Latest Updates
-
குருபகவான் உருவாக்கும் ஹன்ஸ் மகாபுருஷ யோகத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஆடிப் பெருக்கு ஸ்பெஷல் பாசிப்பருப்பு பாயாசம் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
இந்தியாவின் லண்டன் என்று அழைக்கப்படும் அழகிய நகரம் எது தெரியுமா? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
கோங்குரா முட்டை குழம்பு ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - ஹோடடலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
Aadi Perukku 2026: ஆடிப் பெருக்கு ஏன் கொண்டாடப்படுகிறது? ஆடிப் பெருக்கின் வரலாறும், முக்கியத்துவமும் -
கோலாப்பூரி மட்டன் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
செவ்வாய் இன்று மிதுன ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
சன்டே ஸ்பெஷல் செட்டிநாடு ஸ்டைல் மட்டன் உப்புக்கறி - எப்படி செய்றதுன்னு பாத்து உடனே ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 02 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப டென்ஷன் நிறைந்த நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (02 August 2026-08 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது!
பாதுகாப்பான சில கருக்கலைப்பு முறைகள்!!!
கருக்கலைப்பு என்றாலே நம்மில் பலருக்கு அலர்ஜி. திகிலோடும் பயத்தோடும் தான் அதனை நினைத்துப் பார்ப்பார்கள். உண்மையில், சரியான முறைகளைத் தேர்ந்தெடுத்துச் செய்தால், கருக்கலைப்பு என்பது மிகவும் பாதுகாப்பான மற்றும் எளிய செயல்முறையாகும். பல்வேறு காரணங்களால், பெரும்பாலான பெண்கள் பாதுகாப்பான கருக்கலைப்பு முறைகளைத் தேர்ந்தெடுப்பது இல்லை. பாதுகாப்பற்ற கருக்கலைப்பு முறைகளைத் தேர்ந்தெடுப்பதால், சில சமயங்களில், அவர்கள் தமது இன்னுயிரை இழக்கும் நிலை கூட ஏற்படுகிறது. நவீன கால மருத்துவ அறிவியல் மூலம் ஏராளமான, பாதுகாப்பான கருக்கலைப்பு முறைகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், சரியான முறையைத் தேர்ந்தெடுப்பது மட்டும் தான்.
பெரும்பாலான பெண்கள் தமது கருவை மருத்துவ ரீதியாக கலைப்பதற்காக மருத்துவரிடம் செல்வதற்கு தயக்கம் காட்டுவார்கள். இந்த மனோபாவத்தினால் அவர்கள் பல தவறான முறைகளைப் பின்பற்றி. அம்முயற்சிகள் தோல்வியடைவதுண்டு. ஆகவே உங்களுக்கு பாதுகாப்பான கருக்கலைப்பு நடைபெற வேண்டுமென்றால், தகுதியான மருத்துவரிடம் தான் சென்றாக வேண்டும். மருத்துவரிடம் மருத்துவ ஆலோசனை பெற்ற பின் தான், உங்களுக்கான பாதுகாப்பான கருக்கலைப்பு முறை எது என்பதை நீங்கள் தேர்ந்தெடுக்க முடியும். பாதுகாப்பான கருக்கலைப்பு முறை என்பது, உங்கள் வயிற்றில் வளரும் கருவின் வயதினைப் பொருத்தது.
கருவின் வயதினை அடிப்படையாகக் கொண்டு அதற்கேற்றாற் போல பல்வேறு கருக்கலைப்பு முறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நான்கு மாதங்கள், அதாவது 16 வாரங்கள் வயதுள்ள கருவினை மருத்துவ முறையில் கலைப்பது தான் மிகவும் பாதுகாப்பானதாகும். நீங்கள் இயற்கையான கருக்கலைப்பினைத் தேர்ந்தெடுக்க விரும்பினால், கருவின் வயதானது 8 வாரங்களுக்குள் இருக்க வேண்டும்.
பல்வேறு கருக்கலைப்பு முறைகளைப் பற்றிய குறிப்புகளைக் கீழே தருகிறோம். மேலும் அவை உங்களுக்கு எந்தெந்த வகைகளில் பாதுகாப்பாக இருக்கும் என்பதையும் கூடவே குறிப்பிட்டுள்ளோம்.

கருக்கலைப்பு மாத்திரை
ஏழு வாரங்களுக்குக் குறைவான வயதுள்ள கருவினைக் கலைக்க வேண்டுமானால், கருக்கலைப்பு மாத்திரைகளை உட்கொள்வது சிறந்தது. இம்முறையானது எந்த சிக்கலையும் உண்டு பண்ணாது. அதற்கு உங்களுடைய மருத்துவர் பரிந்துரைக்கும் ஹார்மோன் மாத்திரைகளை உண்டு வந்தால், இயற்கையாகவே கருச்சிதைவு ஆகிவிடும்.

மூலிகைகள் மூலம் கருக்கலைப்பு
பென்னிராயல் (Pennyroyal), கோஹோஷ் (Cohosh), ஏஞ்செலிகா (Angelica ) போன்ற சீன மூலிகைகள் இயற்கையான கருச்சிதைவினை உண்டாக்குகின்றன. இவற்றை நீங்கள் பருகும் தேநீரில் கலந்து, ஒரு நாளைக்கு மூன்று தடவைக்கு மிகாமல் பருக வேண்டும். இம்முறையானது சரியான பலனைக் கொடுக்க வேண்டுமென்றால், நீங்கள் ஏழு வாரத்திற்குக் குறைவாக, கர்ப்பமாக இருக்க வேண்டும்.

கருச்சிதைவுக்கு வழிவகுக்கும் பழங்கள்
ஐந்து வாரங்களுக்குக் குறைவான கர்ப்பத்தினைக் கலைப்பதற்கு குறிப்பிட்ட சில பழங்களைப் பயன்படுத்தலாம். இவற்றை உண்டால், உடனடியாக கருச்சிதைவு ஏற்பட்டுவிடும். பப்பாளியும், அன்னாசியும் இயற்கையான கருச்சிதைவினை ஏற்படுத்தும் பழங்களாகும். ஆனால் இப்பழங்களை உண்டு வந்தால், கருச்சிதைவு நடக்கும் என்பதற்கு 100% உத்தரவாதம் இல்லை.

கருவினை உறிஞ்சி எடுத்தல் (Suction)
8 முதல் 12 வாரம் உள்ளவர்கள், கருவினை உறிஞ்சும் பம்பு வைத்து உறிஞ்சி எடுக்கும் முறை பின்பற்றப்படுகிறது. கருப்பையினுள் வளரும் கருவினை உறிஞ்சும் பம்பு மூலம் உறிஞ்சி எடுத்து அகற்றுவார்கள். கை தேர்ந்த பதிவு பெற்ற மருத்துவர்களால் மட்டுமே இம்முறையை வெற்றிகரமாகச் செய்து முடிக்க முடியும்.

கருவைச் சுரண்டிச் சுத்தம் செய்தல் (Curettage)
நான்கு மாதக் கரு அல்லது 16 வாரக் கருவினை நீக்குவதற்கு பெண்களுக்குப் பாதுகாப்பான முறை இதுவாகும். இது ஒரு அறுவை சிகிச்சை முறையாகும். கியூரெட் (curette) என்னும் கருவி மூலம் கருப்பையினுள் வளரும் கருவானது சுரண்டிச் சுத்தம் செய்யப்படும். கைதேர்ந்த பதிவு பெற்ற மருத்துவர்களால், அறுவை சிகிச்சை அரங்கில் மட்டுமே, இம்முறையை வெற்றிகரமாகவும், பாதுகாப்பாகவும், செய்து முடிக்க முடியும்.

அறுவை சிகிச்சை
உங்களுக்கு ஏற்பட்டிருப்பது கருப்பைக்கு வெளிப்புறத்தில் ஏற்பட்ட கர்ப்பமாக (ectopic pregnancy) இருந்தால், அறுவை சிகிச்சை மட்டுமே சிறப்பான தீர்வாக இருக்கும். இந்த வகையான கர்ப்பத்திற்கு மற்ற சாதாரண கருக்கலைப்பு முறைகள் அவ்வளவாக பாதுகாப்பாக இருக்காது. ஏனெனில், உங்களது ஃபெல்லோப்பியன் குழாயானது அறுவை சிகிச்சை மூலம் வெட்டப்பட்டு, அங்கு உருவாகியிருந்த கருவானது நீக்கப்பட வேண்டியிருக்கும்.

முன்னதாகவே பிரசவிக்கச் செய்தல் (Induced Early Labour)
கருவுற்ற பெண்களது கருவினை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்து பார்க்கும் போது கருவானது பிறவிக் குறைபாடுகளுடன் இருப்பது தெரிய வந்தால் அல்லது சரியான அளவு வளரவில்லை என்று தெரியவந்தால், 4 அல்லது 5 மாதங்களிலேயே, மருந்துகள் கொடுத்து, செயற்கையான பிரசவ வலியை உண்டாக்கி, குழந்தையைக் குறை மாதத்திலேயே பிரசவிக்கச் செய்து வெளியே எடுப்பார்கள்.

உப்பு விஷம் அளித்தல் (Salt Poisoning)
கருத்தரித்த இரண்டாவது மும்மாத பருவத்தில் (trimester) கருவில் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டால், இந்த முறை கையாளப்படும். கருப்பையினுள் பனிக்குடத்தில் உள்ள அம்னியாட்டிக் திரவத்துடன் கலக்கும் வண்ணம் சலைன் (saline) திரவமானது ஊசியின் மூலம் நேரடியாகச் செலுத்தப்படும். உப்பு கலந்த நீரால், கருப்பையினுள் இருக்கும் கருவானது இறந்துவிடும். அதன் பிறகு சிலமணி நேரங்களில் தாய்க்கு பிரசவ வலி ஏற்பட்டுவிடும். உப்பு நீருக்குப் பதிலாக வேறு வகையான மருந்துகளைப் பயன்படுத்தும் முறைகள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதால், இந்த முறையானது தற்போது பின்பற்றப்படுவதில்லை.



Click it and Unblock the Notifications