Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
உங்கள் பெண் குழந்தைகளுக்கான லேட்டஸ்ட் தமிழ் பெயர்கள்!
பெயர் தான் ஒருவரின் முதல் முகவரி; பெண் குழந்தைகளுக்கான லேட்டஸ்ட் பெயர்கள் என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு பெயர் வைப்பது என்பதை ஒரு கலை என்று தான் கூற வேண்டும். இன்று பிறந்த குழந்தைகளுக்கு, அவர்களின் நாளைய எதிர்காலத்தின் ஒரு மிகப்பெரிய அடையாளமாக மாறவிருப்பது இன்று பெற்றோர் சூட்டும் பெயர் தான். பெயரால் தான் மற்றவரால் நாம் அறியப்படுகிறோம்; மற்றவர்களிடம் இருந்து நம்மை உருவம் வேறுபடுத்திக் காட்டினாலும் நம்முடைய பெயர் மற்றவரில் இருந்து வேறுபட்டு தனித்துவம் கொண்டு விளங்கினால், அதுவே ஒருவித நம்பிக்கையை நம் நெஞ்சங்களில் விதைக்கும்.

இந்த பதிப்பில் உங்கள் வீட்டு இளவரசிகளுக்கு நல்ல அழகான தமிழ் கலந்த லேட்டஸ்ட் பெயர்களை வைக்க சில பெயர் ஐடியாக்கள் அவற்றின் அர்த்தங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளன, படித்து குழந்தைகளுக்கு பெயர் சூட்டி பயனடையவும்.

ஆத்மிகா
ஆத்மிகா எனும் பெயர் கொண்ட குழந்தைகள் மற்றவரின் ஆத்மாவோடு தங்களுக்கென ஒரு பணத்தை உருவாக்கிக் கொண்டு, எளிதில் அனைவர்க்கும் பிடித்த ஒரு குழந்தையாக மாறி விடுவர். இந்த பெயர் கொண்ட குழந்தைகளிடம் பிறரை அன்பால் கவர்ந்திழுக்கும் சக்தி நிறைந்திருக்கும். இது குழந்தைகளுக்கு சூட்ட மிகவும் ஏற்ற பெயர்; புதுமையானதும் கூட.

தயந்தா
இது மிகவும் அரிதாக சூட்டப்பட்ட பெயர்; அதிலும் பெண் குழந்தைகளுக்கு இப்படி ஒரு பெயர் இருப்பதை பெரும்பாலான மக்கள் அறிந்திருப்பதில்லை. இந்த பெயர் கொண்ட குழந்தை அறிவுள்ள மற்றும் பண்புள்ள குழந்தையாக அறியப்படுகிறது. குழந்தைகள் அறிவில் சிறந்து விளங்க இந்த பெயரை சூட்டலாம்.

ஹர்திகா
ஹர்திகா எனும் பெயர் குழந்தைகளுக்கு அன்பையும் அக்கறையும் வாழ்க்கைப்படமாய் புகட்ட சூட்டப்படுவது ஆகும். இந்தப் பெயர் சூட்டப்பட்ட குழந்தைகள் மனதில் அன்பும் அரவணைப்பும் நிறைந்தவர்களாய் வளர்ந்து வருவர்; அன்பே சிவம் என்ற அன்பு மற்றும் அகிம்சை முறையில் வாழ்க்கையை வழி நடத்தி வெற்றி காண்பர்.

க்ருபாளி
க்ருபாளி என்ற பெயருக்கு மன்னிப்பால் அருள் பாலிப்பவர் என்ற பொருள் உண்டு; இந்த பெயரை கொண்ட குழந்தைகள் மனதில் மன்னிக்கும் தன்மை கொண்டு, பக்குவத்துடன் வளர்ந்து வருவர். இவர்களால் எந்த ஒரு கெடுதலையும் எளிதாக ஏற்றுக்கொண்டு, அதை மன்னித்து மனதில் வெறுப்பு, வருத்தம் மற்றும் வஞ்சம் இன்றி மகிழ்ச்சியாக வாழ முடியும்.

மஹிகா
இந்தப் பெயருக்கு காலை நேர பனித்துளியை போன்ற தூய்மையும் பரிசுத்தமான குணம் கொண்டவர் என்று பொருள். இந்த பெயரைக் கொண்ட குழந்தைகள் தவறு, களங்கம் போன்ற எந்தவொரு தீய செயலையும் செய்யாது, மிகவும் நேர்மையான மற்றும் தூய்மையான முறையில் வாழ்க்கையை நடத்துபவர் என்று பொருள். இது குழந்தைகளுக்கு சூட்டுவதற்கு ஒரு நல்ல பெயர்; இது சற்று வித்தியாசமானதும் கூட.

நிரலி
இந்த பெயருக்கு இவரை போல் வேறொருவர் இல்லை என்பது பொருள், அதாவது இந்த பெயர் கொண்ட குழந்தையை போல வேறு யாரும் இல்லை; இந்தக் குழந்தைக்கு நிகர் அக்குழந்தையே! வேறு யாரும் இலர் என்று பொருள்; இந்த தனித்துவமான பெயரை உங்கள் குழந்தைகளுக்கு சூட்டி, அவர்களின் வாழ்வில் ஒரு தனித்தன்மையை ஏற்படுத்துங்கள்!

ப்ரீஷா
இந்தப் பெயரின் பொருள் கடவுள் மனிதர்களுக்கு கொடுத்த பரிசு என்பதாகும். லாடவுள் உங்கள் வாழ்வில் உங்களுக்கு பரிசாக அளித்த குழந்தைக்கு கடவுளின் பரிசு என்ற இந்த பெயரை சூட்டி, அக்குழந்தையை மேலும் உன்னதமாக்குங்கள்! இது மிகவும் தனித்துவமான பெயர் தான்!

விருஷ்தி
முதல் மழைநீரின் வேகமும் பரிசுத்தமும் சக்தியும் கொண்டவர் என்பது தான் இந்த பெயரின் பொருள். இந்த பெயரை குழந்தைகளுக்கு சூட்டினால், வாழ்வில் என்றும் எப்பொழுதும் பரிசுத்தமாக இருந்து வாழ்க்கையை வெல்வர். மேலும் உதவி என்று கேட்பவர்களுக்கு மழை சமயத்தில் வந்து உதவுவது போல், இவரின் உதவும் குணமும், இவரிடம் பிரச்சனை புரிவோருக்கு மழையால் ஏற்படும் வெள்ளம் போன்ற அபாய பரிசும் கிடைக்கும்.

யாஷ்வி
தனது வாழ்க்கையில் பெரிய பெரும், வான் நிறைய புகழும் பெறப்போகும் அந்த ஒரு நபருக்கு சூட்டப்பட வேண்டிய பெயர் இது. இதை உங்கள் குழந்தைகள் வாழ்வில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்று நினைக்கும், ஆசைப்படும் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு சூட்டி மகிழவும்.

வஹீதா
இந்தப் பெயருக்கு தனித்துவமான அழகு கொண்டவர் என்று பெயர்; உங்கள் குழந்தையிடம் தனித்துவமான தெய்வ ஒளி தென்பட்டால் இந்த பெயரை சூட்டுங்கள். குழந்தைகள் அழகில் மட்டும் இன்றி, அனைத்திலும் தன் தனித்துவத்தை காட்டி வெற்றி பெறுவர்.

வன்யா
இந்தப் பெயருக்கு கடவுள் தனக்கே கொடுத்துக் கொண்ட பரிசு என்று பெயர். இந்தப் பெயரை உங்கள் குழந்தைக்கு சூட்டினால், கடவுளின் அருளோடு அவரது பரிசு குழந்தையாய் மாறி, கடவுளின் அனுக்கிரகம் முழுதாக கிடைக்கும். கடவுள் தனது பரிசை பத்திரமாக பார்த்துக் கொள்வது போல, உங்கள் குழந்தையை பார்த்துக் கொள்வார்.

தன்வீ
தன்வீ எனும் பெயர் கொண்ட குழந்தைகள் மிகவும் அழகான உருவம் மற்றும் உள்ளம் கொண்டவர்கள். இவர்கள் எந்தவொரு செயலை செய்தாலும் அதில் அழகு வெளிப்பட செய்வர். குழந்தைகள் வாழ்வில் கடவுள் அருளோடு அழகும் நிறைந்து அழகான வாழ்க்கை மேற்கொள்ள இந்த பெயரை சூட்டுங்கள்!

ஸ்வரா
இந்தப் பெயர் இசையின் அடித்தளம் என்று பொருள் கொண்டது; இசையின் அடித்தளம் ஸ்வரங்கள் மற்றும் ராகங்கள் தான். உங்கள் குழந்தை இசையில் மிகப்பெரிய ஆளாக உருவாக வேண்டும் என்றால் இந்தப் பெயரை உங்கள் குழந்தைக்கு சூட்டி மகிழுங்கள்!

ருபாக்ஷி
இந்தப் பெயருக்கு இன்று குழந்தையாக உள்ள இவள் நாளை ஒரு அழகிய அகம் மற்றும் புறத்தோற்றம் கொண்டவளாக உருவெடுப்பாள் என்பது பொருள். அதாவது குழந்தையின் வளர்ச்சி அழகான பாதையில் எந்தவித தடைகளும் முள்களும் இன்றி மலர்ப்பாதை போல் அமைந்து, வாழ்வில் அரிதற்கரிய செயல்களை அசால்ட்டாக செய்து முடிப்பார், இந்த பெயர் கொண்ட குழந்தை!

கியரா
இது ஒரு மாடர்ன் மற்றும் லேட்டஸ்ட் பெயர். இந்த பெயருக்கு நன்கு நீளமான அடர்த்தியான முடியை கொண்டவர் என்பது பொருள். குழந்தைகளுக்கு நன்கு நீளமான அல்லது அடர்த்தியான முடி இருந்தால், ஒரு புதுமையாக இருக்கும் வண்ணம் இந்த பெயரை குழந்தைக்கு சூட்டலாம்.
குழந்தையின் அடையாளத்தை அதன் வாழ்க்கை அடையாளமாக மாற்றும் கலையை பெயர் வைக்கும் முறை மூலமாக உங்கள் குழந்தைகளுக்கு உணர்த்த முயலுங்கள்!



Click it and Unblock the Notifications











