Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
கர்ப்ப காலத்தில் ஹீட்டிங் பேடு கொண்டு ஒத்தடம் கொடுக்கலாமா? அது என்ன நன்மைகளை தரும்?
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு உடம்பு வலி என்பது கொஞ்சம் அதிகமாக இருக்கும். இதனால் அவர்களால் இரவில் சரியாக தூங்கமுடியாது. கழுத்து வலி, கால் வலி மற்றும் பிடிப்புகள் என பல வலிகளை அவர்கள் அனுபவிப்பார்கள். இந்த மாதிரியான சமயங்களில் கர்ப்பிணிப் பெண்கள் வெப்ப ஒத்தடம் கொடுக்கலாமா என்ற சந்தேகமும் அவர்களுக்குள் இருக்கிறது.
ஒரு குறிப்பிட்ட உடல் பகுதியில் வெப்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் தசை பதற்றத்தை தணிக்க முடியும். வெப்ப ஒத்தடம் வலியை குறைக்க உதவுகிறது. இப்பொழுது வெப்ப ஒத்தடம் கொடுக்க ஏதுவாக ஹீட்டிங் பேடுகள் தற்போது கடைகளில் கிடைக்கின்றன. இந்த ஹீட்டிங் பேடுகள் உங்களுக்கு உதவியாக இருக்கும். இந்த ஹீட்டிங் பேடுகள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக வெவ்வேறு வடிவங்களிலும் வருகிறது.

இருப்பினும் கர்ப்பிணி பெண்கள் இதை பயன்படுத்துவதற்கு முன்பு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள். சரி வாங்க கர்ப்ப காலத்தில் இந்த ஹீட்டிங் பேடுகளை எப்படி சரியாக பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
கர்ப்ப காலத்தில் ஹீட்டிங் பேடை பயன்படுத்தலாமா?
கர்ப்ப காலத்தில் ஹீட்டிங் பேடுகளை பயன்படுத்துவது பாதுகாப்பான ஒன்று தான். இது தற்காலிக வலி நிவாரணத்திற்கு உதவுகிறது. இருப்பினும் இந்த ஹீட்டிங் பேடுகளை பயன்படுத்தும் போது குறைந்த வெப்பநிலையில் பயன்படுத்துவது பாதுகாப்பானது. எனவே நீங்கள் கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் ஹீட்டிங் பேடுகளை நேரடியாக தோல் அல்லது அடி வயிற்றில் வைக்கக் கூடாது.
அடி வயிற்றில் வெப்ப ஒத்தடம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ஹீட்டிங் பேடுகளை பயன்படுத்துவதிலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனே மகப்பேறு மருத்துவரை அணுகி ஆலோசனை செய்வது நல்லது.
ஹீட்டிங் பேடை எப்பொழுது பயன்படுத்த வேண்டும்?
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு பல்வேறு வலிகள் ஏற்படுவது பொதுவானது :
முதுகுவலி, இடுப்பு வலி, கால் மற்றும் முழங்கால் வலி, தோள்பட்டை வலி, தலைவலி போன்ற வலிகள் மிகவும் பொதுவானது.
ஹீட்டிங் பேடு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்
தசை வலிகள் மற்றும் பிடிப்புகளை போக்க பயன்படுகிறது : கர்ப்ப காலத்தில் பெண்கள் பொதுவாக தசை வலிகள் மற்றும் பிடிப்புகளை அனுபவித்து வருகிறார்கள். குறிப்பாக கீழ் முதுகு மற்றும் கால்களில் வலி ஏற்பட்டால் ஹீட்டிங் பேடுகளை பயன்படுத்தலாம். இது தசைகளை தளர்த்தவும் வலி உணர்வை குறைக்கவும் பயன்படுகிறது. இருப்பினும் தொடர்ந்து உங்களுக்கு வலி நீடித்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.
முதுகுவலியை போக்க உதவுகிறது
கர்ப்ப காலத்தில் பெண்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினை முதுகுவலி ஆகும். கர்ப்ப காலத்தில் வயிற்றில் வளரும் குழந்தையின் எடையால் கீழ் முதுகில் அழுத்தம் ஏற்படும். இந்த அழுத்தத்தால் கீழ் முதுகு வலி ஏற்படுகிறது. எனவே கீழ் முதுகு வலியை குறைக்க 10-15 நிமிடங்கள் ஹீட்டிங் பேடுகளை பயன்படுத்தி வரலாம்.
பதற்றத்தை குறைக்க பயன்படுகிறது
வெப்ப ஒத்தடம் கொடுக்கும் போது பாதிக்கப்பட்ட பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் மூட்டு விறைப்பு மற்றும் தசைப்பிடிப்பு ஆகியவை குறைகிறது. தசைகளை தளர்த்தவும், வலியைக் குறைக்கவும் வெப்ப ஒத்தடம் உதவுகிறது. தசைகளில் ஏற்படும் வலியைக் குறைக்கவும், மூட்டு வலியைக் குறைப்பதன் மூலம் கர்ப்பிணி பெண்கள் இரவில் தூங்குவதை எளிதாக்குகிறது. இதனால் நீங்கள் நல்ல தூக்கத்தை பெற முடியும்.
ஹீட்டிங் பேடுகளை பயன்படுத்தும் போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு குறிப்புகள்
- கர்ப்ப காலத்தில் ஹீட்டிங் பேடுகளை பயன்படுத்தும் போது எச்சரிக்கையுடன் செயல்படுவது மிகவும் அவசியம். எனவே கீழ்க்கண்ட பாதுகாப்பு விழிப்புணர்வு குறிப்புகளை பின்பற்றுங்கள்.
- கர்ப்ப காலத்தில் ஹீட்டிங் பேடுகளை வயிற்றில் பயன்படுத்தக் கூடாது.
- உங்கள் உடலில் ஹீட்டிங் பேடுகளை நேரடியாக பயன்படுத்த வேண்டாம். ஒரு துணியால் அல்லது கவரைக் கொண்டு போர்த்தி பயன்படுத்துங்கள்.
- உணர்வின்மை உள்ள பகுதிகளில் ஹீட்டிங் பேடுகளை பயன்படுத்த வேண்டாம்.
- ஹீட்டிங் பேடுகளை பயன்படுத்தும் போது நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம். நீண்ட நேரம் பயன்படுத்துவது உங்களுக்கு நீரிழப்புக்கு வழி வகுக்கும்.



Click it and Unblock the Notifications
