Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
கர்ப்பிணி பெண்கள் பூசணிக்காய் சாப்பிடலாமா? கூடாதா?
பூசணிக்காய் என்பது ஒரு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு காய்கறியாகும். கர்ப்ப காலத்தின் போது பூசணிக்காயை கர்ப்பிணிப் பெண்கள் உண்ணலாமா கூடாதா என்ற சந்தேகம் உங்களுக்கு இ
பூசணிக்காய் என்பது ஒரு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு காய்கறியாகும். கர்ப்ப காலத்தின் போது பூசணிக்காயை கர்ப்பிணிப் பெண்கள் உண்ணலாமா கூடாதா என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கும். பூசணிக்காயை கர்ப்ப காலத்தில் சாப்பிடுவதால் சில நன்மைகளும் உள்ளன அதே நேரத்தில் சில பக்க விளைவுகளும் உள்ளன.

கர்ப்ப காலம் என்பது கர்ப்பிணிப் பெண்களுக்கும் அவர்களின் குடுப்பதினார்க்கும் மிகவும் மகிழ்ச்சியான விஷயம். இந்த நேரத்தில் மிகவும் ஆரோக்கியமான மற்றும் நம்மைப் பயக்கும் உணவுகளைத் தேர்ந்து எடுத்து உண்ண வேண்டியது அவசியம். ஒவ்வொருத்தருடைய கர்ப்ப காலமும் அவர்கள் உண்ணும் உணவும் ஒவ்வொருவரின் உடலைப் பொறுத்து மாறுபடும். இப்போது நீங்கள் பூசணிக்காய் மற்றும் அதன் விதைகளை உண்ண வேண்டுமானால் அதன் பயன்கள் மற்றும் விளைவுகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

வயிற்றுப் பிடிப்புகள்
கர்ப்ப காலத்தில் பூசணிக்காய் மற்றும் அதன் விதைகளை உண்பதால் வயிற்றில் ஏற்படும் பிடிப்புகளைக் குறைக்க உதவுகிறது. இதனை நீங்கள் வேகா வைத்தோ, வறுத்தோ அல்லது தனியாக சமைத்தோ உண்ணலாம்.

ஊட்டச்சத்துக்கள்
பூசணிக்காய் ஊட்டச்சத்திற்கு ஒரு நல்ல ஆதாரமாக விளங்குகிறது. இதில் புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், வைட்டமின்கள், இரும்பு, கால்சியம், நியாசின் மற்றும் பாஸ்பரஸ் அடங்கியுள்ளதால் குழந்தை மற்றும் தாய்க்குத் தேவையான அனைத்து ஆரோக்கிய நன்மைகளையும் கொடுக்கிறது.

வயிற்றுப்போக்கு
வயிற்றுப்போக்கு என்பது கர்ப்ப காலத்தில் ஏற்படும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாகும். எனவே கர்ப்ப காலத்தில் நீங்கள் சாப்பிடும் பூசணிக்காய் குடலில் இருக்கும் புழுக்களை அகற்றி வயிற்றினை சுத்தம் செய்து அரிக்கும் தோலழற்சி போன்றவற்றைக் குறைக்கிறது. மேலும் கர்ப்ப காலத்தில் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளைச் சரி செய்கிறது.

இரத்த சர்க்கரை அளவு
கர்ப்ப காலத்தில் ஏற்பாடு இரத்த சர்க்கரையின் அளவை குறைப்பதற்கு பூசணிக்காய் உதவுகிறது. அத்துடன் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கிறது. ஆனால் பூசணிக்கையுடன் எந்த வித இனிப்புகளையும் சேர்க்காமல் அவற்றைத் தனியாகச் சமைத்துச் சாப்பிட வேண்டும்.

மலச்சிக்கல்
பூசணிக்காயில் புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் கர்ப்பிணிப் பெண்களின் செரிமான அமைப்பு உறுதி செய்யப்பட்டு குடல் இயக்கங்கள் சரியாக வேலை செய்வதினால் மலச்சிக்கல் தடுக்கப்படுகிறது

பக்கவிளைவுகள்
பூசணிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் சில பக்க விளைவுகள் உள்ளன. எனவே அவை என்ன என்பதை தெரிந்து கொண்டு பூசணிக்காயை சாப்பிடுங்கள்.

ஒவ்வாமை எதிர்வினை:
சிலருக்கு பூசணிக்காய் ஒவ்வாமை எதிர் விளைவுகளை ஏற்படும். பூசணிக்காயில் உள்ள விதைகள் அதிக அளவில் ஹார்மோன்களை வெளியிடுவதால் அவை கர்ப்பிணி பெண்களுக்கு ஒவ்வாமையை ஏற்படும் பண்பினை கொண்டுள்ளது.

அதிக அளவு உட்கொள்ளல்
பூசணிக்காயில் நன்மைகள் இருப்பதினால் அதனை அதிக அளவில் உட்கொள்ளுவதும் பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். அதிக அளவில் பூசணிக்காயை உட்கொள்ளும் போது தலைவலி, வயிற்று வலி, இரைப்பை தொல்லை, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்பட வழிகள் உள்ளன.

பூசணிக்காய் விதைகள்
பூசணிக்காயில் உள்ள ஆரோக்கிய நன்மைகளை போல பூசணிக்காய் விதைகளும் சில ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளன.

ஆரோக்கியமான இதயம்
பூசணி விதைகளைக் கர்ப்ப காலத்தில் உட்கொள்ளுவதால் உங்கள் உடலுக்குத் தேவையான பாதியளவு மெக்னீசியத்தினை தருகிறது. இந்த மெக்னீசியமானது உங்கள் இதயத் துடிப்பின் அளவினை சீராக வைத்து இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

நோயெதிர்ப்பு மண்டலம்
பூசணி விதைகளில் துத்தநாகம் அதிகமாக உள்ளதால் கர்ப்பிணிப் பெண்களின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்க உதவுகிறது.

நீரிழிவு நோய்
பொதுவாக கர்ப்ப காலத்தில் பெண்கள் நீரழிவு நோய்களினால் பாதிக்கப்படுவது இயல்பு. பூசணி விதைகளில் இன்சுலின் கட்டுப்படுத்தும் தன்மை இருப்பதினால் நீரிழிவு நோயின் அளவினை குறைத்து கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

தூக்கம்
கர்ப்பிணிப் பெண்கள் தூக்கம் வராமல் தவிப்பது இயல்பு தான். எனவே நீங்கள் தூங்கச் செல்லும் சில மணி நேரங்களுக்கு முன்பு பூசணி விதைகளை உட்கொள்ளுவதால் அதில் இருக்கும் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் உங்கள் உடலில் இருக்கும்தூக்க ஹார்மோன்களான மெலடோனின் ஆக மாறி தூக்கத்தினை ஏற்படுத்துகிறது. இதனால் நீங்கள் இரவு முழுவதும் நிம்மதியான துக்கத்தினை பெற முடியும்.

மாதவிடாய்
மாதவிடாய் நின்றதினால் சிலருக்கு இரத்த அழுத்த அளவு, தலைவலி மற்றும் மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும் இவற்றை எல்லாம் சரி செய்ய பூசணிக்காய் விதைகள் உதவும். பூசணிக்காய் விதைகளில் இயற்கையான பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் உள்ளன. இவை உடலில் நல்ல கொழுப்புகளை ஊக்குவிப்பதன் மூலம் மாதவிடாய் நின்றதினால் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யும்.

கரு வளர்ச்சி
பூசணிக்காய் விதைகளில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால் கருவின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. எனவே பூசணிக்காய் மற்றும் அதன் விதைகளை சாப்பிட்டு கர்ப்ப காலத்திற்கு தேவையான ஆரோக்கிய நன்மைகளை பெறுங்கள்.



Click it and Unblock the Notifications