Latest Updates
-
செப்டம்பர் 01-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: இந்த 3 ராசிகளுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்கப்போகிறது -
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்! -
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க.. -
செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போறாங்க.. -
உங்ககிட்ட இந்த 5 காலை பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. அது உடம்பில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும்! -
டக்குன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப தயிர் இருந்தா, 10 நிமிஷத்துல இப்படி குழம்பு செய்யுங்க..
கர்ப்ப காலத்தில் நாவல் பழம் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா?
கர்ப்ப காலத்தில் பெண்கள் மிகவும் கவனத்துடன் இருப்பது அவசியம். அதிலும் அவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் குழந்தையின் வளர்ச்சியை ஆதரிக்க அவர்களுக்கு ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அவசியமாகிறது.
குழந்தையின் வளர்ச்சியை மேம்படுத்த காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் கர்ப்ப காலத்தில் நாவல் பழம் எடுப்பது உங்களுக்கு எந்த மாதிரியான நன்மைகளை கொடுக்கும் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

நாவல் பழத்தின் ஊட்டச்சத்து அளவுகள்
நாவல் பழம் ஆசியாவின் பெரும் பகுதிகளில் காணப்படும் பழமாகும். இது ஒரு சிறிய ஊதா நிற பழமாகும். இதில் கர்ப்பத்தை ஆதரிக்கும் நிறைய அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. 100 கிராம் நாவல் பழத்தில் காணப்படும் ஊட்டச்சத்து அளவுகள் பின்வருமாறு:
கலோரிகள் : 60-70 கலோரிகள்
கார்போஹைட்ரேட்டுகள் : 14-18 கிராம்
புரதம் : 0.8-1.2 கிராம்
நார்ச்சத்துக்கள் : 4-8 கிராம்
கொழுப்பு : 0.1-0.2 கிராம்
வைட்டமின் சி : 18-20 மி. கி
இரும்புச்சத்து : 0.7-1 மி. கி
கால்சியம் : 15-20 மி. கி
பொட்டாசியம் : 79-82 மி. கி
கர்ப்ப காலத்தில் நாவல் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை
நாவல் பழத்தில் ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் பாலிபினால்கள் போன்ற ஏராளமான ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது. இந்த ஆன்டி ஆக்ஸிடன்கள் ஆக்ஸினேற்ற அழுத்தத்தை எதிர்த்து போராடவும், வீக்கத்தைக் குறைக்கவும், செல்லை சேதத்திலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. ஆன்டி ஆக்ஸிடன்கள் நாள்பட்ட நோய்க்கு எதிராக திறம்பட செயல்படுகிறது.
இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது
கர்ப்ப கால நீரிழிவு நோயை தடுக்க நாவல் பழம் உதவுகிறது. நாவல் பழம் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இது கர்ப்ப கால நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.
செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
கர்ப்ப கால ஹார்மோன்களால் பெண்கள் மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற செரிமான பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். நாவல் பழத்தில் அதிகளவு நார்ச்சத்துக்கள் காணப்படுகிறது. இது மலச்சிக்கலை தடுத்து செரிமானத்தை ஊக்குவிக்கிறது.
நார்ச்சத்துக்கள் குடல் இயக்கங்களை மெதுவாக்குகிறது. ஒரு நாளைக்கு ஒரு முறை என நாவல் பழம் சாப்பிடுவது செரிமான அசெளகரியத்தை தணிக்க உதவுகிறது. ஒட்டுமொத்த இரைப்பை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
கர்ப்ப காலத்தில் தாய் மற்றும் வளரும் கரு இரண்டையும் பாதுகாக்க வலுவான நோயெதிர்ப்பு அமைப்பு இருப்பது அவசியம். நாவல் பழத்தில் வைட்டமின் சி காணப்படுகிறது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. வைட்டமின் சி நோயெதிர்ப்பு சக்தியை எதிர்த்து போராட உதவுகிறது. காயங்களை குணப்படுத்த உதவுகிறது. இரும்பு உறிஞ்சுதலையும் ஊக்குவிக்க உதவுகிறது.
ஆரோக்கியமான இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது
கர்ப்ப காலத்தில் வளரும் குழந்தையை ஆதரிக்க உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்க வேண்டும். அந்த வகையில் பார்க்கும் போது நாவல் பழம் உடலின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. நாவல் பழத்தில் இரும்புச்சத்து நிறைய அளவில் காணப்படுகிறது. இவை இரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது.
இரும்புச் சத்து குறைபாடு இருந்தால் இரத்த சோகை பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே கர்ப்ப காலத்தில் போதுமான இரும்புச்சத்து இருப்பது அவசியம். இது சோர்வை குறைக்கிறது, வளரும் கருவிற்கு ஏற்ற ஆக்ஸிஜன் உற்பத்தியை கொடுக்கிறது.
எலும்பு ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது
நாவல் பழத்தில் நிறைய கால்சியம் சத்துக்கள் காணப்படுகிறது. இது குழந்தையின் எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. கர்ப்ப காலத்தில் தாயின் எலும்பு ஆரோக்கியத்தை பராமரிப்பதில் கால்சியம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்களை தடுக்க உதவுகிறது. எனவே கர்ப்ப காலத்தில் நாவல் பழத்தை சாப்பிடுவது உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்த உதவுகிறது.
நீரேற்றம் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள்
கர்ப்ப காலத்தில் நீரேற்றமாக இருப்பது ஒட்டுமொத்தமாக ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. குழந்தையின் வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது. நாவல் பழத்தில் அதிக நீர் உள்ளடக்கம் காணப்படுகிறது. இது நீரேற்றத்திற்கு உதவுகிறது. இதில் பொட்டாசியம், அத்தியாவசிய எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன. தசை மற்றும் நரம்புகளின் சரியான செயல்பாட்டிற்கு உதவுகிறது.



Click it and Unblock the Notifications