Latest Updates
-
உடல் எடையை வேகமா குறைக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க..! -
மணி பிளாண்ட் செடியை இப்படி வைத்தால் அதிர்ஷ்டம் கொட்டும்! கோடைக்காலத்திற்கு ஏற்ற வாஸ்து ரகசியங்கள் இதோ! -
வாழ்க்கையில் ஒரேயொரு முறை குளிக்கும் பழக்கும் உள்ள பெண்கள் - ஆனாலும் இவங்க ரொம்ப அழகா இருப்பார்களாம் -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் ஜூன் 08 வரை 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹோட்டல் ரவா உப்புமா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு தெரிஞ்சு ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 14 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம் -
50 ஆண்டுகளுக்கு பின் சனி ஜெயந்தியில் உருவாகும் அரிய யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது..! -
காதலில் சம்மதம் முக்கியமா? டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பு சொல்லும் உண்மை என்ன தெரியுமா? -
எடை இழப்புக்கு உதவும் வெஜிடேபிள் சிக்கன் சூப் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
'Main Tera' Day ட்ரெண்டில் காதலை சொல்லப் போறீங்களா? இந்த பாதுகாப்பு டிப்ஸ் தெரியாம மெசேஜ் அனுப்பாதீங்க, சிக்கலில் மாட்டிக்காதீங்க!
சீரற்ற மாதவிடாய் சுழற்சி கொண்ட பெண்கள் தாயாக முடியுமா?
மாதவிடாய் சுழற்சி என்பது கருத்தரிப்புக்கு மிக முக்கியமான ஒன்று; மாதவிடாய் சுழற்சி சரியாக இல்லையெனில் கருத்தரிக்க முடியுமா என்று இங்கு படித்து அறியலாம்.
சீரற்ற மாதவிடாய் சுழற்சி கொண்ட என்னால் தாயாக முடியுமா?
பெண்கள் குழந்தைகளாய் ஜனித்த அந்த நிமிடம் முதல் வளர்ந்து வாழ்ந்து மடியும் வரை அவர்களின் உடலில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்தேறுகின்றன. அதிலும் பெண்கள் சிறுமியாய் இருந்து குமரியாய் மாறும் அந்த பருவ மாற்றத்திற்கு அடிப்படையாய் அமைந்து, பெண்ணின் கடமைகளான மனைவி, தாய்மை என அனைத்தும் முடிந்தேறும் தருணம் வரை பெண்களின் உடலில் அப்பருவ மாற்றம் தொடர்கிறது; அப்படி தொடரும் பருவ மாற்றத்திற்கு மாதவிடாய் சுழற்சி என்று பெயர்.

இந்த பருவ மாற்றம் பெண் எனும் நிலையில் இருந்து முதுமை நிலை அதாவது மீண்டும் குழந்தையையொத்த நிலையை எட்டும் பொழுது பெண்ணை விட்டு நீங்கி விடுகிறது. இச்சுழற்சி சரியான நேரத்தில், சரியாக நடந்தால் தான் பெண்ணின் உடல் ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தம். இம்மாதவிடாய் சுழற்சி சீரற்றதாக இருந்தால் அது குழந்தை கருத்தரிப்பை பாதிக்குமா? சீரற்ற மாதவிடாய் சுழற்சி கொண்ட பெண்களால் கருத்தரிக்க முடியுமா என்று இந்த பதிப்பில் படித்து அறியலாம்.

பருவ நிகழ்வு
பெண்கள் குமாரி பருவத்தை அடையும் பொழுது அவர்களின் உடலில் உள்ள கருப்பை கருமுட்டையை கொண்டு, விந்துவிற்காக காத்து நிற்கும்; இது பெண்ணின் 12 அல்லது 13 ஆம் வயதில் ஏற்படும் மாற்றமாகும். இந்த பருவ நிகழ்வு ஒவ்வொரு மாதமும் 3 முதல் 5 நாட்கள் ஒரு சில பெண்களுக்கு அதற்கும் மேலாக கூட நிகழும்.

மாதவிடாய் சுழற்சி
ஒவ்வொரு மாதத்திலும் 21 நாட்களுக்கு அல்லது 36 நாட்களுக்கு ஒரு முறை என இந்த சுழற்சி நடக்கும்; இச்சுழற்சியில் கருப்பையில் அண்டத்தை வைத்து விந்துவிற்காக காத்திருக்கும் அந்த கருப்பை மற்றும் கருமுட்டை விந்து வந்து சேராமல் இருந்தால், தற்கொலை செய்து கொள்ளும் - அதாவது தயாராக இருந்த இரண்டும் இரத்தமாக பெண்ணின் உடலை விட்டு வெளியேறும்.
அடுத்த மாதம் திரும்பவும் ஆணின் விந்துவிற்காக காத்து நின்று, மரணிக்கும். இந்த நிகழ்வு பெண்ணின் உடலில் அவள் குமரிப்பருவம் எய்திய தருணம் முதல் முதுமை அடையும் தருணம் வரை தொடர்ந்து நடைபெறும்.

தாமதமான Vs சீரற்ற மாதவிடாய் சுழற்சி
பெண்ணின் உடலில் சீராக நிகழும் இந்த மாதவிடாய் சுழற்சி ஏதேனும் சில உடல் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக, உணவு காரணமாக, பெண் மேற்கொள்ளும் பழக்க வழக்கம் காரணமாக தடை பட்டு 21 நாட்களுக்கு ஒருமுறை நடக்க வேண்டிய சுழற்சி தள்ளிப்போய் 36 நாட்களுக்கு ஒருமுறை நடந்தால், அது தாமதமான மாதவிடாய் சுழற்சி என்றும், என்றாவது ஒரு நாள், ஏதேனும் ஒரு மாதம் என தொடர்ச்சியற்று நிகழ்ந்தால் அது சீரற்ற மாதவிடாய் சுழற்சி என்றும் அறியப்படுகிறது.

காரணங்கள்!
சீரற்ற மாதவிடாய் சுழற்சி பெண்களில் ஏற்பட சில முக்கிய காரணங்கள் உள்ளன; அவை என்னென்ன என்று இப்பொழுது பார்க்கலாம். ஹார்மோன் மாற்றங்கள், மனஅழுத்தம், உடல் எடை ஒரேயடியாக கூடுதல் அல்லது குறைதல், உணவு உட்கொள்ளும் முறைகள், தாய்ப்பால் அளித்தால், அதிகப்படியான உடற்பயிற்சி, பாலி சிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் எனும் நோய் - உடல் குறைபாடு, குண்டாதல் போன்ற காரணங்கள் - உடல் மாற்றங்கள் சீரற்ற மாதவிடாயை ஏற்படுத்துகின்றன.

சீரற்ற மாதவிடாயை கண்டறிவது எப்படி?
பெண்களின் உடலில் சீரற்ற மாதவிடாய் ஏற்பட்டுள்ளதை, மாதாமாதம் சுழற்சி ஏற்படும் நாளை நினைவில் வைத்து, அந்த தேதியில் இரத்தக்கசிவு ஏற்படுகிறதா என்று சோதித்து அறியலாம். மாதவிடாயின் முன் வயிற்றுவலி அல்லது முதுகுவலி போன்றவை ஏற்படும்; இந்த வலிகள் இருக்கின்றனவா என்று மாதாமாதம் கவனித்து அறியவும். மாதவிடாயின் பொழுது பெண்களுக்கு எரிச்சலான மனநிலை இருக்கும்; ஹார்மோன் மாற்றத்தால் உணர்வுகளில் பல மாற்றங்கள் நடக்கும்.
இந்த மாற்றங்களை எல்லாம் கூர்ந்து கவனித்து மாதவிடாய் சீரற்றதாக உள்ளதா இல்லையா என்று அறியலாம்.

கருத்தரிக்க முடியுமா?
மாதவிடாய் ஏற்படுவதே பெண்களின் உடலில் சரியாக கருமுட்டை உருவகி கருப்பைக்கு செல்கிறதா இல்லையா என்பதை உணர்த்த தான். பெண்ணின் உடலில் உருவாகும் அண்டம் கருப்பைக்குள் சென்றால் மட்டுமே ஆணின் விந்துவால் பெண்ணின் முட்டைக்குள் நுழைந்து புதிய முட்டையாக - கரு உருவாகும் முட்டையாக மாற்ற முடியும். எனவே சீரற்ற மாதவிடாய் இருந்தால் கருத்தரிப்பது கடினமே! அதே போல் தாமதமான மாதவிடாய் சுழற்சி ஏற்பட்டாலும் கருத்தரிப்பில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படலாம்.

எப்படி சரிசெய்வது?
பெண்களின் உடலில் தாமதமான அல்லது சீரற்ற மாதவிடாய் ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தால், அதை ஏற்படுத்திய காரணி எது என்று சரியாக ஆலோசித்து, மிகச்சரியான காரணத்தை கண்டறிந்து, அந்த காரணம் சரியாவதற்கான ஆவண செய்ய வேண்டும். உதாரணத்திற்கு உணவு முறையில் பிரச்சனை என்றால் சரியான உணவு முறையை பின்பற்ற வேண்டும்; பாலி சிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் பிரச்னை எனில் அதற்கான மருத்துவம் மேற்கொண்டு மருந்துகள் உண்டு, அந்த பிரச்சனையை சரிசெய்ய முயற்சிக்க வேண்டும்.
இவை போல் மாதவிடாய் சுழற்சியை தடை படுத்திய காரணத்தை தெளிவாக அறிந்து, அதற்கான - அதை சரி செய்யும் நடவடிக்கைகளை துரிதமாக எடுத்து மாதவிடாயை சீராக்க வேண்டும். இது குணப்படுத்தக் கூடிய பிரச்சனையே; மாதவிடாய் சரி ஆகி விட்டால், பின் கருத்தரிப்பதில் பிரச்சனைகள் இருக்காது!



Click it and Unblock the Notifications