Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
சீக்கிரம் கர்ப்பமாவதற்கு தம்பதிகள் இந்த ஈஸியான வழிகளை பின்பற்றினாலே போதுமாம்...!
சில பெண்களுக்கு கருத்தரிப்பது மிகவும் எளிதாக இருக்கும் சூழ்நிலையில், பல பெண்களுக்கு கருத்தரிப்பது என்பது நீண்ட கால போராட்டமாக இருக்கிறது.
கருத்தரிப்பது என்பது அனைத்து பெண்களுக்கும் ஒரே மாதிரியாக இருந்து விடுவதில்லை. சில பெண்களுக்கு கருத்தரிப்பது மிகவும் எளிதாக இருக்கும் சூழ்நிலையில், பல பெண்களுக்கு கருத்தரிப்பது என்பது நீண்ட கால போராட்டமாக இருக்கிறது. ஒவ்வொரு பெண்ணின் உடலும் வித்தியாசமானது, இதனால் ஒரு குழந்தையை கருத்தரிக்க அவர்களுக்கென சில காலம் ஆகும்.

சில வாழ்க்கைமுறை மாற்றங்கள் மற்றும் பழக்கவழக்கங்கள் எளிதில் கர்ப்பமாவதற்கு உதவியாக இருக்கலாம். இந்த சின்ன சின்ன மாற்றங்கள் கருத்தரிக்க முயலும் தம்பதிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆரோக்கியமாக சாப்பிடுங்கள்
உணவு மற்றும் கருவுறுதல் இரண்டும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது. நீங்களும் உங்கள் துணையும் ஆரோக்கியமான உணவுகளை தொடர்ந்து எடுத்துக்கொண்டால், அது கருத்தரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கும்.

உடற்பயிற்சி
எளிதில் கருத்தரிக்க கச்சிதமான உடலமைப்பில் இருப்பது முக்கியம். எழுந்து உடற்பயிற்சி செய்ய நீங்கள் சோம்பலாக உணர்ந்தால், உங்களுடன் உடற்பயிற்சி செய்ய உங்கள் துணையிடம் கேளுங்கள். உங்கள் துணைடன் இணைந்து பணியாற்றுவது ஒவ்வொரு நாளும் அதைச் செய்ய எளிதான உந்துதலாகும். ஒரு எளிய நடை அல்லது ஜாக்கிங் கூட போதுமானதாக இருக்கும். சோம்பேறித்தனமாக நேரத்தைபடுக்கையில் செலவிடுவது ஆண்களின் கருவுறுதலை பாதிக்கும்.

ஓய்வு
மனஅழுத்தம் இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. மன அழுத்தம் உங்கள் கருவுறுதல் திறனைக் குறைக்கும். உங்கள் மன அழுத்த அளவைக் குறைக்க நீங்கள் விரும்பும் சில யோகா, தியானம் அல்லது வேறு சில விஷயங்களைச் செய்ய முயற்சிக்கவும்.

அந்தரங்க பகுதிகளை குளிர்ச்சியாக வைத்திருங்கள்
உங்கள் மடிக்கணினியை உங்கள் மடியில் நீண்ட நேரம் வைத்திருப்பது, இறுக்கமான ஷார்ட்ஸ் மற்றும் இறுக்கமான துணி அணிவது ஆகியவை விந்தணுக்களின் எண்ணிக்கையை பாதிக்கும். நீங்கள் ஒரு அப்பாவாக மாற விரும்பினால், தளர்வான ஆடைகளை அணிந்து மடிக்கணினியை மேசையில் வைத்துக் கொள்ளுங்கள், மடியில் அல்ல.

கருவுறும் காலம்
கருவுறும் காலம் என்பது நீங்களும் உங்கள் துணையும் கர்ப்பம் தரிக்க எடுக்கும் இடைவெளி. சில நேரங்களில், வழக்கமான வாழ்க்கையிலிருந்து வெளியேறுவது ஒருவருக்கொருவர் நேரத்தைக் கண்டுபிடித்து உண்மையிலேயே ஓய்வெடுக்க உதவும்.

மதுவைப் புறக்கணிக்கவும்
அதிகப்படியான குடிப்பழக்கம் உங்கள் கருவுறுதலைக் குறைக்கும். எனவே நீங்கள் தினமும் மது அருந்தும் பழக்கம் கொண்டிருந்தால் குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணத்தை கைவிட்டு விடவேண்டும்.

புகைப்பழக்கம் கூடாது
புகைபிடிப்பதால் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் கருவுறுதல் திறன் குறையும். புகைபிடிப்பதை விட்டுவிடுவதற்கான சரியான காரணத்தை நீங்கள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்றால், இதற்கு பிறகாவது அதனை செய்யுங்கள்.

காதலை புத்துணர்ச்சியுடன் வைத்திருங்கள்
சில தம்பதிகள் கருத்தரிக்க மட்டுமே உடலுறவு கொள்கிறார்கள் என்று நினைக்கிறார்கள். நீங்களும் அவர்களில் ஒருவராக இருந்தால், உங்களுக்கும் உங்கள் கூட்டாளருக்கும் இடையிலான காதலை நீங்கள் புதுப்பிக்க வேண்டிய நேரமிது. கருத்தரிப்பது என்பதையும் தாண்டி, காதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள்.

தொடர்ச்சியான உடலுறவு
கர்ப்பம் தரிப்பதற்கான அடிப்படைத் தேவை உடலுறவு என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். நீங்கள் அண்டவிடுப்பு நாளை கணக்கிட்டு வைத்திருப்பது உங்களுக்கு பெரிதும். ஆனால் வாரத்தில் இரண்டு-மூன்று முறை உடலுறவு கொள்வது உங்கள் கருத்தரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications