Latest Updates
-
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா?
ஆண் குழந்தைகளுக்கான 15 மாடர்ன் மற்றும் ஸ்டைலிஷ் பெயர்கள்!
குழந்தைகளுக்கு பெயரை தேர்வு செய்து, பேர் சூட்டுவது என்பது சற்று கடினமான விஷயமே! உங்கள் வீட்டு ஆண் குழந்தைகளுக்கான 10 மாடர்ன் மற்றும் ஸ்டைலிஷ் பெயர்களை இங்கு காணலாம்!
குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவது என்பது, குழந்தையை பெற்று எடுத்ததை விட கஷ்டமான காரியமாக பெற்றோர்கள் நினைக்கின்றனர். அதற்கு காரணமும் உண்டு! யாருக்கும் வைக்காத, யாரும் வைக்காத, வித்தியாசமான - வாயில் நுழையக்கூடிய பெயராக, ஆனால் மாடர்னாக, ஸ்டைலாக இருக்கும் பெயரை குழந்தைக்கு சூட்ட வேண்டும் என்பதே ஒவ்வொரு பெற்றோரின் ஆசை!

பார்த்தீர்களா? எத்தனை விஷயங்களை குறித்து யோசித்து பெற்றோர் பெயர் வைக்க வேண்டியதாய் இருக்கிறது; மேலும் குழந்தையாய் இருக்கும் பொழுது வைத்த பெயர், நாளை வளர்ந்த பின் குழந்தைக்கு பிடிக்க வேண்டும்; ஏன் எனக்கு இந்த பெயரை வைத்தீர்கள் என்று குழந்தை கேள்வி கேட்கும் அளவிற்கு இல்லாமல் சரியான- புதிதான பெயரை வைப்பது பெற்றோரின் கடமையாகும்!
இந்த பதிப்பில், உங்கள் வீட்டு ஆண் வாரிசுகளுக்கான மாடர்ன் மற்றும் ஸ்டைலிஷ் பெயர்களை இந்த பதிப்பில் படித்து அறியலாம், வாருங்கள்!

Danish - தானிஷ்
தானிஷ் என்னு பெயர் கருணை வாய்ந்த, அறிவாளி, மன்னிப்பு தரக்கூடிய மனம் கொண்டவர் என்ற பொருளை தருகிறது; இந்த பெயரை குழந்தைகளுக்கு சூட்டினால், அது அவர்களின் குணநலன்களை பெயரின் அர்த்தத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கும் என்றே கூறலாம். மேலும் இது அழகான- ஸ்டைலான பெயராக உள்ளது; கூப்பிடவும் ஏற்றதாக இருக்கிறது.

Abimanth - அபிமந்த்
அபிமந்த் என்னும் பெயருக்கு மகிழ்ச்சியை பரப்பக்கூடியவர், மகிழ்ச்சி ரேகை கொண்டவர் என்று அர்த்தம். குழந்தைக்கு இந்த பெயரை சூட்டினால், வாழ்வில் குழந்தையும் மகிழ்ச்சியாய் இருந்து, மற்றவரையும் மகிழ்ச்சிப்படுத்தும். மேலும் இது பாரம்பரியம் கலந்த மாடர்ன் பெயராக உள்ளது; குழந்தைகளை பெயர் சொல்லி அழைக்கவும் நன்றாக இருக்கும்.

Daiwik - தெய்விக்
குழந்தை தெய்வாம்சத்துடன் என்றென்றும் இருக்க எண்ணினால், இந்த பெயரை குழந்தைக்கு சூட்டலாம். தெய்விக் எனும் பெயர், குழந்தை தெய்வாம்சம் கூடியவன் என்ற பொருளை தருகிறது; குழந்தைக்கு சூட்ட ஏற்ற பெயர்.

Hariaksh - ஹரியக்ஷ்
ஹரியக்ஷ் எனும் நாமம் சிவனுக்கு வழங்கப்படும் பல பெயர்களில் ஒன்று; குழந்தைக்கு சிவனின் அருள் கிடைக்க விரும்பினால், நீங்கள் சிவ பக்தராய் இருந்தால், இந்த பெயரை குழந்தைக்கு சூட்டி மகிழலாம்.

Harin - ஹரின்
ஹரின் எனும் பெயருக்கு தூய்மை, வேகமாக புகழை ஈட்டக் கூடியவர் என்று பொருள்; குழந்தை நிம்மதியான, அமைதியான வாழ்க்கை வாழ, குழந்தையின் வாழ்வு களங்கம் இல்லாமல் இருக்க இந்த பெயரை சூட்டலாம்; குழந்தை வாழ்வில் பெரும் புகழை விரைந்து ஈட்ட இப்பெயரின் அலைகள் உதவும்.

Joshith - ஜோஷித்
ஜோஷித் எனும் பெயருக்கு மகிழ்ச்சியுடனும், சந்தோஷத்துடனும் ஜோரான வாழ்க்கை மேற்கொள்பவர் என்று பொருள்; குழந்தையின் வாழ்வில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் ததும்பி வழிய இந்த பெயரை சூட்டி மகிழலாம்.

Praveer - பிரவீர்
பிரவீர் எனும் பெயரைக் கொண்ட நபர் மிகவும் தைரியமானவர் என்று அறியப்படுகிறது; உங்கள் குழந்தை வாழ்வில் தைரியமாக செயலாற்ற, வாழ இந்த பெயரை சூட்டலாம்; தன் பெயரின் அர்த்தமே குழந்தையை ஆட்டோமேட்டிக்காக தைரியமாக்கி விடும்.

Rathik - ரதிக்
ரதிக் எனும் பெயர் விருப்பத்திற்கு உரியவர், இதயத் திருடர் என்ற அர்த்தங்களை தருகிறது. இந்த பெயர் கொண்ட நபர், காண்போர் அனைவரின் இதயங்களையும் கவரக் கூடியவராக இருப்பர்; எல்லோரும் தங்கள் அன்பை இந்த பெயர் கொண்ட நபருக்கு வாரி வழங்குவர். குழந்தைகளுக்கு சூட்ட ஏற்ற பெயர் இது!

Sharin - ஷரின்
ஷரின் எனும் பெயர் உதவிக்கரத்தை எங்கும், எப்பொழுதும் அளிக்க கூடியவராக இருப்பவர்; உங்கள் குழந்தை தனது குடும்பத்திற்கு மட்டுமல்லாமல், அனைவருக்கும் உதவக் கூடியவராக இருக்க வேண்டும் என்று விரும்பினால், இந்த பெயரை தாராளமாக உங்கள் குழந்தைக்கு சூட்டலாம்.

Vyaan - வியான்
வியான் எனும் நாமம் வாழ்க்கையின் முக்கிய விஷயமான, வாழ்வதற்கு முக்கியமான மூச்சு போன்றவர், கொடைக்குணம் கொண்டவர் என்ற பொருள்களை தருகிறது. இந்த பெயரை குழந்தைக்கு சூட்டினால், வித்தியாசமானதாக, ஆழ்ந்த அர்த்தத்தை கொண்டதாக இருக்கும்.

Yajwan - யஜவான்
யஜ்வான் எனும் பெயர் அமைதி மற்றும் நிம்மதி என்ற அர்த்தங்களை தரக்கூடியது; உங்கள் குழந்தை அமைதியான, நிம்மதியான வாழ்க்கை வாழ விரும்பினால், இந்த பெயரை குழந்தைக்கு சூட்டி மகிழலாம்.

Lagan - லகான்
லகான் எனும் பெயர் சம்ஸ்கிருதத்தை சார்ந்த பெயர்; இந்த பெயருக்கு அன்பு, அரவணைப்பு, அக்கறை போன்ற அர்த்தங்கள் உண்டு. குழந்தை அன்பான - பண்பான நபராக வாழ்வில் விளங்க இந்த பெயரை நீங்கள் குழந்தைக்கு சூட்டி மகிழலாம்.

Pranay - பிரணய்
பிரணய் எனும் பெயர் அன்பு, உள்ளார்ந்த பாசம் போன்ற அர்த்தங்களை தரக்கூடியது. இந்த பெயர் உங்கள் குழந்தைகளுக்கு சூட்ட மிகவும் ஏற்ற ஒன்று. மேலும் இது சற்று வித்தியாசமான பெயராகவும் திகழ்கிறது.

Vihaan - விஹான்
விஹான் எனும் பெயருக்கு உதய சூரியன், சூரியன் உதிக்கும் தருணம் என்ற பொருள்களை தருகிறது. இந்த பெயரை குழந்தைக்கு சூட்டினால், எந்தவொரு தோல்வியில் இருந்தும் மீண்டு எழும் நபராய், சூரியன் போல எல்லோருக்கும் ஒளிவீசக் கூடியவனாய் குழந்தை திகழ்வான். குழந்தைகளுக்கு சூட்ட ஏற்ற பெயர் இது!

Ryan - ரியான்
ரியான் என்றால், குட்டி அரசர் அதாவது ஆங்கிலத்தில் லிட்டில் கிங் என்று பொருள் தரக்கூடியது. உங்கள் வீட்டின் செல்ல வாரிசு ஒரு அரசர் போல வாழ வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருந்தால், இந்த பெயரை சூட்டலாம்; அரசர் என்றால் அதற்குரிய பொறுப்பும் அறிவுத்திறனும் குழந்தைக்கு தானாகவே வந்து சேர்ந்து விடும்.



Click it and Unblock the Notifications