Latest Updates
-
ஜூன் 15-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
நாட்டுக்கோழி வாங்குனா கர்நாடகா ஸ்டைலில் இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
இந்த வாரம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்காம் -
200 பேர் மட்டுமே வாழும் இந்தியாவின் தனித்துவமான 8 கிராமங்கள் - இந்த கிராமங்களுக்கு போறதே ரொம்ப கஷ்டமாம் -
1 கப் அவல் இருந்தா ஈவ்னிங் டைம்ல இந்த பக்கோடாவை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 6 குணங்களில் ஒன்று உங்களுக்கு இருந்தாலும் உங்களுக்கு ஆயுள் ரொம்ப கம்மியாம் - ஜாக்கிரதை -
உருளைக்கிழங்கை இந்த மாதிரி கல்யாண வீட்டு ஸ்டைல் பால் கறி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
ஜூன் 28-ல் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 13 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நினைத்தது பலிக்கும் நாளாக இருக்குமாம்
குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் உடலில் தோன்றும் மச்சம் ஒரு தோல் நோயா?
இந்த பதிப்பில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவர்தம் உடலில் ஏற்படும் மச்சம் ஒரு தோல் நோயா? முக்கியமாக குழந்தைகளில் தோன்றுவது தோல் நோயா? என்பது பற்றிய தகவல்களை குறித்து படித்து அறியலாம்.
பொதுவாக மனிதர்களின் உடலில் மச்சம் தோன்றுவது இயற்கையாக நடக்கும் மாற்றம் ஆகும்; மச்சம் மட்டும் இன்றி மனிதர்களின் உடலில் தோன்றும் பிறப்புக்குறிகள், மருக்கள் அனைத்துமே இயற்கையாக அல்லது நாம் மேற்கொண்ட பழக்க வழக்கங்களால் ஏற்பட்டவையாக கூட இருக்கலாம். இவை அனைத்தும் பிறக்கும் பொழுது தான் ஏற்பட வேண்டும் என்பதில்லை; மனிதர்களின் வாழ்நாளில் எந்த நேரத்திலும், அக்காலத்திலும் மனித உடலின் எந்த பாகத்தில் வேண்டுமானாலும் தோன்றலாம். மனித உடலில் நமக்கு தெரியாமல் சிறு சிறு மாற்றங்களும் வளர்ச்சிகளும் ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

இந்த பதிப்பில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவர்தம் உடலில் ஏற்படும் மச்சம் ஒரு தோல் நோயா? முக்கியமாக குழந்தைகளில் தோன்றுவது தோல் நோயா? என்பது பற்றிய தகவல்களை குறித்து படித்து அறியலாம்.

மச்சம் என்றால் என்ன?
மச்சம் என்பது மனித தோலின் ஒரு மாறுபாடே. இது உடலில் காணப்படும் மெலனின் நிறமியால் தோன்றலாம்; இதனை மெலனோமா என்று அழைப்பர். இந்த மச்சங்கள் மனித உடலின் எந்த பாகத்திலும், எந்தவொரு இடத்திலும் தோன்றலாம்; இது தோல் வளர்ச்சியின் ஒரு சிறிய மாற்றமே. மச்சம் மற்றும் பிறப்புக்குறிகள் அனைத்தும் தானாக ஏற்படுபவை; இதில் பிறப்புக்குறி என்பது பிறவியிலேயே உடலில் இருக்கும்; மச்சம் வாழ்நாளில் எப்பொழுது வேண்டுமானாலும் தோன்றும்; தோன்றிய மச்சங்கள் மறையவும் செய்யும்.

மச்சங்கள் பாதுகாப்பானது தானா?
உடலில் ஏற்படும் மச்சங்கள் பாதுகாப்பானது தானா என்றால், பெரும்பாலான நேரங்களில் இந்த மச்சங்கள் எந்தவித உடல் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் இதுவே அவை வளர்ச்சி அடைந்தாலோ, மச்சத்தின் அளவு மாறுபடுதல், மச்சத்தில் இரத்தம் கட்டிக் கொள்ளுதல், மச்சத்தில் இரத்தம் கசிதல் போன்ற மாற்றங்கள் ஏற்பட்டால் அப்பொழுது பாதுகாப்பான மச்சங்கள் கூட கண்டிப்பாக பாதிப்பை ஏற்படுத்தலாம்.

மச்சங்கள் வளருமா?
மச்சங்களின் தன்மையை பொறுத்து, எதனால் அந்த மச்சம் ஏற்பட்டது என்பதை பொறுத்து சிறிதாக உருவான மச்சங்கள், பின்னாளில் வளர்வதற்கு வாய்ப்புகள் உள்ளன; அதே போல் முன்பு தோன்றிய மச்சம் பின்னாளில் மறைந்து விடவும், அல்லது இதற்கு முன் இல்லாத புது மச்சம் உருவாகவும் வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த மச்சங்களின் செயல்பாடு ஒரு மந்திர ஜாலம் போல எப்பொழுதும் தோன்றும், எப்படி மறையும், எவ்வாறு வளரும் என்று யாராலும் நிச்சயமாக சொல்ல முடியாது.
இப்பொழுது எந்த மாதிரியான மச்சங்கள் ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பது குறித்து அடுத்தடுத்த பத்திகளில் படித்து அறியலாம்.

மச்சத்தின் தீவிர வளர்ச்சி
உடலில் தோன்றிய மச்சங்கள் திடீரென தீவிரமாக வளர்ந்து உடல் முழுவதும் பரவத் தொடங்கினால் கண்டிப்பாக மருத்துவரை பார்த்து சோதித்து அறிதல் அவசியம்; ஏனெனில் இது ஏதேனும் ஒரு தொழு நோயாக கூட இருக்க வாய்ப்பு உண்டு. அதே போல் உடலில் ஏற்பட்ட மச்சம் மெதுவாக ஆனால் தினந்தோறும் வளர்ந்து உடலின் மற்ற பாகங்களுக்கு பரவினாலும் கூட மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம்.

டூம் உருவம்
மச்சங்கள் உடலில் தட்டையாக தோன்றக்கூடியவை; இவற்றின் உருவம் தட்டையான வடிவத்தில் இருந்து அரை வட்டமாக அதாவது டூம் வடிவத்திற்கு மாறினால் அல்லது உடலில் ஏற்படும் மருக்கள் போன்ற மாற்றம் மாம்சத்தில் நிகழ்ந்தால் கண்டிப்பாக மருத்துவரை பார்த்து சோதித்து அறிதல் வேண்டும்.

இரத்தக்கசிவு
மச்சம் ஏற்பட்டுள்ள இடத்தில அல்லது மச்சமே சிலவாறு மாறுதல் அடைந்து, அதில் இரத்தக் கசிவு அல்லது இரத்தக்கட்டு போன்ற மாற்றங்கள் ஏற்பட்டால், கண்டிப்பாக உடனே மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் இது வேறு ஏதேனும் தோல் வியாதியாக அல்லது தோல் புற்றுநோயாக கூட இருக்கலாம். ஆகையால் கவனம் தேவை!

பெரிதான மச்சம்
உடலில் ஏதேனும் ஒரு இடத்தில் மச்சம் பெரிதாக ஏற்பட்டிருந்தால், இது மச்சம் ஏற்பட்டுள்ள இடத்தை பொறுத்து அதாவது மிகப்பெரிய மச்சம் கண்ணிற்கு அருகில் ஏற்பட்டு கண் பார்வை தடை பட்டால், இது போன்று முக்கியமான உறுப்புகளின் செயல்பாடுகளை பாதிக்கும் வகையில் பெரிய மச்சம் உடலில் ஏற்பட்டு இருந்தால், உடனே மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

ஆங்காங்கு மச்சம்
சில சமயங்களில் இதுநாள் வரை இல்லாமல் திடீரென உடலின் சில பகுதிகளில் அல்லது ஒரே பகுதியில் நன்கு திட்டு திட்டாக மச்சங்கள் ஏற்பட்டாலோ அல்லது ஏற்கனவே இருந்த மச்சங்கள் மாறுபாடு அடைந்தாலோ உடனே மருத்துவ ஆலேசனையை மேற்கொண்டு உடலின் நலம் பற்றி அறிய வேண்டும். ஏற்பட்ட மாற்றம் சாதாரணமானதா இல்லை அசாதாரணமானதா என்பதை அறிந்து அதற்கு ஏற்ற தக்க சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications