Latest Updates
-
ஜூன் 30-ல் நடக்கும் ராகு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
மதியம் லன்ச் பாக்ஸ்-க்கு இந்த ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
ஃபேஸ் பேக் Vs ஃபேஸ் மாஸ்க் - இவற்றில் சிறந்தது எது? -
ஜூன் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமழை கொட்டப்போகுது! -
முருங்கைக்கீரை கடையலும், வாழைக்காய் வறுவலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
எகிறும் முட்டை விலை.. இந்த முட்டைக்கு இணையான புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகள் இதோ! -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 18 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள்
பெற்றோர்களே! உங்க குழந்தையை எல்லா கலாச்சாரத்தையும் மதிக்கும் நல்ல குழந்தையாக வளர்ப்பது எப்படி தெரியுமா?
இந்தியா பல்வேறு மொழிகள், கலச்சாரங்கள் மற்றும் பண்பாடுகள் நிறைந்த நாடு. இந்தியா போன்ற ஒரு நாட்டில், வெவ்வேறு கலாச்சாரங்களை ஏற்றுக்கொள்ளும் ஒரு குழந்தையை வளர்ப்பது சிறந்தது. இது குழந்தைகளின் எதிர்காலத்திற்கு மிகவும் நல்லது.
ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் நல்ல மற்றும் தேவையான பழக்கவழக்கங்கள் மற்றும் செயல்களை கற்றுக்கொடுப்பது பெற்றோரின் கடமை. ஆனால், எல்லா பெற்றோர்களும் தங்கள் சொந்த கலாச்சாரத்தை மற்றுமே தங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுப்பார்கள். இதனால், உங்கள் குழந்தைகள் பெரியவர்கள் ஆகும்போது, சிரமப்பட வேண்டியிருக்கும்.

படிப்புக்காக அல்லது வேலைக்காக வெளியே செல்லும்போது, மற்ற கலச்சாரங்களை ஏற்றுக்கொள்ள உங்கள் பிள்ளை மிகவும் சிரமப்படலாம். அதனால், உங்கள் பிள்ளைக்கு மற்ற கலாச்சாரங்களைப் பற்றிக் கற்றுக்கொடுப்பது அவர்களை மேலும் பரந்த மனப்பான்மை கொண்டவர்களாக மாற்ற உதவும். உங்கள் குழந்தை பாதுகாப்பற்றதாக இருந்தால் அல்லது பிற கலாச்சார நடைமுறைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அவர்களுக்கு நீங்கள் தான் கற்பிக்க வேண்டும்.
மற்ற கலச்சாரங்கள், உணவு மற்றும் உடைகள் போன்றவற்றை கற்றுத்தெரிவதன் மூலம், அவர்கள் அதிக சகிப்புத்தன்மை கொண்ட பெரியவர்களாக மாறலாம். மற்றவர்களின் கலாச்சாரத்தை நிராகரிக்காத ஒரு குழந்தையை வளர்ப்பதற்கான சில பெற்றோருக்குரிய குறிப்புகள் பற்றி இங்கே காணலாம்.
அனைத்து கலாச்சார பின்னணி கொண்ட மக்களை மதிக்கவும்
மற்றவர்களின் கலாச்சார நடைமுறைகளைக் கேட்கவும், அவற்றை மதிக்கவும் உங்கள் பிள்ளைக்குக் கற்றுக் கொடுங்கள். அவர்களால் தொடர்புபடுத்த முடியாத ஒன்றைக் கண்டால் அவற்றை பற்றி தவறாக கூற வேண்டாம். அவர்களுக்குப் புரியாத விஷயங்கள் அல்லது நடைமுறைகளுக்குக் கேள்விகள் கேட்பது மற்ற கலாச்சாரங்களைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவும்.
குழந்தைகளை பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்ளும் வகையில் வளர்க்க, உங்கள் வார்த்தைகளைக் கேட்பதை விட, உங்கள் செயல்களைக் கவனிப்பதன் மூலம் அவர்கள் பொதுவாகக் கற்றுக்கொள்வது போல நீங்களும் அதைப் பயிற்சி செய்வது முக்கியம்.
எந்தவொரு தனிப்பட்ட தீர்ப்பும் இல்லாமல் குழந்தைகள் பொதுவாக பெற்றோரிடமிருந்து இந்த கருத்துக்களை உள்வாங்குவதால், நீங்கள் வீட்டில் கலாச்சாரம் பற்றி தேவையில்லா விஷயங்களை பரப்ப வேண்டாம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
பிற கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்களுடன் நட்பு கொள்ளுங்கள்
பள்ளி, விளையாட்டு மைதானம், கல்வி அல்லது சுற்றுப்புறம் என மற்ற கலாச்சார பின்னணியில் உள்ள அனைத்து குழந்தைகளுடன் நட்பு கொள்ள உங்கள் குழந்தைக்கு கற்றுக்கொடுங்கள். இது அவர்கள் கல்லூரி அல்லது வேலைக்காக வெளியே செல்லும்போது பல்வேறு பின்னணியைச் சேர்ந்த நபர்களை சந்திப்பது, அவர்களுடன் பயணிப்பது அவர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.
அனைத்து வகையான விடுமுறைகளையும் மரபுகளையும் கொண்டாடுங்கள்
உங்கள் சொந்த கலாச்சாரம் மட்டுமல்ல, உங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களின் கலாச்சாரத்தின் திருவிழாக்கள் மற்றும் பாரம்பரிய நடைமுறைகளில் பங்கேற்க வேண்டும். இந்த விழாக்களையும் பண்டிகைகளையும் நீங்களும் உங்கள் குடும்பத்துடன் கொண்டாடலாம். இது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் மற்ற கலாச்சாரங்களைப் புரிந்து கொள்ளவும், மகிழ்ச்சியான சூழலில் இருக்கவும் உதவும். இது கலாசார பிணைப்புக்கான சிறந்த வாய்ப்பை உருவாக்கும்.
உணவு மூலம் கலாச்சாரங்களை ஆராயுங்கள்
வெவ்வேறு கலாச்சாரங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கான சிறந்த ஊடகங்களில் ஒன்று உணவு. ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் தனித்தனி உணவுகள் உள்ளன. அவற்றை உண்பது மற்றும் அவர்களின் உணவுக் கதைகளைப் பற்றி அறிந்துகொள்வது உங்கள் குழந்தையின் உணவு விருப்பத்தையும் புரிதலையும் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், பிற கலாச்சாரங்களைப் பற்றிய அறிவையும் பாராட்டையும் கொடுக்கும்.
பயணம்
உங்கள் குழந்தைகளும் நீங்களும் கற்றுக்கொள்ளவும் வளரவும் சிறந்த வழிகளில் ஒன்று பயணம். ஏனெனில், பயணங்கள் பல்வேறு விஷயங்களை நமக்கு கற்றுக்கொடுக்கும் மற்றும் நம்மை புதுப்பிக்க உதவும். வெவ்வேறு இடங்கள், அவற்றின் உணவு, வாழ்க்கை முறை, மதிப்புகள் மற்றும் பலவற்றைப் பற்றிய பல விஷயங்களை உங்களுக்கு பயணங்கள் கற்பிக்கிறது.
உங்கள் சொந்த கலாச்சாரத்திலிருந்து வேறுபட்ட ஒரு இடத்தில் வாழ்வது உண்மையிலேயே, மற்ற கலாச்சாரங்களைக் கற்கவும், உள்வாங்கவும் மற்றும் பாராட்டவும் சிறந்த வழிகளில் ஒன்றாகும். எல்லா மக்களும் இங்கு ஒன்று என்பதை உங்கள் குழந்தைகள் புரிந்துகொள்வார்.



Click it and Unblock the Notifications

