Latest Updates
-
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும்
குழந்தைகளுக்கு பல் விழுந்தா தூக்கி வீசுறோமோ ஏன்? அத பத்திரப்படுத்தினா என்ன ஆகும்?
குழந்தைகளின் பற்கள் கீழே விழுந்தால் அதை ஏன் பத்திரப்படுத்த வேண்டும் என்பதற்கான உண்மையான காரணம் பற்றி இங்கே விரிவாக விளக்கப் பட்டுள்ளது.
குழந்தை பிறந்து தவழ்ந்து நடைபயின்று, பற்கள் முளைத்து பேசும் காலங்கள் அனைத்தும் இனிமையானவை என்றே கூறலாம். உங்கள் குழந்தைக்கு முதல் பற்கள் போடும் போது நாம் நிறையவே சந்தோஷம் அடைவோம்.
ஒரு குறிப்பிட்ட வயதை அவர்கள் அடைந்ததும் பற்கள் விழுந்து முளைக்க ஆரம்பித்து விடும். முதல் பற்கள் விழும் போது சற்று வேதனையும் வலியும் அவர்களுக்கு இருக்கத்தான் செய்யும்.

அகற்றும் விதம்
குழந்தையின் முதல் பற்கள் விழும் போது நிறைய பேர்கள் அதை பாதுகாப்பாக வைக்கின்றனர். இந்தியாவில் உள்ள சில பேர்கள் விழுந்த பல்லை ஒரு காட்டன் துணியில் கட்டி தோட்டத்தில் புதைத்து விடுகின்றனர். ஆனால் அப்படி செய்ய வேண்டாம் என்று அறிவியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அறிவியல் காரணங்கள்
குழந்தையின் விழுந்த பற்களை மண்ணில் புதைக்காமல் அதை பராமரித்து வைப்பது நல்லது என்று அறிவியல் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. குழந்தையின் பற்களிலிருந்து ஸ்டெம் செல்களை பிரித்தெடுத்து குழந்தையின் எதிர்கால சிகச்சைக்கு பயன்படுத்த முடியும் என்கின்றனர்.

தானாக குணமாகுதல்
நமது முழு உடல்களும் செல்களால் ஆனது. நமது உடலில் மூன்று விதமான செல்களும் ஒரே விதமான வேலைகளை செய்து வருகின்றன. இதில் ஸ்டெம் செல்லிற்கு மற்ற செல்களை வளர்க்கும் தன்மை உள்ளது. பற்கள் அல்லது எலும்பு களிலிருந்து சரியான மருத்துவ முறையில் பிரித்தெடுக்கப்படும் ஸ்டெம் செல்கள் பாதிக்கப்பட்ட செல்களை சரி செய்ய உதவுகிறது.

புற்றுநோயை எதிர்த்து போராடுதல்
இந்த ஸ்டெம் செல்லைக் கொண்டு புற்றுநோயை எதிர்த்து போரிட முடியும். புற்றுநோய்க் கிருமிகளை அழிக்கும் ஸ்டெம் செல்கள் நம்முடைய பற்களில் உண்டு என்பது இதுவரை நீங்கள் கேள்விப்பட்டிருக்காத ஒரு விஷயமாகக் கூட இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை.

பாதுகாக்கும் முறை
இந்த ஸ்டெம் செல்களை நீண்ட காலத்திற்கு பராமரிக்க நிறைய மருத்துவ முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நமது எம்பிரியோ செல்களிலிருந்து ஸ்டெம் செல்களை பிரித்தெடுத்து பராமரிப்பு செய்வது நிறைய நன்மைகளை தருகிறது. நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் தற்போது இந்த ஸ்டெம் செல் பராமரிப்பு முறையை நிறைய பணம் செலவழித்து செய்து வருகின்றனர். காரணம் இந்த ஸ்டெம் செல்களை கொண்டு குழந்தைக்கு எதிர்காலத்தில் ஏற்படும் அபாயகரமான நோய் களிலிருந்து அவர்களை காக்க இயலும்.

தற்போதைய ஆராய்ச்சி
தற்போதைய ஆராய்ச்சி தகவல்கள் படி குழந்தைகளிடமிருந்து பெறப்படும் ஸ்டெம் செல்களை விட பெரியவர்களிடமிருந்து பெறப்படும் ஸ்டெம் செல்கள் அதிக வீரியம் வாய்ந்ததாக உள்ளது.

ஸ்டெம் செல் தொழில்நுட்பம்
ஸ்டெம் செல் தெரபி இன்னும் நவீன காலத்தில் முழுவதுமாக வளர்ச்சி அடையவில்லை. இன்னும் இது குறித்து நிறைய ஆராய்ச்சிகள் தொடர்ந்து வண்ணம் உள்ளது. கண்டிப்பாக எதிர்காலத்தில் ஸ்டெம் செல்லை கொண்டு நிறைய ஆச்சர்யமூட்டும் நன்மைகள் வரும் என்பதில் ஐயமில்லை.

உங்களின் தேர்வு
இந்த ஸ்டெம் செல்களை பராமரிக்க நிறைய செலவு செய்யப்பட்டாலும் இதன் நன்மை மிகப் பெரியது. உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை மீண்டும் உயிரூட்ட ஒரு மிகச் சிறந்த வழி என்றே கூறலாம். எனவே உங்களின் தேர்வு ஸ்டெம் செல் தெரபியின் பயனை முழுவதுமாக அடைவதாக இருக்கட்டும்.



Click it and Unblock the Notifications

