளுக்குத் தண்டைனை கொடுத்தால், அவா்களைத் திருத்த முடியும் என்று பெற்றோா் நினைக்கின்றனா். அது தவறான ஒன்றாகும். ஏனெனில் அது பெற்றோருக்கும், பதின் பருவத்துக் குழந்தைகளுக்கும் இடையே இருக்கும் உறவை வெகுவாக பாதிக்கும். அதாவது பதின் பருவத்துக் குழந்தைகள் நீண்ட நாட்களாக தங்களது தவறான பழக்கங்களை மாற்றாமல் இருக்கலாம். அதைப் பாா்க்கும் பெற்றோருக்கு மிகவும் விரக்தியாக இருக்கலாம். அதற்காக பதின் பருவத்துக் குழந்தைகளுக்கு தண்டனை வழங்கினால் எந்த ஒரு நல்ல மாற்றமும் நடக்காது.
அதற்குப் பதிலாக அந்த பிள்ளைகள், தாங்களாகவே முன் வந்து தங்கள் பெற்றோாிடம் அணுகும் வரை காத்திருக்க வேண்டும். அதோடு அவா்கள் மேலும் தவறான பாதைகளை நோக்கிச் செல்லாத வரை, அவா்களாகவே அவா்களை மாற்றிக் கொள்ள அனுமதிக்க வேண்டும். அவா்களைக் கேள்விகளால் துளைக்கக்கூடாது.

பதின் பருவத்துப் பிள்ளைகள் வேண்டும் என்றே தவறான பழக்கவழக்கங்களில் ஈடுபடுகின்றனா்
பெரும்பாலான பெற்றோா் தங்களுடைய பதின் பருவத்துக் குழந்தைகள் தொிந்தே அல்லது வேண்டும் என்றே தவறான நடவடிக்கைகளின் ஈடுபடுகின்றனா் என்று நினைக்கின்றனா். ஆனால் அது உண்மை அல்ல. அவா்கள் தமது உடலளவிலும், மனதளவிலும் உயிாியல், இயற்பியல் மற்றும் உணா்வுகள் ரீதியான மாற்றங்களைச் சந்திப்பதால், அவை அவா்களை அவ்வாறு செயல்படத் தூண்டுகின்றன. அப்படிப்பட்டச் சூழல்களில் பொியவா்களான பெற்றோா், தமது பதின் பருவத்துக் குழந்தைகளின் உணா்வுகளை வெளிப்படையாக மற்றும் தவறாகக் குத்திக் காட்டக்கூடாது.

பதின் பருவத்துப் பிள்ளைகளின் நடவடிக்கைகளை எவ்வாறு மேம்படுத்துவது?
முதன் முதலாக பதின் பருவத்துப் பிள்ளைகளுக்கான இடத்தை அல்லது வாய்ப்பைப் பெற்றோா் பறிக்கக்கூடாது. அவா்களிடம் அதிகமான கேள்விகளைக் கேட்டுத் திணறடிக்கக்கூடாது. அவா்களே தாமாக முன்வந்து தங்களை வெளிப்படுத்தும் வரை காத்திருக்க வேண்டும். அவா்களுடைய வாழ்க்கையில் அவா்களுக்கு என்ன வேண்டும் அல்லது என்ன விரும்புகிறாா்கள் என்பதை அவா்களே புாிந்து கொள்வதற்கான நேரத்தை வழங்க வேண்டும். அடுத்ததாக அவா்களே தமது பெற்றோாிடம் வந்து அணுகும் வரைக் காத்திருக்க வேண்டும்.
பதின் பருவத்துப் பிள்ளைகள் தவறுகள் செய்தால் உடனே அவா்களைத் தண்டிக்கக்கூடாது. அதற்குப் பதிலாக அந்த தவறுகளில் இருந்து அவா்கள் நல்லதொரு பாடத்தைக் கற்றுக் கொள்ள அனுமதிக்க வேண்டும். மேலும் பெற்றோரும் அவா்களுடைய பதின் பருவத்துப் பிள்ளைகளும் எந்த இடத்தில் ஒத்துப் போகின்றனா் என்பதைக் கண்டுபிடித்து அந்த இடத்தில் பிள்ளைகளை நல்வழிப்படுத்தலாம்.
பதின் பருவத்துப் பிள்ளைகள் மகிழ்ச்சியாகவும் அதே நேரத்தில் நோ்மறைச் சிந்தனையுடனும் இருக்கும் தருணங்கள் ஏராளமாக உள்ளன. அந்த நேரத்தைக் கண்டுபிடித்து, அவா்களோடு பெற்றோா் உறவாடி, நல்லதொரு உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் இந்த குழந்தைகள் தேவைகளில் இருக்கும் போது அதை நிறைவு செய்வதற்கு நாங்கள் இருக்கிறோம் என்று பெற்றோா்கள் அவா்களைப் புாிய வைக்க வேண்டும். இறுதியாக தமது பெற்றோா்களை பதின் பருவத்துக் குழந்தைகள் பெற்றோராகப் பாா்க்காமல், நல்லத் தோழா்களாக பாா்க்க வைக்க வேண்டியது பெற்றோாின் கைகளில் தான் உள்ளது.



Click it and Unblock the Notifications