ஆண்களே! இந்த பாலியல் தொற்றுநோய்கள் நீங்க அப்பாவாகும் வாய்ப்பை குறைக்கலாமாம்... ஜாக்கிரதை..!

ஆண்களில், பிறப்புறுப்பு ஹெர்பெஸ் ஆண்குறி, விதைப்பை மற்றும் ஆசனவாய் உட்பட பிறப்புறுப்பு பகுதியைச் சுற்றி சிவப்பு புடைப்புகளை ஏற்படுத்தும். இது குணப்படுத்த முடியாத தொற்று, ஆனால் வைரஸ் தடுப்பு மருந்துகளால் கட்டுப்படுத்தலாம்

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் பெற்றோராக மாறுவது அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். தங்களை பெற்றோர் ஸ்தானத்தில் பார்க்க அனைவரும் ஆசைப்படுவார்கள். ஆனால், துரதிஷ்டவசமாக இந்த வாய்ப்பு எல்லாருக்கும் கிடைப்பதில்லை. சிலர், கருவுறாமை பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கருவுறுதல் என்று வரும்போது, ​​நாம் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. நீங்கள் ஏன் கருத்தரிக்க முடியாது என்பதற்கான உயிரியல் காரணங்களைத் தவிர, ஆண் கருவுறுதலை பாதிக்கும் பிற காரணிகளும் உள்ளன. கருவுறாமைக்கு காரணம் பெண்கள் மட்டும்தான் என்றல்ல, ஆண்களும் கருவுறாமைக்கு காரணமாக இருப்பார்கள்.

STIs that may affect male fertility in tamil

வாழ்க்கைமுறையில் ஏற்படும் மாற்றங்கள், சரியான உணவுகளை உண்ணுதல், தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல் மற்றும் புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற ஆரோக்கியமற்ற பழக்கங்களால் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் குறைகிறது. சில எஸ்டிஐ கள் அதாவது பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் அதைத் தடுக்கலாம். பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் என்ன என்பதை அறிய இக்கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கோனோரியா

கோனோரியா

பாலியல் ரீதியாக பரவும் பாக்டீரியாவால் ஏற்படும் கோனோரியா என்பது ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் ஏற்படும் தொற்று ஆகும். இது தமிழில் மேக வெட்டை நோய் என்று அழைக்கப்படுகிறது. ஆண்களில், இது விந்தணுக்களில் இணைக்கப்பட்டுள்ள குழாய்களில் வலியை ஏற்படுத்தும். இது அரிதான சந்தர்ப்பங்களில், கருவுறாமைக்கு வழிவகுக்கும் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சிடிசி) கூறுகிறது. அதிர்ஷ்டவசமாக, கோனோரியா நோய் பொதுவாக நுண்ணுயிர் எதிர்ப்பிகளால் எளிதில் குணப்படுத்தப்படுகிறது. அதனால்தான் உங்கள் அறிகுறிகளைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் பேசுவது அல்லது உங்களை முன்கூட்டியே கண்டறிவது உயிருக்கு ஆபத்தான நிகழ்வுகளைத் தவிர்க்க உதவும்.

கிளமிடியா

கிளமிடியா

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் அறிக்கைப்படி, ஆண்களுக்கு கிளமிடியாவால் உடல்நலப் பிரச்சினைகள் அரிதாகவே ஏற்படுகின்றன. இருப்பினும், இந்த தொற்று விந்தணுக்களின் இயக்கம் மற்றும் தரத்தில் கணிசமான சரிவை ஏற்படுத்தும். இது கருவுறுதலை பாதிக்கிறது. மேலும், சிகிச்சை அளிக்கப்படாத கிளமிடியாவுக்கு எதிராகவும் சுகாதார அமைப்பு எச்சரிக்கிறது. இது ஒருவருக்கு எச்.ஐ.வி வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம்.

 சிபிலிஸ்

சிபிலிஸ்

மற்ற பாலியல் தொற்றுநோய்களைப் போலவே சிபிலிஸும் சிபிலிஸ் புண் உடனான நேரடித் தொடர்பு மூலம் ஒருவரிடமிருந்து மற்ற நபருக்கு பரவுகிறது. ஆண்களைப் பொறுத்த வரையில், இவை ஆணுறுப்பில் அல்லது அதைச் சுற்றி, ஆசனவாயைச் சுற்றி அல்லது மலக்குடலில் அல்லது வாயில் அல்லது அதைச் சுற்றி புண்களை ஏற்படுத்தலாம். கவனிக்க வேண்டியது முக்கியமானது, சிகிச்சையளிக்கப்படாத சிபிலிஸ் பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும். ஆண்களுக்கு, எபிடிடிமிடிஸ் பெரும்பாலான சிபிலிஸ் தொடர்பான மலட்டுத்தன்மையை ஏற்படுத்துகிறது.

பிறப்புறுப்பு ஹெர்பெஸ்

பிறப்புறுப்பு ஹெர்பெஸ்

ஆண்களில், பிறப்புறுப்பு ஹெர்பெஸ் ஆண்குறி, விதைப்பை மற்றும் ஆசனவாய் உட்பட பிறப்புறுப்பு பகுதியைச் சுற்றி சிவப்பு புடைப்புகளை ஏற்படுத்தும். இது குணப்படுத்த முடியாத தொற்று, ஆனால் வைரஸ் தடுப்பு மருந்துகளால் கட்டுப்படுத்தலாம். தற்போது, ​​ஹெர்பெஸ் கருவுறுதலை பாதிக்கும் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றாலும், ஒரு ஆய்வில், நோய்த்தொற்று குறைந்த விந்தணு எண்ணிக்கையை ஏற்படுத்தும் என்று காட்டுகிறது. அதனால் சரியான முன்னெச்சரிக்கைகள் மூலம் அதைத் தவிர்ப்பது நல்லது.

எச்.ஐ.வி

எச்.ஐ.வி

மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ் (எச்ஐவி) என்பது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தாக்கும் ஒரு பரவக்கூடிய வைரஸ் ஆகும். பாதிக்கப்பட்ட இரத்தம், விந்து அல்லது யோனி திரவங்கள் மூலம் இது ஒருவரிடமிருந்து மற்ற நபருக்கு பரவுகிறது. எச்.ஐ.வி தொடர்பான கருவுறுதல் பிரச்சினைகளைப் பொறுத்த வரையில், எச்.ஐ.வி-1 பாதிக்கப்பட்ட ஆண்களில் கருவுறுதலைப் பிரதிபலிக்கும் விந்தணு அளவுருக்கள் கணிசமாக பலவீனமடைந்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. விந்து அளவு, விந்தணு இயக்கம் முதல் செறிவு மற்றும் உருவவியல் வரை, அனைத்து அளவீடுகளும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Friday, October 7, 2022, 15:59 [IST]
Desktop Bottom Promotion