Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சிசேரியனுக்குப் பிறகு அதிகரித்த எடையை வேகமாக குறைப்பது எப்படி? விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் காயத்ரி...!
கர்ப்பகாலம் என்பது பெண்களின் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும் காலமாகும். அதில் அனைவரின் கண்களுக்கும் தெரியக்கூடிய ஒன்று பெண்களின் வயிற்றின் அளவு பெரிதாவதுமட்டும்தான். கர்ப்ப காலத்தில் பெண்களின் எடை தாறுமாறாக அதிகரிக்கும். இந்த எடை மிக வேகமாக அதிகரிக்கும், ஆனால் மிகவும் மெதுவாகவே குறையும்.
புதிதாக அம்மாவானவர்கள் இந்த அதிகரித்த எடையால் பல அசௌகரியங்களை அனுபவிப்பார்கள். குறிப்பாக குழந்தை சிசேரியன் செய்து பிறந்திருந்தால், அவர்கள் தங்கள் எடையை அவ்வளவு எளிதில் குறைக்க முடியாது.

எனவே பெண்கள் எதிர்கொள்ளும் இந்த சிக்கலை மனதில் வைத்து, இதற்கான தீர்வுகளை கண்டறிய குழந்தைப்பேறு மருத்துவர் ஒருவரை அணுகிணோம். மகப்பேறு மருத்துவர் காயத்ரி இதற்கான வழிகளை நம்முடன் பகிர்ந்துள்ளார். அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
எலுமிச்சை தண்ணீர்
சிசேரியனுக்கு பிறகு வயிறை சுற்றியுள்ள சதைகளை குறைக்க எலுமிச்சை தண்ணீரை குடிப்பது எடையைக் குறைக்க மிகவும் அவசியமாகும். சூடான நீரை எடுத்துக்கொண்டு அதில் சிறிது எலுமிச்சை சாறையும் தேனையும் கலக்க வேண்டும். இந்த நீரை தினமும் காலையில் குடிக்க வேண்டும். சூடான நீர், எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்த கலவை வயிறை சுற்றியுள்ள சதைகளை எளிதாக குறைக்க உதவும். இதை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் மாற்றத்தைக் காணலாம்.
பெல்ட் அணிதல்
சிசேரியனுக்கு பின் எடையை குறைக்கும் பெல்ட் அணிவது வயிற்று சதையை குறைப்பதில் நன்கு உதவுகிறது. இந்த பெல்ட் வயிற்றுத் தசையில் பிணைப்பைப் ஏற்படுத்தி, வயிற்றுத் தசைகளை குறைக்க உதவுகிறது, இதன் மூலம் வயிற்று கொழுப்பைக் குறைத்து, முதுகுவலியையும் குறைக்கிறது. பிரசவத்திற்கு பிறகு வயிறு பகுதியில் இருந்து கொழுப்பு இழக்க விரும்புபவர்களுக்கு இந்த பெல்ட் பரிந்துரைக்கப்படுகிறது.
போதுமான அளவு தண்ணீர் குடித்தல்
போதுமான அளவு தண்ணீர் குடிப்பது பெண்கள் உடலின் நீர் மேலாண்மையை மட்டும் பராமரிப்பதில்லை, உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகளையும் குறைக்க உதவுகிறது. சிசேரியனுக்கு பிறகு அதிக தண்ணீர் குடிப்பது உடலின் நீர் மேலாண்மையை சரி செய்வதோடு அதிக உணவு உண்பதையும் தடுக்கிறது. எனவே சிசேரியனுக்குப் பிறகு வயிறை குறைக்க முதலில் செய்ய வேண்டியது அதிகளவு நீர் குடிக்கப்பதுதான்.
ஒழுங்கான உணவுமுறை
பொதுவாக பெண்களுக்கு நாளொன்றுக்கு 300 முதல் 500 வரை கலோரிகள் தேவைப்படுகிறது. சிசேரியனுக்குப் பிறகு அவர்களால் வழக்கமான உடற்பயிற்சிகளை செய்ய இயலாது. எனவே அளவான உணவை சரியான அளவில் எடுத்துக்கொண்டு நொறுக்கு தீனிகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். சரியான உணவை எடுத்துக்கொள்வதே உங்களின் வயிற்றை குறைக்க பெரிதளவில் உதவும்.
சிறிய நடைப்பயிற்சி
அறுவைசிகிச்சை காரணமாக அவர்கள் கடுமையான உடற்பயிற்சியிலோ நீண்ட தூர நடைப்பயிற்சியிலோ ஈடுபட இயலாது. ஏனென்றால் அது வயிறையும், வயிற்றை சுற்றியுள்ள பகுதியையும் பெரிதளவில் பாதிக்கும். எனினும், காலையோ, மாலையோ அரைமணி நேரம் நடைப்பயிற்சி செய்வது எடையைக் குறைக்க அவசியம். தினசரி இதுபோன்ற சுறுசுறுப்பான நடைப்பயிற்சி தொப்பையை குறைக்க பெரிதும் உதவும்.



Click it and Unblock the Notifications
