Latest Updates
-
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்.. -
இட்லிக்கு இப்படி ஒருடைம் மட்டன் குருமா செய்யுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி செய்வீங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
திரிகிரக யோகம் மிதுன ராசியில் உருவாகப்போவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
ஆண்களின் ஆண்மையை அதிகரிக்க உதவும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் எவை?
ஊட்டச்சத்துக்கள் தான் உடலை ஊட்டமுடன் வைக்க உதவும் முக்கிய விஷயங்கள்; இந்த பதிப்பில் ஆண்களின் ஆண்மையை அதிகரிக்க உதவும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் எவை என்பது பற்றி படித்து அறியலாம்.
ஊட்டச்சத்துக்கள் தான் உடலை ஊட்டமுடன் வைக்க உதவும் முக்கிய விஷயங்கள்; அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவுகள் தான் உடலுக்கு சக்தி அளிக்க பெரிதும் உதவுகின்றன. நாம் உணவுகளில் அடங்கியுள்ள சத்துக்கள் தான் நம் உடல் ஆரோக்கியத்தை தீர்மானிக்கின்றன. சத்துள்ள உணவுகளை தேர்ந்து எடுத்து உண்பது தான், உடலுக்கு நாம் செய்யும் பெரிய உபகாரம் ஆகும்.

இந்த பதிப்பில் ஆண்களின் ஆண்மையை அதிகரிக்க உதவும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் எவை என்பது பற்றி படித்து அறியலாம்.
ஆண்களின் ஆரோக்கியம்!
ஆண்கள் திருமணம் ஆன பின், தனது துணையை புணர்ந்து தங்களுக்கான எதிர்காலத்தை, எதிர்கால வாழ்க்கையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுவது உண்டு. அந்த முயற்சி பலன் அளிக்க வேண்டுமானால் ஆண்களின் உடல் நல்ல ஆரோக்கியத்தை கொண்டு இருப்பதோடு, அவர்களின் உடலில் காணப்படும் ஆண்மையின் அடையாளமான விந்து அணுக்களும் நன்கு திடகாத்திரமாக இருக்க வேண்டியது அவசியம்.
ஆண்களின் விந்து அணுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த, ஆண்மையின் அடையாளத்தை திடப்படுத்த உதவும் ஊட்டச்சத்துக்கள் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

விட்டமின் டி
ஆண்கள் தாங்கள் உண்ணும் உணவில் விட்டமின் டி சத்துக்கள் இடம் பெற்றுள்ளனவா என்று சோதித்து அறிதல் அவசியம். ஏனெனில் விட்டமின் டி ஆண்களின் உடலில் காணப்படும் விந்து அணுக்களின் நீந்து சக்தியை அதிகரிக்க உதவி, கருவுறுதலுக்கு வழி வகுக்கிறது.
எனவே ஆண்கள் விட்டமின் டி நிறைந்த உணவுகளான முட்டையின் வெள்ளைக்கரு, எண்ணெய்த்தன்மை நிறைந்த மீன் வகைகள், ரெட் இறைச்சி வகைகள் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். மேலும் சூரிய ஒளியின் மூலமும் கூட விட்டமின் டி சத்தினை பெற முயலல் வேண்டும்.

ஜிங்க் உணவுகள்!
ஆண்களின் உடலில் இருக்கும் விந்து அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கட்டாயம் ஜிங்க் நிறைந்த உணவுகளை ஆண்கள் உட்கொள்ள வேண்டும். இந்த உணவுகள் விந்து அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு மட்டும் இல்லாமல், விந்து அணுக்கள் நன்கு இயங்கவும், பெண்ணின் உடலில் நன்கு நீந்தி செல்லவும் தேவையான சத்துக்களை அளிக்கின்றன.
மேலும் ஆண்கள் பெண்களின் பிறப்புறுப்பில் உள்நுழைத்தல் செய்யும் பொழுது, அந்த சமயத்தில் அதிக விந்து அணுக்கள் வெளிப்படவும் இந்த உணவுகள் உதவுகின்றன. இந்த ஜிங்க் சத்துக்கள் மீன், இறைச்சி, பால் பொருட்கள் போன்றவற்றில் நிறைந்து உள்ளன.

போலிக் அமிலம்
போலிக் அமிலம் நிறைந்த உணவுகள் ஆண்களின் உடலில் உற்பத்தி ஆகும் விந்து அணுக்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்க பெரிதும் உதவுகின்றன. இந்த போலிக் அமில உணவுகள் விந்துகளின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதோடு, விந்து அணுக்களின் தரத்தையும் அதிகரிக்க உதவுகின்றன. போலிக் அமிலம் நிறைந்த உணவுகளான, இலைகளுடன் கூடிய காய்கறிகள், ஆரஞ்சு பழம் போன்றவற்றை ஆண்கள் அதிகம் உட்கொள்ள வேண்டியது அவசியம்.!

செலினியம் சத்துக்கள்!
செலினியம் என்னும் சத்துக்கள் ஆண்களின் ஆண்மையை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆண்கள் செலினியம் நிறைந்த உணவுகளான, முட்டை, மீன், இறைச்சி, பிரேசிலியன் நட்ஸ் போன்ற உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். இந்த உணவுகளை அன்றாட உணவு முறையில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
இந்த செலினியம் சத்துக்கள் விந்து அணுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, அவற்றின் நீந்து சக்தியை அதிகரிக்க உதவுகின்றன; மேலும் இவை விந்து அணுக்கள் மிகச்சரியான வடிவம் பெற பெரிதும் உதவுகின்றன.

விட்டமின் சி
விட்டமின் சி நிறைந்த உணவுகளை ஆண்கள் தங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளல் நல்லது. ஏனெனில் இந்த விட்டமின் சி ஊட்டச்சத்துக்கள் விந்து அணுக்களில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டு இருந்தால், அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்ய பெரிதும் உதவுகின்றன. விட்டமின் சி சத்துக்கள் சிட்ரஸ் வகை பழங்களில் அதிகம் நிறைந்து உள்ளன.

நம்பிக்கை கொள்ளுங்கள்!
ஆண்களே உடலில் ஏதேனும் குறைபாடு இருந்தாலோ அல்லது விந்து அணுக்கள் தொடர்பான விஷயத்தில், ஆண்மை குறித்த ஆரோக்கியத்தில் ஏதேனும் குறைகள் இருந்தாலோ பயம் கொள்ள வேண்டாம்; உங்களால் எதுவும் செய்ய முடியாது என நம்பிக்கை இழக்க வேண்டாம். இயற்கை முறையில் தினசரி உட்கொள்ளும் ஊட்டச்சத்துக்கள் மூலம் எளிதில் குறைபாடு கொண்ட ஆண்மையை அதிகரித்து நல்ல நிலைக்கு கொண்டு வந்து விடலாம், நம்பிக்கை கொள்ளுங்கள்!

கருத்தரிப்பு நிகழும்!
உங்கள் உடலின் குறைபாட்டை எளிதில், இயற்கை முறையில் சரி செய்து விட்டோமே ஆனால், கண்டிப்பாக உங்கள் துணைவியால் கருத்தரிக்க முடியும். ஆண் மற்றும் பெண் உடலில் எந்த பிரச்சனையும் இல்லை எனில், புணர்தலும் சரியான நேரத்தில் நடக்கிறது எனில் கண்டிப்பாக கருத்தரிப்பும் விரைவில் நிகழும் என்று அறிந்து கொள்ளுங்கள்! எல்லாம் சரியாக இருந்தால் உங்கள் வாரிசு உருவாகி உங்களை வந்து அடையும் காலமும் தூரம் இல்லை என்று உணருங்கள்!



Click it and Unblock the Notifications
