Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
பெற்றோர்களே! உங்க குழந்தைங்கள நைட் 'இப்படி' தூங்க வைக்குறதுதான் நல்லதாம்... அது ஏன் தெரியுமா?
குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியம் தூக்கத்தின் பல்வேறு கூறுகளால் பாதிக்கப்படுகிறது. இது மாறும் சிக்கலான செயல்முறையாகும். நினைவக ஒருங்கிணைப்பு, வளர்ச்சி ஹார்மோன் வெளியீடு மற்றும் திசு சரிசெய்தல் உட்பட தூங்கும் போது உடல் முக்கியமான செயல்பாடுகளை மேற்கொள்கிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தூக்கம் மிக அவசியமானது. இது நம் உடல் ஆரோக்கியத்தோடு நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. தங்கள் வயதுக்கு ஏற்றவாறு தூங்காத குழந்தைகளுக்கு, நடத்தை மற்றும் வளர்ச்சி தொடர்பான பிரச்சனைகள் அதிகம் இருக்கும். சரியான தூக்க முறை இல்லாததால், உங்கள் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள்.

இதனால், சில விஷயங்களில் உங்கள் குழந்தைகள் குறைவான கவனம் செலுத்தலாம். அவர்கள் அதிக எரிச்சல், கற்றல் குறைபாடு, நினைவாற்றல் குறைவு மற்றும் பிற்பகுதியில் குழந்தை பருவத்தில் மற்றும் இளம்பருவத்தில் கூட கற்றல் குறைபாடுகளால் பாதிக்கப்படலாம்.
சரியாக தூங்காத குழந்தைகளுக்கு வளர்ச்சி தொடர்பான பிரச்சினைகள், குறிப்பாக உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் இருப்பதாக தெரிகிறது. கூடுதலாக, நாள்பட்ட தூக்கமின்மையை அனுபவிக்கும் குழந்தைகளுக்கு உடல் பருமன், நீரிழிவு மற்றும் இருதய பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை பராமரிக்க, சரியான படுக்கை நேர அட்டவணையை எவ்வாறு உருவாக்குவது என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
படுக்கையறை தூங்குவதற்கு மட்டும்
ஆரோக்கியமான படுக்கை நேர வழக்கத்தை உருவாக்குவதற்கு, குழந்தையை தூங்க வைக்கும் போது மட்டுமே படுக்கையின் பயன்பாட்டை ஒருவர் கட்டுப்படுத்த வேண்டும். இது குழந்தை தூங்குவதற்கான நேரம் என்பதால் தான் படுக்கைக்கு அழைத்துச் செல்லவதாக அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும்.
படுக்கையில் விளையாடி டிவி பார்க்க வேண்டாம்
படுக்கையை ஓய்வு நேரத்துக்கு அல்லது உட்கார்ந்து டிவி பார்ப்பதற்கும் விளையாடுவதற்கும் பயன்படுத்த வேண்டாம். அப்படிச் செய்வதால் குழந்தை எப்போதும் படுக்கையிலே இருப்பார்கள். இது அதிக சுறுசுறுப்பாக இருப்பதை தடுத்து, அவர்களை சோம்பேறியாக்கலாம். படுக்கை என்பது தூங்குவதற்கான இடமாக மட்டுமே இருக்க வேண்டும்.
ஒரு நல்ல சூழலை உருவாக்குங்கள்
குழந்தையை தூங்க வைப்பதற்கு முன் 30 நிமிடங்கள் அவர்களை அமைதியாக இருக்க வையுங்கள். உங்கள் குழந்தை தூங்குவதற்கு முன்பு, கதைகளை அவர்களுக்கு சொல்வது, பின்னணியில் லேசான இசையை இசைக்க வைப்பது, தூக்கம் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் திரை நேரத்தைத் தவிர்ப்பது போன்றவற்றை செய்ய வேண்டும்.
இவை உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும், அவர்களின் நிம்மதியான தூக்கத்திற்கும் உதவும். இவை உங்கள் குழந்தையின் பழக்கமாக மாறும் வகையில் அன்றாடம் வழக்கமான விஷயமாக கடைபிடியுங்கள்.
தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன் சாப்பிட வையுங்கள்
உங்கள் குழந்தையின் தூக்கத்தைத் தூண்டுவதற்கு குறைந்தபட்சம் 2 நேரத்திற்கு முன் உணவைக் கொடுப்பது நல்லது. இதனால், சரியான முறையில் செரிமானம் நடக்கும் மற்றும் குழந்தைக்கு வாயு பிரச்சினைகள் ஏற்படாது.
உணவை தாமதமாக குழந்தைகளுக்கு வழங்கினால், அது அவர்களின் செரிமான செயல்முறையை பாதிக்கலாம் மற்றும் தூக்கமின்மை பிரச்சனையை ஏற்படுத்தலாம். மேலும், இது குழந்தைகள் தூங்கும் நேரத்தை தாமதப்படுத்தலாம்.
தூக்க அட்டவணையைப் பின்பற்றவும்
தினமும் படுக்கை நேரமும், எழுந்திருக்கும் நேரமும் ஒரே மாதிரியாக இருப்பதை உறுதிசெய்வது சர்க்காடியன் தாளத்தை உருவாக்க உதவும். இது குழந்தைகளிடையே நல்ல தூக்கத்தை ஒருங்கிணைக்கவும் நல்ல தூக்க சுகாதார நடைமுறையை உருவாக்கவும் உதவுகிறது.



Click it and Unblock the Notifications
