Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
கொளுத்தும் கோடை வெயிலிருந்து உங்க குழந்தைகளை பாதுகாக்க பார்த்துக்கொள்ள நீங்க என்ன செய்யணும் தெரியுமா?
கோடை மாதங்கள் நெருங்கும்போது, வெப்ப அலைகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கும். வெப்ப அலையின் போது உங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக்கொள்வது அவசியம். வெப்ப அலைகள் நீரிழப்பு மற்றும் வெப்ப சோர்வை ஏற்படுத்தும். இது குழந்தைகளுக்கு ஆபத்தானது.
ஒவ்வொரு பெற்றோர்களும் கோடைகாலத்தில் குழந்தைகளை ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ள வேண்டும். கோடைவிடுமுறையில் குழந்தைகளை கவனித்துக்கொள்வது பெற்றோர்களுக்கு சவாலான பணியாக இருக்கலாம். ஏனெனில், விளையாட்டு குழந்தைகள் எப்போதும் வெளியில் செல்ல வெயிலில் விளையாட விரும்பலாம்.

அதனால், குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம். உங்கள் குழந்தைகள் நிறைய திரவங்களை குடிப்பதையும், வெயில் காலத்தில் சுவாசிக்கக்கூடிய ஆடைகளை அணிவதையும் உறுதிப்படுத்துவது முக்கியம். உங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் சில ஹீட்வேவ் டிப்ஸ்கள் பற்றி இங்கே காணலாம்.
ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயம் உள்ளதா?
கோடைகால வெப்ப அலைகள் குழந்தைகள் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. வெப்ப அலைகள் வெப்ப சோர்வு, ஹீட் ஸ்ட்ரோக், நீரிழப்பு மற்றும் பிற கடுமையான உடல்நலப் பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கலாம். மேலும், இது தலைவலி, சோர்வு, தசைப்பிடிப்பு மற்றும் தலைச்சுற்றல் போன்ற பல பிரச்சனைகளையும் ஏற்படுத்தலாம்.
குழந்தைகள் வெப்பம் தொடர்பான நோய்களுக்கு மிகவும் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் அவர்களின் உடல்கள் பெரியவர்களின் உடலைப் போல வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவதில் திறமையாக இல்லை. குழந்தைகள் பெரியவர்களை விட அதிக வெப்பத்தை உற்பத்தி செய்கின்றனர் மேலும் அவர்களின் தோல் சூரியனின் கதிர்களுக்கு அதிக உணர்திறன் கொண்டதாக இருக்கிறது. இதன் விளைவாக, குழந்தைகள் வெயிலில் விளையாடும்போது, உடல் விரைவில் வெப்பமடையும்.
குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பாக கவனித்துக்கொள்வது?
உங்கள் குழந்தைகள் கோடை வெப்பத்திலிருந்து பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்த உதவும் சில குறிப்புகள் பற்றி இங்கே காணலாம்.
சரியான ஆடைகளை அணியுங்கள்: கோடைகாலத்திற்கு ஏற்ப இலகுரக, தளர்வான ஆடைகள் அணிவது சிறந்தது. பாலியஸ்டர் மற்றும் நைலான் போன்ற செயற்கை பொருட்களுக்கு பதிலாக பருத்தி மற்றும் கைத்தறி போன்ற இயற்கை துணிகளை தேர்வு செய்து, உங்கள் குழந்தைக்கு அணிவியுங்கள். இது அவர்களை நன்றாக உணர உதவும்.
நீரேற்றமாக இருப்பதை உறுதிப்படுத்துங்கள்: நாள் முழுவதும் உங்கள் குழந்தையை நிறைய தண்ணீர் குடிக்கச் சொல்லுங்கள். நீர் மட்டுமல்லாது பழங்கள் மற்றும் காய்கறிகள் ஜூஸையும் குடிக்க கொடுக்கலாம். ஆனால், சர்க்கரை பானங்களைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகள் தினமும் ஏராளமான திரவங்கள் குடிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
வெயிலில் இருக்கும் நேரத்தைக் கட்டுப்படுத்துங்கள்: கோடை விடுமுறை என்பதால், குழந்தைகள் வீட்டிலேயே இருக்க மாட்டார், வெளியில் சென்று விளையாட விரும்புவார்கள். மதிய வேளையில் வெயிலில் விளையாட அவர்களை அனுமதிக்காதீர்கள். முடிந்தவரை அவர்களை நிழலில் இருக்கச் செய்யுங்கள். வெயில் தணிந்த பிறகு மாலை நேரங்களில் அவர்களை விளையாட அனுமதியுங்கள்.
குழந்தையை குளிர்ச்சிப் படுத்துங்கள்: உங்கள் குழந்தைகள் வழக்கமான இடைவெளிகளைப் பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வெளியில் விளையாடிவிட்டு வந்த பின்பு, குளிர்ந்த நீரில் அவர்களை குளிக்க வையுங்கள். அவர்களின் உடலை குளிரச் செய்யுங்கள்.
வெப்பச் சோர்வு அறிகுறிகளைக் கண்காணிக்கவும்: தலைச்சுற்றல், சோர்வு, தலைவலி, குமட்டல் மற்றும் உடல் வெப்பநிலை அதிகரிப்பு ஆகியவை வெப்பச் சோர்வின் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கண்டால், உங்கள் குழந்தையை குளிர்ந்த, நிழலான பகுதிகளில் இருக்க வைத்து, திரவங்களை அதிகமாக குடிக்க வையுங்கள். அறிகுறிகள் தீவிரமாக இருந்தால், குழந்தை மருத்துவரை நாடுங்கள்.
இறுதிக் குறிப்பு
வெப்பம் தொடர்பான நோயின் அறிகுறிகளைப் பற்றி பெற்றோர்கள் அறிந்துகொண்டு, தங்கள் குழந்தைகளை வெப்பத்திலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடைகாலத்தில் குழந்தைகள் நிறைய திரவங்களை குடிக்க ஊக்குவிக்க வேண்டும் மற்றும் வெப்பத்தில் வெளியில் செலவிடும் நேரத்தைக் கட்டுப்படுத்துவதும் முக்கியம்.



Click it and Unblock the Notifications

