Latest Updates
-
அக்டோபர் 17-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
செட்டிநாடு உருளைக்கிழங்கு ரோஸ்ட் ரெசிபி - உருளைக்கிழங்கை இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
100 ஆண்டுகள் கழித்து நவராத்திரியில் உருவாகும் பல ராஜயோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிக்காரர்கள்! -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பணத்தாசை கொண்டவர்களாம் - இவங்களுக்கு பணம்தான் முக்கியமாம் -
உங்கள் கையில் விதி ரேகை இல்லாமல் இருப்பது அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா? உண்மை என்னனு தெரிஞ்சிக்கோங்க -
வாஸ்துப்படி இந்த 5 சிலைகளை வீட்டுல வாங்கி வையுங்க.. வீட்டில் பணப்பிரச்சனையே வராது.. -
தலையணைக்கு அடியில் இந்த 5 பொருட்களில் ஒன்றை வைத்து தூங்குவது உங்களுக்கு சகல நன்மைகளையும் கொடுக்குமாம் -
1 கப் அவலும், 1 வாழைப்பழமும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
2 முட்டை இருந்தா இந்த மாதிரி அவிச்ச முட்டை ஆம்லெட் ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா வேற லெவலில் இருக்கும் -
உங்க தலைமுடி வறண்டு தேங்காய் நார் போல் இருக்கா? அப்ப வீட்டிலேயே இந்த கெரட்டின் ஹேர் மாஸ்க்கை போடுங்க..
சிறுமிகள் விரைவில் பருவமடைய நிறமும் ஒரு காரணமா?

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை பதின் பருவத்தில்தான் பெண் குழந்தைகள் வயதிற்கு வந்தனர். அப்பொழுதுதான் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் மாதவிலக்கு பற்றியும் அவர்களுக்குள் ஒரு புரிதல் இருக்கும். ஆனால் இந்த நிலை படிப்படியாக மாறி தற்போது 7 வயதில் இருந்து 9 வயதிற்குள் பெரும்பாலான பெண் குழந்தைகள் பூப்படைகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தும் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரில் உள்ள மவுன்ட் சினாய் மருத்துவப் பள்ளி, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த, சின்சினாட்டி குழந்தைகள் மருத்துவமனை ஆகியவை இணைந்து சமீபத்தில் புதிதாக ஒரு ஆய்வு நடத்தின.
ஆய்வுக்காக 6 வயது முதல் 8 வயது வரை உள்ள ஆரோக்கியமான உடல் தகுதி, சரியான உடல் எடை, அதிக பருமன் உள்ளவர்கள், நிற பேதங்கள் உள்ளவர்கள், என பலதரப்பை சேர்ந்த 1,239 சிறுமிகள் எடுத்துக் கொள்ளப்பட்டனர். அவர்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.
சிறுமிகளின் உடல் எடை, அவர்களின் உணவு மற்றும் இதரப் பழக்கங்கள், நிறம், மன அழுத்தம், சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கும் பூப்படைவதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.
சிறுமிகளின் அதிக உடல் எடையால் உடலில் உள்ள கொழுப்பு சத்தானது ஹார்மோன்களை விரைவில் தூண்டி அதிக அளவு சுரக்கச் செய்கின்றன. இதுவே சிறு வயதிலேயே சிறுமிகள் வயதுக்கு வர முக்கிய காரணம். அவர்களது உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் மார்பக வளர்ச்சியை தூண்டுகின்றன. அதனால், பூப்படையும் முன்பே மார்பகங்கள் வளர்ச்சி அடைகின்றன.
சிறுமிகள் வயதிற்கு வருவதில் உடலின் நிறத்துக்கும் முக்கிய பங்கு உள்ளது. நல்ல நிறமான சிறுமிகளை விட கருப்பு நிற சிறுமிகள் முன்கூட்டியே பூப்பெய்துகின்றனர் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த ஆய்வு முடிவு குழந்தைகள் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி குறித்து வெளியாகும் சிறப்பு மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications
